ஆசனங்களை யார் செய்யலாம்?, அதற்கான தகுதிகள் என்ன?, எப்போது செய்யலாம்?, எப்படி செய்யலாம்?, இதற்கான முன் தயாரிப்புகள் என்ன?.... என்பதைப் பற்றிய அறிமுகமே இன்றைய பதிவு.
யோகாசனப் பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமே உரியது, பெண்களுக்கானது இல்லை என்றொரு கருத்து உண்டு. பெண்களின் இயல்பான மென்மைத் தன்மை மாறி உடல் முரட்டுத்தனமும், கடினத்தன்மையும் அமைந்து விடும் என்ற காரணங்களையும் சிலர் முன் வைப்பதுண்டு. இவை யாவும் அறியாமை காரணமாகக் கூறப்படும் கருத்துக்கள் ஆகும். குருவின் வழிகாட்டுதலோடு யாரும் இதனை பயிற்சி செயயலாம். மனதை ஒரு நிலைப் படுத்தி கற்றுக் கொள்ளும் ஆர்வமும், தளராத முயற்சியுமே ஆசனங்களை கற்றுக் கொள்ளத் தேவையான அடிப்படைத் தகுதிகள் ஆகும்.
இந்தக் கலையை வெறும் உடற்பயிற்சியாக மட்டும் அணுகும் எண்ணப்போக்கு வருந்தத் தக்கது. நமது உடலையும், மனதையும் ஒரே புள்ளியில் குவியச் செய்யும் அனுபவமே ஆசனங்கள். இதன் மூலமாக நமது உயிராற்றலையும், உடல் ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் ஆசனங்களின் சிறப்பு. ஒருவரின் உடல் அமைப்பு, வாழ்வியல் சூழல், உடலியல் தேவைகளைப் பொறுத்து ஆசனங்களை தெரிந்தெடுத்து பழகலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நிலையில் குருவின் வழிகாட்டுதல் மகத்தானதாகிறது.
ஆசனங்களை பழகுவதற்கு என சில தெளிவான வரையறைகளை நமது முன்னோர் கூறியிருக்கின்றனர். ஆனால் இன்றைய பரபரப்பான வர்த்தகச் சூழலில் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது வருத்தமான ஒன்று. இதற்கு பல்வேறு சமாதானங்களை செல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
வசந்த காலம் எனப்படுகிற சித்திரை, வைகாசி மாதங்கள் யோகாசனப் பயிற்சியைத் தொடங்குவதற்கான சிறந்த காலம் என்றும், அதையடுத்து ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களும் சிறந்த காலம் என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காலங்களில் பயிற்சியை துவங்குவதே சிறப்பு.
வசந்த காலம் எனப்படுகிற சித்திரை, வைகாசி மாதங்கள் யோகாசனப் பயிற்சியைத் தொடங்குவதற்கான சிறந்த காலம் என்றும், அதையடுத்து ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களும் சிறந்த காலம் என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காலங்களில் பயிற்சியை துவங்குவதே சிறப்பு.
நதி, குளம், ஏரி, கிணறு போன்ற நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகள் ஆசனங்களை பழக சிறந்த இடம் என்கின்றனர். கிருமிகள், பூச்சிகள் அண்டாத தூய்மையான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே தர்ப்பாசனம் அல்லது புலித்தோல் அல்லது மான் தோல் விரித்து அதன் மீது அமர்ந்து ஆசனங்களைச் செய்தல் வேண்டும். இவை கிடைக்காதவர்கள் வெள்ளைக் கம்பளத்தை பயன்படுத்தலாம். வீட்டில் பழகுவோர் தலைவாசலுக்கு நேராக அமர்ந்து பயிற்சிகளைச் செய்யக் கூடாது. வாசலுக்குச் சற்றுத் தள்ளியிருந்து செய்ய வேண்டும்.அந்தச் சூழ்நிலையில் துர்நாற்றம் ஏதும் வீசாத வகையில் சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபமிட வேண்டும்.
ஆசனப் பயிற்சிகள் முடிந்த பிறகு வியர்வை முற்றிலும் அடங்கும்வரை அமைதியாக இளைப்பாறுதல் அவசியம். பிறகு மெல்லிய சுத்தமான துணியினால் உடலைத் தேய்த்துத் துடைக்க வேண்டும். மேலும் பயிற்சியின் போது மூச்சை உள்ளுக்குள் இழுப்பதையும் வெளியே விடுவதையும் சீரான கதியில் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக மூச்சு மூக்கின் வழியே நடைபெற வேண்டும்.
ஆசனம் பழகுவோருக்கான உணவுகள்.
ஆசனப் பயிற்சியை துவங்கிய பின்னர் உண்ணும் உணவின் அளவு மிதமானதாக அதாவது அரை வயிறு கொள்ளும் அளவுக்கே இருக்க வேண்டும். அதிக சூடும், ஒரேடியாக குளிர்ந்தும் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அவசரமில்லாமல் நிதானமாக உணவை நன்கு மென்று உண்ண வேண்டும். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வாயு சஞ்சாரத்திற்கென உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பழைய மெல்லிய அரிசிச் சாதம், கோதுமைப் பண்டங்களான ரொட்டி, பூரி, ஹல்வா, சோளத்தினால் செய்யப்பட்ட ரொட்டி மற்றும் பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, வாழைக்காய், வாழைப் பூ, வாழைத் தண்டு, இளம் கத்திரிக்காய், கிழங்கு வகைகள். பழ வகைகள், நெய், பால், நெல்லிக்காயினால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் போன்ற உணவு வகைகளை உண்ணுவது உத்தமம்.
கசப்புச் சுவை மிக்க பொருட்களை விலக்க வேண்டும். உப்பு, காரம் மிகவும் குறைவாக உபயோகிக்க வேண்டும். தயிர் உபயோகிப்பதை விலக்கலாம். அவசியம் என்று தோன்றினால் நீர் மோராகப் பயன்படுத்தலாம். விரைவில் செரிமானமாகாத காய்கறிகள் பரங்கிக்காய், வெங்காயம், மாம்பழம் போன்றவற்றை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு அதிகமான குளிர்ச்சியையும், மித மிஞ்சிய சூட்டையும் உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களை முடிந்த மட்டில் தவிர்க்க வேண்டும்.
Post a Comment
11 comments:
நிறைய தகவல்கள் வழக்கம்போலவே.. தொடருங்கள் தொடர்கிறோம்!
நல்ல தகவல் , தொடருங்கள்
nice list
Thank you for sharing this information...
Thanking you
cannot believe u r in srilanka!
அருமையான தகவல்
some extra points i collect here.
தோழி ,
ஆசனம் குறித்து ,உணவு முறைகளும் ,அதனை பழகுவதற்கு அமைக்ககூடிய சூழ்நிலைகள் அனைத்தையும் விளக்கியமைக்கு மிக்க நன்றி.
can anybody list the plants/techniques/literature used by siddhars which are used to purify turbid water
இதுபற்றி மேலும் தகவள்கள் பெற விறும்புகிரோம்
Post a Comment