"காடி", ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: ,

எளிய வகை காயகற்பங்களைப் பற்றிய தொடரின் ஊடே காடி பற்றிய குறிப்புகள் வந்த போது, நண்பர்கள் பலரும் அது குறித்து பின்னூட்டங்களிலும், தனி மின்னஞ்சலிலும் வினவியிருந்தனர். சிலர் ஒரு படி மேலே போய் காடி க்கு பதிலாக வினிகரை பயன் படுத்தலாமா என கேட்டிருந்தனர். 

நண்பர்களின் வேண்டு கோளுக்கிணங்க காடி பற்றிய விவரங்களை இனி வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். 

காடி என்றால் புளித்த நீர். இதனை பல வழிகளில், பல்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம். தேவையை பொறுத்து இந்த தயாரிப்பு முறைகள் மாறுபடும். எனினும் சித்த மருத்துவத்திலும் இரசவாதத்திலும் பெரும்பாலும் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் காடி நீரே பயன்படுத்தப்படுகிறது. 

அரிசியினைக் கொண்டு தயாரிக்கும் முறையினைப் பொறுத்து மூன்று வகையான காடி பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அவை முறையே "சூரிய பக்குவக் காடி", "தீ பக்குவக் காடி", "தீ, சூரிய பக்குவக் காடி" என்பதாகும்.

சூரிய பக்குவக் காடி 

இது வெய்யிலில் வைத்துப் பக்குவப்படுத்தி எடுக்கப்படும் முறை என்பதால் சூரிய பக்குவக் காடி எனப்படும். 

தீ பக்குவக் காடி 

இது தீயில் வைத்துப் பக்குவப்படுத்தி எடுக்கப்படும் முறை என்பதால் தீ பக்குவக் காடி எனப்படும்.

தீ, சூரிய பக்குவக் காடி 

இது தீயிலும், வெய்யிலிலும் வைத்துப் பக்குவப்படுத்தி எடுக்கப்படும் முறை. மிகவும் அரிதான ஒன்று என்பதாலும், மேலும் இதனை குருமுகமாக மட்டுமே அறிய வேண்டும் என்பதாலும் மேலதிக விவரங்களை இங்கே தவிர்த்திருக்கிறேன்.

இவ்வாறு மூன்று வகையாகத் தயாரிக்கப் பட்டாலும் அவற்றில் செயல்பாடு என்னவோ ஒன்றுதான்.

நாளைய பதிவில் சூரிய பக்குவ காடி தயாரிக்கும் முறையினை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

6 comments:

raja said...

மிக்க நன்றி தோழி.....அணைவரின் அன்பு வேண்டுகோளளை பூர்த்தி செய்தத்தற்கு!!!

அதேபோல் கரிசளையில் வெள்ளைய அல்லது மஞ்சளா என்பதை வேறு ஏதேனும் பாடல்கள் ஊடே கண்டறிந்து பகிற மிகவும்....தாழ்மையுடன் வேண்டி வணங்குகிறேன்

தோழி said...

@raja

கரிசாலை பற்றிய தகவல் கிடைத்தால் அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.

raja said...

நன்றி தோழி.....

bala said...

I am really wonder how can you get the details and interesting msg, i am also very interested in reading this type of things. thank you very much friend.

BALAJI said...

pls tell me how to reduce the spam counting
for avoid unnecessary pregnant

Divyabala said...

kindly tellme is there any medicine for polycystic ovary in siddha ...lakshmi

Post a comment