சித்தர்கள் அருளிய கற்ப வகைகளின் வரிசையில் இன்று "கருநெல்லி கற்பம்" பற்றி பார்ப்போம். எளிமையான இந்த கற்ப வகையினைப் பற்றிய குறிப்பு அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் காணக்கிடைக்கிறது.
கற்பங்களைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும் ஏற்கனவே பல்வேறு பதிவுகளின் ஊடே பகிர்ந்திருக்கிறேன். அவற்றை வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
இனி அகத்தியர் அருளிய கருநெல்லி கற்பம் பற்றி பார்ப்போம்.
கருநெல்லிப் பழமைந்தின் சாருவாங்கி
பேணவே அதுக்குநிகர் தேனுங்கூட்டி
பிரியமுடன் அந்திசந்தி மண்டலங்கொள்ளு
பூணவே வாசியது பொருந்திநின்று
பூரணமாய்த் தேகமது சித்தியாகும்
ஊணவே தேகமது சித்தியானால்
ஒருதீங்கு மில்லையடா சோதியாச்சே.
- அகத்தியர்.
ஐந்து கருநெல்லிப் பழங்களில் இருந்து சாறு எடுத்து, அதன் எடைக்கு சம அளவில் சுத்தமான தேன் கலந்து உண்ண வேண்டுமாம். இப்படி தினமும் இரு தடவை அந்தி சந்தி வேளைகளில் உண்ண வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கு காலையில் ஐந்து பழம், மாலையில் ஐந்து பழமென இரண்டு தடவை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட கூறுகிறார்.
இப்படி ஒரு மண்டலம், அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம். ஒரு நாளைக்கு பத்துக் கரு நெல்லி பழங்கள் வீதம், நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் நானூற்றி எண்பது பழங்கள் தேவைப்படும். எனவே இந்த பழங்கள் கிடைக்கும் காலத்தில் இந்த கற்பத்தினை முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு ஒருமண்டல காலம் தொடர்ந்து உண்டால், சுவாசம் சீரடைந்து தேக சித்தியும் கிட்டுமாம். தேக சித்தி கிடைத்த பின் உடலுக்கு எந்த தீங்கும் உண்டாகாது என்றும் சொல்கிறார். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
வாய்ப்புள்ளவர்கள் இந்த எளிய கற்பத்தினை முயற்சிக்கலாமே!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



9 comments:
we will take before food (or) after food.
pls confirm?
தோழி,
அருமையான பதிவு. நான் நெல்லிகாய் சாப்பிடுவேன். ஆனால் இதற்குள் எத்தனை தகவல்கள். ஆச்சரியம். முழு நெல்லிக்காய் தான் கரு நெல்லிகாயா?
தோழன்,
வெங்கட்
தோழி கருநெல்லி தற்போது எங்கு கிடைக்கிறது?
அருமையான தகவல் ஆனால் கரு நெல்லி இப்போது இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை...
கரு நெல்லிக்காய்
http://www.friendstamilchat.com/forum/index.php?topic=7278.0
Nice arumayana thagaval ......
I am really confused with karu nelli.,
See this link
http://www.flickr.com/photos/dinesh_valke/3795578562/
and please confirm it
கருநெல்லி = Blackberry...
கரு நெல்லி என்பது நமக்கு கிடைக்கும் சாதாரண நெல்லிக்காய் அல்ல.கொல்லி மலையில் கோரக்கர் மகானின் குகை அருகே கிடைக்கும் என அறிந்தேன் .குருவருள் உள்ளவர்கள் முயற்சி செய்தால் கரு நெல்லி கட்டாயம் கிடைக்கும்
Post a Comment