சித்தர்களின் மாந்திரிக பயன்பாடுகளின் வரிசையில் இன்று “தம்பனம்” என்கிற கலையினை நம் முன்னோர்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர் அருளிய அகத்தியர் 12000 என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
தம்பனம் அல்லது ஸ்தம்பனம் என அழைக்கப்படும் இந்த கலைக்கு கட்டுதல் என நேரடி பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றினை கட்டி அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்வதே தம்பனம் என அறியப் படுகிறது. ஆய கலைகள் என அறியப் படும் அறுபத்தி நான்கு கலைகளில் கூட எட்டு வகையான தம்பனங்களைப் பற்றி கூறப் பட்டுள்ளது.
இந்த தம்பனக் கலையை பயன்படுத்தி தேவையானவர்களுக்கு தீர்வு தரும் முறையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
தானென்ற தாம்பிரத் தகடுதன்னில்
தயவாக நமசிவய வென்றே மைந்தா
செம்மையுடன் மானிடர்க்குக் கட்டினாக்கால்
ஊனென்ற தேகமதில் நோய்களெல்லாம்
ஓடுங்கியே தம்பித்து ஓடிப்போகும்
வானென்ற லோகத்தில் அவனைக் கண்டால்
மனதடங்கி தம்பித்து வசமாவாரே.
தாமிரத்தாலான தகடு ஒன்றினை எடுத்து அதில் சிவ மந்திரமான "நமசிவய "என்ற எழுத்துக்களை எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த தாமிரத்தகட்டை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து தம்பன மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.
செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் தம்பித்து ஓடிவிடுமாம். அத்துடன் இந்த யந்திரத்தை அணிந்தவர்களை காண்போர் தம்பித்து வசமாவார்கள் என்றும் சொல்கிறார்.
தம்பனம் மூல மந்திரம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
நாளைய பதிவில் உச்சாடனம் எவ்வாறு பயன்பட்டது என்பதைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment
5 comments:
Nice Post
Nice Post
THANKS 4 YOUR POST
na itha try pannalaama?
அன்புள்ள தோழிக்கு எடுத்துக்காட்டாக ஒரு தகட்டினை காட்டவும்.
Post a Comment