காடி - "சூரிய பக்குவக் காடி"

Author: தோழி / Labels: ,


காடி பற்றிய அறிமுகம் மற்றும் அதன் மூன்று வகைகளை நேற்றைய பதிவில்  பார்த்தோம். இன்று முதல் வகையான சூரிய பக்குவ காடி பற்றி பார்ப்போம்.

ஒரு படி பச்சரிசியை ஆற்றுநீர் விட்டு 6 அல்லது 7 தடவைகள் கழுவி நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை சமையல் பாத்திரத்தில் இட்டு, அரிசிக்கு மேல் நான்கு அங்குலம் நிற்கும் படி ஆற்று நீரை ஊற்ற வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி பொங்கி பக்குவமாய் சமைத்து எடுக்க வேண்டும்.

சமைத்த  சூட்டுடன் சோற்றுக் கலவையை ஒரு மண் பானையில் கொட்டி, அத்துடன் இருபது படி ஆற்று நீர் ஊற்றி மூடியிட்டு மூன்று நாள் வெய்யிலில் வைக்க வேண்டும். நான்காம் நாள் பானையில் இருக்கும் சோற்றுக் கலவையை நன்றாயப் பிசைந்து, நீரை வடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த நீர் கொள்ளும் அளவில் நான்கு பெரும் பானைகளை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.வடி கட்டிய சோற்று நீரை முதல் பானையில் ஊற்றி வாய்க்கு வேடு கட்டி வெய்யிலில் வைக்க வேண்டும்.  (வேடு கட்டுதல் என்பது பானை வாயை துணியினால் மூடிக் கட்டுவதே ஆகும்)

மறுநாள் அந்த நீரை இரண்டாவது பானையில் ஊற்றி வாய்க்கு வேடு கட்டி முன் போலவே வெய்யிலில் வைக்க வேண்டும். முதல் தடவை நீரை ஊற்றி வைத்திருந்த பானையை வெய்யிலில் ஈரம் வற்ற உலர்த்தி கொள்ளல் வேண்டும். மூன்றாம் நாள் மூன்றாம் பானையில் ஊற்றி முன் போலவே வாய்க்கு வேடு கட்டி வெய்யிலில் வைக்கவேண்டும்.

இரண்டாவதாக நீரை வைத்திருந்த பானையையும் வெய்யிலில் ஈரம் வற்ற உலர வைக்க வேண்டும். நான்காம் நாள் நான்காவது பானைக்கும் ஊற்றி வெய்யிலில் வைக்க வேண்டும். ஐந்தாம் நாள் முதலாவது பானைக்கு நீரை மாற்றி வெய்யிலில் வைக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு பானையாக மாற்றி மாற்றி ஊற்றி ஊற்றி வெயிலில் வைத்து வர வேண்டும். அப்போதைக்கப்போதே அந்தந்த பானைகளையும் வெய்யிலில் வைத்து கொஞ்சமும் ஈரமில்லாமல் உலர்த்தி வரவேண்டும். 

இவ்வாறு 40 நாட்கள் செய்த பின்னர் பின்னர் எஞ்சியிருக்கும் அந்த நீரை கண்ணாடிக் குப்பிகளில் அடைத்து மூடியிட்டு ஆறுமாதம் வைத்திருந்து எடுத்தல் வேண்டும். இதுவே சூரிய  பக்குவ காடி நீராகும். தேவைக்கேற்ப இதனை பயன் படுத்திடலாம்.

புழுப் பூச்சிகள் போன்றவை உருவாகாமல் இருக்க துவக்கத்தில் அரிசியில் சிறிதளவு கற்சுண்ணம் சேர்த்து விட வேண்டும். 

நாளைய பதிவில் தீ பக்குவ காடி தயாரிக்கும் முறையினை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

9 comments:

Rajakumaran said...

what is usage?

நாடி நாடி நரசிங்கா! said...

what is the use :)

தோழி said...

மருந்துகள் தயாரிப்பதிலும், இரசவாதத்திலும் காடி நீர் பயன்படுத்தப் படுகிறது.

raja said...

Great no words.....

அற்ப்புதம் அற்ப்புதம் புகழ வார்த்தைகளே இல்லை........

இதை எத்தனை நாட்கள் வேண்டும்மானாளும் வைத்திருக்கலாமா.... தோழி!!!

தோழி said...

@raja

முறையாக பராமரித்தால் ஒரு முறை தயாரித்த காடி நீரை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

raja said...

நன்றி தோழி....

பராமரிப்பது என்றால் தனியாக வேறு ஏதேனும் செய்ய வேண்டும்மா...அல்லது கண்ணாடி பாட்டில்ல மூடி வைத்து சுத்தமாக பயன்படுத்தினால் போதுமா..

raja said...

தோழி மேலும்,

நத்தை சூரி விதையை தினமும் மாலையில் சாப்பிட்டுவறேன்....இதற்கு ஏதேனும் காள அவகாசம் உண்டா....அதாவது இத்தனை நாட்கள்தான் சாப்பிடவேண்டும் என்று.....

Unknown said...

@raja
நண்பா
உங்களுக்கு நத்தை சூரி விதை எங்கு கிடைத்தது முடிந்தால் தகவல் கொடுக்கவும்
my email id : mmleosaravanan@gmail.com

raja said...

நண்பா,

பதில்.....கீழே உள்ள பதிவில் உல்லது......

http://www.siththarkal.com/2012/09/blog-post_21.html

Post a comment