கடைசி வரை.....!

Author: தோழி / Labels: ,

சைவ சித்தாந்தத்தில் மூன்று அடிப்படை கூறுகள் முன் வைக்கப் படுகின்றன. அவை "இறைவன்", "உயிர்கள்", "பாசம்" என்பதாகும். இந்த மூன்றும் நிலைத்திருப்பவை, தனித்துவமானவை. இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை மறக்கவும், மறைக்கவும் கூடியவை மூன்றாவது கூறான பாசம் என்கின்றனர். இந்த பாசத்தை மலம் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த மலத்தை மூன்றாக பிரித்து கூறுகின்றனர். அவை முறையே ஆணவம், கன்மம், மாயை என்பதாகும்.

மனிதன் தன் வாழ்வின் நெடுகே இந்த மும்மலங்களின் ஊடேதான் வாழ்கிறான். இப்படிப் பட்ட மனிதனின் வாழ்வு அல்லது அறிவு குறையுள்ளதாகிறது. இந்த மும்மலங்களை அறுத்தெறிந்து பேரருளான இறை நிலையோடு ஒன்றுவதன் மூலம் பிறவா பேரின்பநிலையை எய்துவதே தம் உயிரின் நோக்கம் என்பதாக சித்தர் பெருமக்களும் கூறியிருக்கினர்.

அந்த வகையில், அந்த திசையில் நம்மைச் செலுத்தும் பாம்பாட்டிச் சித்தரின் பாடல் ஒன்றினை இன்று பார்ப்போம்.

மக்கள் பெண்டிர் சுற்ற மருமக்கள் மற்றவர்
மாளும் போது கூட அவர் மாள்வதில்லையே
தக்க உலகனைத்தும் தந்த கர்த்தனைத்
தாவித்தாவி துதித்து நின்று ஆடு பாம்பே!

- பாம்பாட்டிச் சித்தர்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என பேரன்பினாலும், பெரும் பாசத்தால் கட்டுண்டு ஓருவருக்கொருவராய் வாழ்வதெல்லாம் இந்த உயிர் இருக்கும் மட்டும்தான், உயிர் போன பின்னர் அவர்கள் எவரும் நம்மோடு வருவதில்லை, வரப்போவதுமில்லை. சில நாள் துக்கம், அது தரும் நினைவுகளும் அதன் தாக்கங்களும் நாட்கள் நகர நகர மரத்தோ அல்லது மறந்தே போய்விடுவதுதான் நிதர்சனம்.

இப்படி நிலையில்லாத இந்த மும்மலங்களின் ஊடே சிக்கிடாமல் அவற்றை களைந்து, மனதை ஒருமுகமாக்கி பரம்பொருளை தினம் இடைவிடாமல் துதித்து, அதன் நினைவிலேயே வாழ்வதுதான் உயிரின் இலட்சணமும், இலட்சியமும் என்கிறார்.

இந்த உயரிய தத்துவ கேள்வியைத்தான் கவியரசர் கண்ணதாசன் 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ' என தனது பாடலில் நறுக்குத் தெறித்தார் போல கேட்டிருப்பார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..




Post a Comment

10 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

உங்களின் இந்த பதிவை மேலே படித்துக்கொண்டே வரும்போது, என மனதில் முணகிய பாடல், வீடு வரை உறவு.. இறுதியில் நீங்களும் அதே பாடலை பகிர்ந்திருப்பது உற்சாகமே.

Leo Saravanan said...

தோழி ..................... ரொம்ப நாள் எனக்கு ஒரு சந்தேகம் பரம்பொருளை இடைவிடாமல் துதிகவா நாம் பிறந்தோம் அல்லது பந்தம், பாசம், அன்பு, மனைவி, மக்கள் உடன் இருகவா பிறந்தோம். பரம்பொருளை இடைவிடாமல் துதிக்க என்றால் பந்தம், பாசம், அன்பு, மனைவி, மக்கள் ஏன் படைக்க வேண்டும். பக்தியும் வேண்டும் பந்தம், பாசமும் வேண்டும் அது அல்லவா வாழ்கை............ இறைவனை மட்டுமே துதிக்க என்றால்.......................எனக்கு புரியவில்லை இதில் எனக்கு சுயநலம் தெரிகிறது........................ பதில் தெரிந்தால் யாராவது விளக்கலாம்.........
இது எனக்கு உள்ளே இருந்த கேள்வி யார் மனதையும் புண்படுத்த இல்லை........

kimu said...

