மிருக வசியம்

Author: தோழி / Labels:

இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு என்கிற தத்துவத்தின் வழி நின்ற சித்தர் பெருமக்களில் பெரும்பாலானோர் மனித நடமாட்டம் அற்ற காடுகள், மலைகளையே தம் உறைவிடமாய் கொண்டிருந்தனர்.அங்கு வாழும் வனவிலங்குகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி அவற்றோடு இனைந்து வாழ்ந்திட பல உத்திகளை புழக்கத்தில் வைத்திருந்தது அவர்தம் பாடல்களின் ஊடே நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. முன்னரே இது பற்றிய தகவல்களை சில பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று கருவூரார் அருளிய மிருக வசியம் ஒன்றினைப் பார்ப்போம்.

கருவூரார் தனது இந்த உத்தியை "மிருக ஆக்ருசணம்" என்கிறார். ஆக்ருசனம் என்பது மாதிரீகத்தின் அட்ட கர்மங்களில் ஒன்று, அதாவது ஒருவரை முற்றிலுமாய் ஆக்கிரமித்து தனக்கு அடிபணியவோ அல்லது இணக்கமானவராய் இருக்கச் செய்வதாகும்.  

"கருவூரார் பலதிரட்டு" என்னும் நூலில் இந்த மிருக வசியம் பற்றிய தகவல் பின்வருமாறு காணக் கிடைக்கிறது..

தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால்
சுத்திசெய்து கிழக்குமுகம் நோக்கித்தானும்
மாற்றமுடன் கலைக் கொம்பால் கெல்லிக் கொண்டு
மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று
சொல்லியே வாங்கிதன் வாயிற்போட
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி
அழைத்துடனே மிருக ஆக்ருசணமுமாமே

- கருவூரார்.

தனியாக முளைந்திருக்கும் குப்பைமேனிச் செடி ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து, அந்த செடி இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் கிழக்கு நோக்கி இருந்தவாறு, கலைமான் கொம்பினைக் கொண்டு மண்ணைத் தோண்டி வேரினை எடுக்க வேண்டும் என்கிறார்.

இப்படி தோண்டும் போது  "துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமாம். இப்படி சேகரித்த வேரை பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.தேவை ஏற்படும் போது அந்த வேரை வாயில் அடக்கிக் கொண்டு மிருகங்களைக் அழைக்க அவை நன்கு பழகிய மிருகங்கள் போல் நம்மிடம் வரும் என்கிறார். 

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

8 comments:

அருள்முருகன் said...

nice but tell me the equivalent material to kalaimaan kombu

ஓம்போகர் said...

சித்தர்கள் ஒரு விசயத்திற்கு,பல்நோக்கு விதமான தீர்வுகளை கண்டிருந்தனார்.
இமயமலை போன்ற கடும் குளிரான பிரதேசத்தில்,வெறும் கோவணத்தை மட்டும் கட்டி கொண்டு எப்படி வாழ முடிந்தது ?
அந்த பகுதிகளில் கிடைத்த குளிரை உடலில் சமன் செய்ய கூடி மூலிகைகளை,பயன்படுத்தியதால் தான் வாழ முடிந்தது.

அந்த காலத்தில் அடர்ந்த காடுகளில் தவயோகத்தில் ஈடுபட்டு வரும் காலத்தில்,மிருகங்களால் தங்களுக்கும்,தங்களை சேர்ந்தவர்களுக்கும் ஆபத்து நேர கூடாது என்பதற்காக,தங்களுடைய 'யோக சக்தியை'பயன்படுத்தாமல்,
மந்திரங்கள் மற்றும் மூலிகை ஆற்றலை பிரயோகித்து,மிருக வசியம் செய்தார்கள் சித்தர்கள்.

ஓம் போகரே சரணம்
ombhogar.blogspot.com

Unknown said...

ஆமா! கலை மான் கொம்புக்கு எங்க போறது?

Unknown said...

மாnதிரீகத்தின்

thanks very usful

Unknown said...

அறிய வேண்டிய செய்தி
"நன்றி "

Unknown said...

அறிய வேண்டிய செய்தி
நன்றி

sogakumaran said...

I will try

Unknown said...

good news, keep it up friend

Post a comment