பிறப்பை அறுத்து என்றும் பிறவா பேரின்ப நிலையான முக்தி நிலையை எய்துவதை முன் வைத்தே சித்தர் பெருமக்களின் தேடல்கள் அமைந்திருந்தன. அந்த பயணத்தின் ஊடான அனுபவங்களையே நூல்களாக்கி தமது சீடர்களுக்குத் தந்தருளினர். அப்படிப் பட்ட நூல்களின் வழியே பயணிப்பதுதான் நமது வலைப் பதிவின் நோக்கமும் கூட...
அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், ஆனால் வழியும், இலக்கும் ஒன்றான ஒன்றில் ஒன்றுவதையே முன்னிருத்துகிறது. அப்படியான பயணத்தின் துவக்க நிலைக்கான அனுபவத்தையே இன்று பார்க்க இருக்கிறோம். ஆம்!, பாம்பாட்டிச் சித்தரின் அனுபவம்தான் அது...
பிறப்பையும் இறப்பையும் அறுத்துவிட யான்
பெருமருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகையறிந்து ஆடாய் பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர்.
பிறப்பும், இறப்பும் இல்லாத பிறவா பேரின்ப நிலையை அடைய வேண்டுமானால் முதலில் மனதின் பூட்டைத் திறந்து அங்கே நிறைந்திருக்க்கும் அழுக்குகளை அகற்றி, நிரந்தர ஜோதியான இறையுணர்வு நிரம்பிட, நிறைந்த சிந்தனையுடன் மனதை திறந்தே வைக்கக் கூறுகிறார்.
பூட்டைத் திறந்தால்தான், கதவைத் திறக்க முடியும். மனம் பூட்டுப் போன்றது. பூட்டைத் திறக்கும் சாவிதான் மேலான குருநாதரின் தொடர்பு. அவரது அருளினால் பூட்டுத் திறந்து விடும். பின் அவரது நல்ல அறிவுரைகள் நெறிப்படுத்துவதால் சிந்தைக் கதவும் திறந்து விடும். இறைவன் எளிதாக உள்ளே நுழைந்து விட்டால் எல்லாப் பிறப்பும் நீங்கி விடும் என்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



8 comments:
நல்ல செய்தி நன்றி
உண்மைதான்.
உயர் நிலை ஞானிகளின் தொடர்பு,நம்மை 'மரணமில்லா பெரு நிலை'வரை கொண்டு செல்லும் சக்தி உள்ளது.
ஆனால் அவர்களை போன்றவர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்க,நாம் பல பிறவிகளில் நற்கர்மாக்களை,செய்து இருக்க வேண்டும்.
சித்தர்களின் ஒளி உடல்
ரகசியங்கள்
vanakkam,
oruvarin kulatheivathai ariya
ethenum vali undaa?
nanri valga um sevai
நன்றி. இப்போதான் பாயிண்டுக்கு வந்திருக்கீங்க.
நல்ல செய்தி
arumaiyana thgaval mikka nanri
I had earlier requested to have any cure medicine for skin issues in body( white patches) it is slowly spreading to other areas. Our siddargal is anything mentioned how to cure this.
U are giving wonderful information's which we will not able to know. Compiling this and organizing this will have enormous pain. U are doing excellent job. pl keep it us for
us....
thanks
raman
my friend how are you?i am like siddar rajiam please explain putam methods. my name is Elavarasan .my id elavarasan.d1@gmail.com
Post a Comment