மூல நோய் - சிகிச்சை முறைகள்.

Author: தோழி / Labels:

மூல நோய் என்றால் என்ன, அது எதனால் உருவாகிறது, அதன் தன்மைகள், வகைகள், அறிகுறிகள், பரிசோதனைகள் ஆகியவை பற்றி தற்போதைய நவீன அலோபதி மருத்துவத்தின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று மூலநோய்க்கான சில சிகிச்சை முறைகளை பார்ப்போம்.

உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினை சீரமைத்துக் கொள்வதோடு, மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஆரம்ப நிலையில் உள்ள மூலநோய் பாதிப்பில் இருந்து எளிதில் குணம் பெறலாம். 

உள் மூலத்தினை பொறுத்த வரையில் பாதிப்புக்கு எத்தகையது, எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மருத்துவர் தெரிவு செய்கிறார். அலோபதி மருத்துவத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய சிகிச்சை முறைகள் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய பதிவில் அத்தகைய சில முறைகளின் ஒளித் துண்டுகளை இங்கே தொகுத்துத் தந்திருக்கிறேன்.

The Hemorrhoidal Artery Ligation and Recto Anal Repair Systems (HAL-RAR)Rubber band ligationSclerotherapy

மூல நோய் பாதிப்புக்குள்ளான பகுதியில் இருக்கும் இரத்த நாளங்களில் ஊசியின் மூலமாய் மருந்தை செலுத்துவதன் மூலம் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை தடை செய்வதன் மூலமாக மூல கட்டியின் வீக்கத்தை குறைத்து குணப்படுத்தும் முறையிது.

Infrared Coagulation Therapyஅறுவை சிகிச்சை முறைஇத்துடன் இந்த தொடரின் முதல் பாகம் நிறைவடைகிறது.

இனி வரும் நாட்களில் இந்த மூல நோய் குறித்த சித்தர் பெருமக்களின் தெளிவுகளையும் தீர்வுகளையும் பார்க்க இருக்கிறோம்.

குறிப்பு: இதுவரை இந்த தொடரில் இடம் பெற்ற படங்கள், ஒளித் துண்டுகள் யாவும் தொடர்புடைய நபர்களின் அனுமதியின்றியே இங்கே பகிர்ந்திருக்கிறேன். மூலநோய் குறித்த புரிதலை எளிமையாக்கவே இந்த படங்கள் மற்றும் ஒளித் துண்டுகளை பயன்படுத்த வேண்டி வந்தது. இது தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்து அதனை தெரிவித்தால் இந்த படங்களையும், ஒளித் துண்டுகளையும் நீக்கிவிட தயாராக இருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

3 comments:

B Thirunavukkarasu said...

Thanks Very Nice Info
http://healthtips4all.com/

tamilvirumbi said...

தோழி ,

தாங்கள் ஒரு சிறந்த மருத்துவர் என்பது உலகம் அறிந்ததே. ஆயினும் , தாங்கள் ,கடின உழைப்புடன் ,மூல வியாதிக்கான அணுகுமுறைகள் ,அதற்கான ,காரணங்கள் ,அதனை ,குண

படுத்துவதற்க்கான சிகிச்சை முறைகளை ,காணொளி உடன் விளக்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . தாங்கள் , மேலும் குறிப்பிட இருக்கும் ,சித்தர்களின் சிகிச்சை முறைகளை தெரிந்துகொள்வதற்கு ,காத்துக்கொண்டு இருக்கிறேன் .மீண்டும் நன்றிகள் உரித்தாகுக .

raja said...

முள் சீத்தா பழம் பற்றிய தகவல் மற்றும் அதன் மருத்துவ பலன்கள் பற்றி கூறவும்

Post a comment