நூற்றாண்டு வேம்பின் கற்பம்

Author: தோழி / Labels: , ,

எளிய வகை கற்பங்களின் வரிசையில், இன்று சட்டை முனி சித்தர் அருளிய கற்பவகை ஒன்றினை பார்ப்போம். நூற்றாண்டு கண்ட அல்லது கடந்த வேப்ப மரத்தின் பட்டையைக் கொண்டு செய்யும் இந்த கற்பம் "நூற்றாண்டு வேம்பு கற்பம்" எனப் படுகிறது. இந்தத் தகவல் சட்டை முனி சித்தர் அருளிய "சட்டைமுனி கற்பவிதி" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

ஆமப்பா யிதுகடந்து நூற்றாண்டின் வேம்பை
அப்பனே பட்டையைத்தான் வெட்டிவந்து
ஓமப்பா மேற்பரணை சீவிப்போட்டு
ஊத்தமனே நிழலுலர்த்தி யுலர்ந்தபின்பு
தாமப்பா விடித்துநன்றாய்ச் சூரணமே செய்து
சூதகமாய்க் கருங்குன்றிச் சாறுவார்த்து
தேமப்பா யேழுதிரம் பாவனை செய்து
திறமாக நிழலுலர்த்தா யுலர்த்திடாயே.

உலர்ந்த பின்பு யெட்டிலொன்று கற்கண்டுகூட்டி
உத்தமனே யிருகழஞ்சி யிருநேரங் கொள்ளு
மலர்ந்துநின் றலையாமல் மண்டலந்தான் கொள்ளு
மைந்தனே வயிரம்போ லிருகுந் தேகங்
கலந்துநின்ற நாடியெல்லா மிருகுமேறி
கண்துலக்க முண்டாகி அழுந்துந் தேகம்
நலந்திகழும் நரைதிரைகள் பிலமுங்கெட்டு
நமனுக்கு நமனாவான் நன்றாய்ப்பாரே.

நூறுவயதினைக் கடந்த வேப்பமரத்தின் பட்டையினை வெட்டி எடுத்து, அதன் மேற் பரணை சீவி நீக்கி விட்டு, சதைப்பகுதியை நிழலில் நன்கு  உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை சூரணமாக செய்து அதற்கு சம அளவில் கருங்குன்றிச் சாறு விட்டு வெய்யிலில் உலர்த்தி, மீண்டும் கருங்குன்றிச் சாறு விட்டு வெய்யிலில் உலர்த்த வேண்டும் இவ்வாறு ஏழு தடவைகள் செய்து சேமித்துக் கொள்ள வேண்டும். அந்த சூரணத்தில் இரு கழஞ்சி அளவு எடுத்து அதில் எட்டில் ஒரு பங்கு கற்கண்டு சேர்த்து அந்தி சந்தி என இரு வேளையாக ஒரு மண்டலம் உண்ன வேண்டுமாம்.

இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர தேகம் வைரம் போல் இறுவதுடன், எல்லா நாடிகளும் இறுகி, கண் பார்வை அதிகரித்து, நரை திரை நீங்கும் என்று சொல்கிறார். மேலும் இந்த கற்பத்தை உண்டவர்கள் எமனுக்கும் எமனாக இருக்கக்கூடியவர்கள் என்கிறார் சட்டைமுனி சித்தர்.

குறிப்பு: ஒரு மண்டலம் - 48 நாட்கள். ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும். அந்தி சந்தி என்பது சூரியன் உதயமாகும் மற்றும் மறையும் நேரத்தை குறிப்பதாகும். பகலும் இரவும் சந்திக்கும் பொழுதினையே அந்தி, சந்தி என குறிப்பிடுவர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

8 comments:

ஓம்போகர் said...

மிகவும் சிறப்பான தகவல் பகிர்வு.

சில நூற்றாண்டுக்கு முந்திய,வேம்பு போன்ற தெய்வீக தன்மை வாய்ந்த மரங்களில்,சிறு தெய்வங்களோ,அல்லது தேவ நிலை கன்னிகைகளோ,வாழ்வதற்கு வாய்ப்புண்டு.

எனவே இது போன்ற தெய்வீக மூலிகைகளை பயன்படுத்த,எடுப்பதற்கு முன்பு சரியான பூஜை முறைகளை செய்த பிறகே,எடுக்க வேண்டும்.பயன்படுத்த வேண்டும்.


www.ombhogar.blogspot.com
திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

S.Puvi said...

பகிர்விற்கு நன்றிகள்
100 வயதான வேம்பு மரத்தை எவ்வாறு இனங்காண்பது என்பதற்கான குறிப்புகள் இருந்தால் பகிருங்கள்.
நன்றி

Vinoth V said...

அய்யா நூறு வயது கடந்த வேம்பு மரம் பார்ப்பதற்கு அதன் அடிப்பகுதி கடினமான கணத்த பட்டைகளும் வலிமையான முடிச்சுக்களையும் மூறுக்கெரிய நரம்புகளையும் பெற்ற அகன்ற அடிப்பகுதியை பெற்றிருக்கும்

Vinoth V said...

அய்யா நூறு வயது கடந்த வேம்பு மரம் பார்ப்பதற்கு அதன் அடிப்பகுதி கடினமான கணத்த பட்டைகளும் வலிமையான முடிச்சுக்களையும் மூறுக்கெரிய நரம்புகளையும் பெற்ற அகன்ற அடிப்பகுதியை பெற்றிருக்கும்

MVS said...

நல்ல தகவல். நன்றி

MVS said...

நல்ல தகவல். நன்றி

karmegam.p Megam said...

Karungkunri enraal enna .photo kodungal

Post a Comment