24 மணி நேரமும் இறைவனை வழிபட யாரும் சொல்லவில்லை.
கடைதேருவதற்கு என்ன வழி என்று ஒவ்வொரு மனிதனும் முயற்சிக்கவேண்டும்.

பந்தம், பாசம் , அன்பு , மனைவி , மக்கள் எல்லாம் வாழ்கையில் இருக்கவேண்டும்.
அப்படி இருக்கும் பொது அனைத்திலும் ஒரு வரைமுறை வகுத்துக்கொண்டு வாழவேண்டும்.

சந்தோசம் அனுபவிக்கும் பொது அதை ஒரு எல்லை வரை அனுபவிக்கவேண்டும் - துக்கப்படும்போது ஒரு எல்லைவரை துக்கப்படவேண்டும். பந்தம், பாசம் , அன்பு , மனைவி , மக்கள் என்னும் விஷயத்தில் முழுவதுமாக உழன்று கடைத்தேற்றம் அடையாமல் சென்று விடகூடாது என்பதற்காகவே அப்படிசொல்லபட்டது.

இறைநிலை என்பதை இருவழிகளில் அடையலாம்.ஒன்று உறவு வாழ்கை - இரண்டாவது துறவு வாழ்கை.

பேரையூர் மகான் ஸ்ரீ நிஜனந்தஸ்வமிகள் பன்னிரண்டு பிள்ளைகளை பெற்றவர். மரக்கடையில் வாழ்கை நடத்தி குடும்பம் , பந்தம் , பாசம் , மனைவி , மக்கள் என்று வாழ்ந்த அவரும் - இறைவன் மேலிருந்த பாசத்தாலும் , பக்தியாலும் முக்தி அடைந்தார். தகவல் தெரிவித்து - இந்த நாளில் - இந்த நேரத்தில் சமாதி ஆகபோகிறேன் என்று கூறி முக்தி அடைந்தார்.

வாழ்கை என்பதை முற்பாதி - பிற்பாதி என்று வகுத்துக்கொண்டு வாழவேண்டும்.
முதல் பாதியில் அனைத்தையும் அனுபவிக்கவேண்டும்.
பிற்பாதியில் கொஞ்சம் கொஞ்சம் அதிலிருந்து விடுதலையாகி - ஏக இறைவனை அடையவேண்டும்.

முக்தி என்பது அனைவருக்கும் சாத்தியம்.
அதற்காக வாழ்கையை விடவேண்டும் என்பது பொருளல்ல.

உண்மையான அன்பிற்கு ஆண்டவன் அருள் உண்டு.




Saravanakumar.B said...

@Leo Saravanan
Dear Leo,
நீங்கள் சொல்லும் பந்தம் பாசம் அன்பு அவற்றின் முடிவு என்ன? ஒன்று, நாம் பந்தம், பாசம், அன்பு செலுத்துபவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் வரும் கவலை அல்லது அவரின் பிரிவால்(இறப்பு) ஏற்படும் சோகம். ஆகமொத்தம் அதனால் முடிவு நம் விருப்பம் போல் இருப்பது இல்லை. ஆனாலும் பந்தம் பாசங்களினால் உங்கள் உள்நிலையில் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடரலாம். அதற்கு நிலையானது , நிலையற்றது பற்றிய தெளிவு பெறவேண்டும் . அந்த தெளிவை வாழ்கையில் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் கற்றுகொடுக்கும். அதன் பின்னரே சித்தர்களின் வார்த்தைகளுக்கு பின்னே உள்ள உண்மைகளை உணர முடியும். இயல்பாக நம்முள் அந்த மாற்றம் வரும்வரை அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை அதற்காக அதை சுயநலம் என்ற பெயரிடவும் தேவையில்லை.
ஆதலால் உங்கள் கேள்விக்கு பதிலாக வரும் வார்த்தைகளால் புரிந்துகொள்ள முடியாது, அனுபவங்கள் உணர்த்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

--
Regards,
Saravanakumar.B
http://spiritualcbe.blogspot.in/

Namakkal Mahesh said...

