ஆண், பெண் என பாகுபாடு இல்லாமல் உலகெங்கும் 40% மக்கள் மூல நோயினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. தற்போதைய நவீன மருத்துவத்தில் இந்த நோயினை முற்றாக தீர்க்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட. பலரும் தங்களுடைய பாதிப்பினை வெளியில் சொல்ல தயங்குவதினால் தகுதியான மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வேதனையோடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பதும் வருத்தமான உண்மை.
இனி வரும் நாட்களில் இந்த நோய் கூறினை பற்றியும், அதன் வகைகள், தன்மைகள் மற்றும் தீர்வுகளை தொகுத்துக் காண இருக்கிறோம். இந்த தொடரின் முதற் கட்டமாக நவீன மருத்துவம் மூல நோயினை எவ்வாறு அணுகி தீர்வுகளை முன் வைக்கிறது என்பதை அறிமுகமாய் தந்துவிட்டு, பின்னர் சித்தர் பெருமக்களின் தெளிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மூலம் பற்றிய விவரங்களை பார்ப்பதற்கு முன்னர், நாம் உட்கொள்ளும் உணவு நமது வயிற்றில் என்னவாகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கீழே கொடுக்கப் பட்டுள்ள ஒளித் துண்டு நமது குடலில் என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.
நாம் உட்கொள்ளும் உணவானது வயிற்றில் விழுந்து சிறுகுடலில் ஜீரணிக்கப் பட்டு தேவையான சத்துக்கள் உறியப் படுகிறது. ஜீரணிக்காத உணவுகள் பின்னர் பெருங்குடலுக்கு அனுப்பப் பட்டு அங்கு அதில் தேவையற்ற நீர் உறிஞ்ப் பட்டு பிசுபிசுப்பான நிலையில் மலம் பெருங்குடலின் ஒரு பகுதியில் தேஙக ஆரம்பிக்கும். இது நிரம்பும் போது மலமானது மலக்குடலுக்கு செல்கிறது. இந்த நிலையில்தான் நமக்கு மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு தூண்டப் படுகிறது.
பெருங்குடலில் வந்து சேர்ந்த ஜீரணமாகாத அல்லது எஞ்சிய உணவு எவ்வாறு மலமாகி வெளித்தள்ளப் படுகிறது என்பதனை கீழே உள்ள ஒளித்துண்டு எளிமையாய் விளக்குகிறது.
பெருங்குடலின் கடைசிப் பகுதியில் மலக்குடல் இருக்கிறது. இவை தொடர்ச்சியான சுருக்கு தசைகளினால் ஆனவை. இவை தொடர்ச்சியாக சுருங்கி விரிந்து மலத்தை உந்தி வெளித்தள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. ஆக, இப்படித்தான் நாம் உட்கொள்ளும் உணவானது ஜீரணமாகி தேவையான சத்துக்கள் உடம்பில் சேர்க்கப் பட்ட பின்னர் தேவையற்ற எச்சங்கள் மலமாக வெளியேற்றப் படுகின்றன.
எல்லாம் சரிதான்!, இதெல்லாம் நம் எல்லோருக்கும் இயல்பாய் நடப்பதுதானே!, இதில் மூலம் எங்கே வருகிறது என்ற கேள்விகள் இன்னேரத்திற்கு உங்களுக்கு வந்திருக்கும்.
Post a Comment
6 comments:
migavzum arrumaiyana aarambam valga valamudan
துன்பதோடு சங்கடத்தை உண்டு பண்ண கூடிய நோய்களில் ஒன்று.
இது வருவதற்கு தவறான உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணமாகும்.
கருணை கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதும்,கார கருணையை சூரணமாக செய்து,நெய்யில் குழைந்து சாப்பிடுவாதாலும் குணம் கிடைக்கும்.
மிக்க நன்றி !
சிறந்த பதிவு
நன்றி
Dear Thozzi,
In siddha medicine what we called
Yeast infection(Candidiasis) male or female
pls let me know and tretmnet too
naga paspam +theyrtankottai legiyam +rgm cap thodrnthu 15 days saapida nalla kunam theyrium by prabhu 9488472592
Post a Comment