மந்திர சித்திக்கு உருத்திர காயத்திரி ஹோமம்!

Author: தோழி / Labels: ,

தீ வளர்த்து செய்யும் சடங்குகள் குறித்த தகவல்கள் வேதங்கள் துவங்கி பல்வேறு ஆகமங்களின் ஊடே காணக் கிடைக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில் இதுவரையில் சித்தர் பெருமக்கள் அருளியவைகளை மட்டுமே பார்த்து வருகிறோம். வேள்வி, யாகம்,ஹோமம், ஓமம் என பல பெயர்களால் வழங்கப் படும் இந்தத் தீச்சடங்கு குறித்த அறிமுகங்களையும் அவற்றின் வகைகளையும் ஏற்கனவே பல பதிவுகளின் ஊடே பகிர்ந்திருப்பதால், நேரடியாக உருத்திர காயத்திரி ஹோமம் பற்றி பார்ப்போம். 

புதியவர்கள் ஹோமம் பற்றிய பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசித்து விட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப் பட்டது.

கேளப்பா வட்டஓம குண்டஞ்செய்து
கிருபையுட னாலரசு சமித்தைவாங்கி
சூளப்பா குண்டமதில் தீவளர்த்து
சுத்தமுடன் பசுவின்நெய் வாங்கிமைந்தா
மேளப்பா குருபதத்தில் மனதைவைத்து
வேதாந்த ருத்திரகாயத்திரிசொல்லி
ஆடப்பா நூத்தெட்டு ஆகுதியேசெய்ய
ஆரியென்ற ருத்திர காயத்திரிசித்தே.                

சித்தமுடன் சித்திபெற யிதுவேமூலஞ்ச்
செகத்தோர்க்கு யிந்தமுறை செப்பாதேகேள்
பக்தியுள்ள மந்திரங்கள் பலிக்கவென்றால்
பாலகனே யிந்தமுறை ஓமம்பண்ணு
சுத்தமுடன் சதகோடி மந்திரமெல்லாஞ்
சுருக்காத் தன்வசமே சித்தியாகும்
புத்ததியுடன் சித்தமதா யிருந்துகொண்டு
பூரணமா யஷ்டாங்க யோகம்பாரே.   

இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம்.பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த ஹோம குண்டத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.


ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறியவாறே தீயை வளர்க்க வேண்டும்.

தீ வளர்ந்த பின்னர் அதில் ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை போட்டுக் கொண்டே உருத்திர காயத்திரியைச் சொல்ல வேண்டுமாம். இப்படி 108 தடவை மந்திரம் சொல்லி ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை போட உருத்திர காயத்திரி மந்திரம் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.

இந்த உருத்திர காயத்திரி சித்தியானால் உலகிலுள்ள நூறுகோடி மந்திரங்கள் எல்லாம் விரைவாக சித்தியாகும் என்றும், நாம் சொல்லும் மந்திரங்கள் யாவும் விரைவில் பலிக்குமாம். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.

எல்லாம் சரிதான், உருத்திர காயத்திரி மந்திரம் தான் என்ன?

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.

- அகத்தியர்.

சித்தர்களால் காலங்காலமாய் மிகவும் இரகசியமாக பாதுகக்கப்பட்ட உருத்திர காயத்திரி மந்திரம் "ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா" இதுவே என்கிறார். நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

18 comments:

s suresh said...

ருத்ர காயத்திரி மந்திர போதனையும் தகவல்களும் அருமை! நன்றி!

அருட்சிவஞான சித்தர் said...

மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

ssr sukumar said...

மந்திரங்களை படித்து பயன்படுத்த கூடாது. அறிந்த குரு மூலமாக பயிற்சி பெற்று பிறகு பயன்படுத்த வேண்டும்....தவறான உச்சரிப்புகள் விபரீதங்களை ஏற்படுத்தலாம்.

Inquiring Mind said...

காலம் காலமாக ரகசியமாய் பாதுகாக்கப்பட்ட இந்த உருத்திர காயத்ரி மந்திரத்தை நீங்கள் இப்பொழுது இப்படி வெட்ட வெளிச்சமாய் அறிவித்துள்ளீர்கள்.. இது குற்றமில்லையா? இப்படி எல்லாருக்கு அறிவிக்கலாம் என்றால், அந்த காலத்திலேயே சித்தர்களே இதை செய்திருக்கலாமே?

Scorpio Ramesh said...

அன்பு தோழி மந்திரம் சித்தியாவதை எப்படி தெரிந்து கொள்வது

Shanthi said...

Thanks Thozhi

Unknown said...

