எளிய காயகற்பம் - அதிமதுர அமுரி கற்பம்

Author: தோழி / Labels: ,

அதி மதுரம், தற்போது நம்மில் பலரும் மறந்துவிட்ட மூலிகை. இனிமையான சுவையும், குளிர்வு தன்மையும் கொண்ட இந்த மூலிகை, ஒரு செடி வகைத் தாவரம். இதன் தண்டு மற்றும் வேர்கள் மருந்தாக பயன்படுகிறது. இதற்கு அதிங்கம், இரட்டிப்பு மதுரம், அஷ்டி, மதூகம் என வேறு பல பெயர்களும் உண்டு.

எளிதில் கிடைக்கக் கூடியதும், விலை மலிவானதுமான இந்த அதிமதுரத்தைக் கொண்டு கற்பம் ஒன்றினை செய்யும் முறையினை புலஸ்தியர் அருளியிருக்கிறார். இந்த தகவல்கள் "புலஸ்தியர் கற்பம் 300" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

அனல்கொண் டதுதான் அகலவுமே
அதிமது ரத்தோடு வேர்க்கொம்பும் 
கனவோ டிடவு மிளகையுமே
கருதி விடுசரி சமன்கூட்டிப்
புனல்சூழ்ந் திடவே வறுத்திடித்துப்
பொடியாச் சூரணம் புகல்வீராய்
இனமா யமுரி பின்னீரில் 
எடுத்து காற்கழஞ் சிடுவீரே

இடுவா யமுரி தனிலுண்ண
இருவினையாலெய் திடும்நோய்கள்
நடுவனை யாலன் னசித்தோடும் 
நமனுங் கருகி நடுங்கிடுவான்
படும்பா டதிசய விதமறியாப்
பகர்வாய் பாணஞ் சரமாறி
விடுவாய் மதிரச பாணமதால் 
விதியை வெல்லுமிவ் வஸ்திரமே

அதிமதுரம், வேர்க்கொம்பு என்று அழைக்கப்படும் சுக்கு, மிளகு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து அவற்றை நன்கு வறுத்து இடித்து சூரணமாக செய்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த சூரணத்தில் காற்கழஞ்சு எடுத்து அமுரியில் குழைத்து ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டுமாம். 

இப்படி ஒரு மண்டலம் தொடர்ந்து உண்டால் இரு வினைகளால் ஏற்படும் நோய்கள் நீங்குவதுடன், எமனும் நெருங்க நடுங்குவான் என்கிறார். இந்த காயகற்பமானது விதியை வெல்லும் அஸ்திரம் என்றும் புலஸ்தியர் சொல்கிறார்.

குறிப்பு : அமுரி பற்றிய விவரங்களை முந்தைய பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.

உடல்நலக் குறைவினால் கடந்த வாரம் பதிவுகளை வலையேற்ற இயலவில்லை.  குருவருளினால் இப்போது சுகம். மின்னஞ்சல் மற்றும் முகநூல் குழுமங்களின் ஊடே நலம் விசாரித்த அத்தனை நட்புகளுக்கும் நன்றி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

5 comments:

Unknown said...

குன்றிமணி பருப்பு என்றால் என்ன ?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

தோழி said...

@Venkadesa Perumal

குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் ஆகிய பெயர்களால் அறியப் படும் இந்த தாவரம் ஒரு கொடிவகைத் தாவரம். மேலதிக விவரங்கள் இந்த இணைப்பில் ....

kimu said...

நண்பர்களே
அமுரி பற்றிய தகவல் இந்த சுட்டியின் பின்னோட்டத்தில் உள்ளது
http://www.siththarkal.com/2010/04/3.html

S.Raja said...

தோழி,

மிகவும் பயன்னுள்ள பதிவு..............

ஆண்களின் வழுக்கைக்கு தீர்வு...ஏதேனும் இறுந்தால் சொல்லுகளேன்.....

Post a comment