Nanbargale...
Bantha pasam illathu irainilayil valgiravan sithar agiran. Mattravan satharana manithanaga irukiran....

Leo Saravanan said...

உங்கள் கருத்துக்கு நன்றி சகோ

Leo Saravanan said...

உங்கள் கருத்துக்கு நன்றி சகோ

Inquiring Mind said...

இதற்கு கீதையில் கூறப்பட்ட விளக்கம் பொருந்தும்.. பந்தம் பாசம் எல்லாம் தவிர்க்க முடியாதவை.. ஆனால் அதன் மேல் பற்றுதலை தவிர்க்க வேண்டும்..

இன்று நாம் பல வயதானவர்கள், பாசத்தால் கட்டுண்டு கவலைப்படுவதை காண்கிறோம்.. சாவை பற்றிய பயமும், சொந்தங்களை பிரியும் சோகமும் வாட்டும்.. இறப்பு என்பது தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து, அதற்கு மேல் உள்ள இறைவனை நினைக்கும்பொழுது, இந்த பற்றுதல்கள் விடுபட்டு போகின்றன..

Srinivasan Rajagopalan said...

@Leo Saravanan
Leo Saravanan, on behalf of Thozhi Thozhi,(if permitted) or as a response to your doubt I post my opinion.
1/ In a market so many commodities are available, but we buy only what we want. Similarly this life market has so many things like Pasam, desire, jealousy, emotions etc. What a man prefers he takes it.
2/ These things are preordained based on our poorva karma, namely, Prarabdham, Sanjidham, aakamyam. The combination ofthese three makes a jeevan to take a life to wipe away karmas. But instead of wiping away, we add more and more.
3/ Siddhars, Gurus, Mahans, out of compassion has told that this life is trivial, as compared to the prabanja life , your human life is equivalent to that of a mosquitoe. So when there is energy in body and mind, think of God, and pray to him for salvation not to take birth.
4/ Having given the birth, he has also given us onething called free will. He has given family, pleasures, pains, comforts, gnanam, agnanam etc etc everything, for all of us. Everything is preordained.
5/ Ifyou ask if everything is preordained, can I kill a man and say it is God's wish. Yes, provided you have the same mind to accept the punishment.
6/ The sixth sense is given to us to discriminate good and bad, and select good, for our betterment.
7/ God never expects us to praise Him , worship Him. But if you do so, it is you who are benefitted and not God.
8/ Nothing wrong in loving your family, enjoying this world. At the same time, time and again, remember, even this shall pass away. If you are not going to be happy with what you have, you are not going to be sad, if you lose it. Follow carefully. So, enjoy everything without attachment.
9/ Is this possible. Yes. Mahans showed us the path. This free will is like the coir tied aorund the neck of a cow which is anchored with a peg in a green maddow. So long as the length of the rope allows, the cow can gaze the maddow in its radius. If it tries to go beyond, it will be pulled back. God has the other end in his hand.
10/ Finally, if your intention is to have self realisation, go as per the vedhas, mahans, siddhargal etc. If your intention is to enjoy the world, just enjoy and take birth again and again till pralaya kalam. At the feet of my Master Yogi Ramsuratkumar, Villivakkam Srinivasan.

Vijay@vizag said...

Dear Friends, Lord Sri Krishna says in The Simad Bhagavad Gita at 9th Chapter 22nd Verses as the answer for your question, while doing our daily karma.
Vijayakumar Thangasamy. Visakhapatnam.

Post a Comment