அன்பு தோழி

கருத்துள்ள தமிழ் பெயர்கள் (இருபால்)வேண்டும்

Scorpio Ramesh said...

வசியத்திற்கு எது மந்திரம் "வயநமசி " அல்லது "யநமசிவ " இரண்டில் எது ?.

ஏன் இந்த கேள்வி என்றால் கருவூராரின் ஐங்கோண யந்திரம் என்ற பதிவில்

"ஓம் றீம் ஸ்ரீம் ஐம் கிலீம் சவ்வும் வயநமசி சர்வலோக வாசியாய சிவ சிவ சுவாஹா"

என்ற மந்திரத்தை தினசரி 1008 தடவை வீதம் ஒரு மண்டலத்திற்கு தொடர்ந்து சொல்லி வந்தால் இது சர்வ லோக வசியமாகுமாம். இதை முறையாக செய்பவரை மிஞ்ச உலகில் எவருமில்லை என்கிறார் கருவூரார்.
என்று சொல்கிறீர்கள் .

வசியம் என்ற பதிவில்

வசிய மூல மந்திரமான “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா” என்ற மந்திரத்தை செபித்தவாறே மல்லிகை மலர்களால் யந்திரத்தை 108 தடவை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு மண்டலம் தொடர்ச்சியாக செய்து வர வசியம் சித்திக்குமாம்.
என்று சொல்கிறீர்கள் .
மேலும்
மாந்திரிகமும் மூல மந்திரங்களும் என்ற பதிவில்
வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
என்று சொல்கிறீர்கள் .
விளக்கம் தருவீர்கள் தோழி...
அன்புடன் சகோதரன் ரமேஷ்.

தோழி said...

@Scorpio Ramesh

சித்தர் பெருமக்களின் பாடல்களில்னூடே பொதிந்திருக்கும் தகவல்களையே இங்கே பகிர்ந்து வருகிறேன். இவை எதுவும் எனது தனிப்பட்ட அனுபவங்களோ அல்லது ஆய்வுகளோ இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் பொதுவில் மூல மந்திரமும், ஒரு காரியத்துக்காக செபிக்கும் மந்திரமும் ஒரே மந்திரமாக அமைய வேண்டும் என்பதில்லை.

Scorpio Ramesh said...

@Inquiring Mind
தோழியை குறை கூறும் அன்பு நண்பா ,
நான் கடந்த 10 வருடங்களாக பிரௌஸ் செய்கிறேன் . ஆனால் சென்ற மாதம் தான் என் கண்ணில் சித்தர்கள் ராஜ்ஜியம் வலைபூ தென்பட்டது. சித்தர் குறிப்புக்களை எழுதுவதற்கு மட்டுமல்ல , பார்பதுற்கும் படிப்பதற்கும் கூட கொடுப்பினை வேண்டும்.
இந்த குறிப்புகளை பார்ப்பவர் எல்லாம் முயற்சிக்க போவதில்லை.முயற்சிபவர்கெல்லாம் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
சித்தர் அருளும் இறை அருளும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
தோழியை குறை கூறுகிறீர்களே சித்தர் குறிப்புக்களை எல்லாம் " செல்வம் கொழிக்க யந்திரம் " வியாபாரம் செழிக்க மந்திரம் " என்று புத்தகமாக வெளியிடுகிறார்களே அதற்கு என்ன சொல்வீர்கள்.
தோழி செய்வது எல்லாம் தனக்கு தெரிந்த தகவல்களை நம்முடன் பகிர்வது மட்டுமே.
இதை வாழ்த்த வேண்டாம் . விமர்சனம் செய்யாதிருந்தால் நலம்.

Scorpio Ramesh said...

@Scorpio Ramesh
நன்றி தோழி ,
ஒரு மந்திரம் சித்தி அடைந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ள சித்தர் பெருமக்கள் ஏதேனும் உபாயம் சொல்லி இருக்கிறார்களா?
பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவோம்.

Scorpio Ramesh said...

@Unknown
http://knowingyourself1.blogspot.in/2011/04/free-tamil-books-tamil-pdf-books.html
Family
No. Book Title Author Download
1 Tamil baby names Free Tamil eBooks
2 Tamil baby names Arasezil Free Tamil eBooks

ganesh jai said...

Neegal eathavathu muyarchi seaithu vettri aadynthu unda @அருட்சிவஞான சித்தர்

Duraisamy Venkatachalam said...

nallavai endrm vellum

மாந்திரீகம் said...

v.v.nice

rajeswari chandrasekar said...

ithai patithu paravasam adainthen

rajeswari chandrasekar said...

very nice

Sathyanarayanan said...

has anyone tried this and attained this siddhi?

Post a Comment