விஷக்கடி வைத்தியம்

Author: தோழி / Labels: , , ,

இன்று நம்முடைய பேச்சு வழக்கில் இருக்கும் "கை வைத்தியம்", "பாட்டி வைத்தியம்" போன்றவைகள் பெரும்பாலும் சித்தர் பெருமக்கள் தங்களுடைய நூல்களின் வழியே சொன்னவைதான். இம் மாதிரி வைத்திய முறைகள் இன்றும் நகரம் தாண்டிய கிராமப் புறங்களில் வெற்றிகரமாக நடைமுறையில் பயன்படுத்தப் படுகிறது.

பாம்புகள், தேள், விஷ வண்டுகள் போன்றவை கடித்தால் அதற்கான வைத்திய முறைகளை போகர் தனது "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விவரங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பாரப்பா புகையிலயு மயிலிரகினொடு
பண்பான வெள்ளெருக்கன் வேருங்கூடி
சீரப்பா சுருட்டிபுகை குடித்தாயானாற்
சிறப்பான கொட்டுவிஷ்ந் தீருந்தீரும்
சாரப்பா வுப்பதனைப் பொடித்துவைத்துச்
சார்வான பூரமது கொளுத்திவைத்து
நேரப்பா கண்சிரட்டைக் கொண்டுமூடி
நிலையாகக் கடித்தவிடங் கட்டப்போமே.

போமென்ற குரும்பியையுந் தடவிக்கட்டப்
பொல்லாத கொட்டுவிஷம் போகும்போகும்
நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால்
நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும்
வாமென்ற சடைச்சிவே ரரைத்துத்தின்ன
வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்
ஆமென்ற சீந்திற்றண்டின் பாலையுண்ண
வறியாத விஷங்களெல்லாம் வாங்கும்பாரே.

பாரென்ற வேலியதன் சாற்றையுண்ணப்
பதினெட்டு எலிவிஷமும் பரக்கும்பாரு.

புகையிலையுடன் மயிலிறகின் நடுவில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவைகளைச் சேர்த்து சுருட்டி புகை குடிக்க விஷங்கள் நீங்குமாம். 

விஷக்கடி வாயில் உப்பை பொடியாக இடித்து வைத்து அதன் மேல் பூரத்தை சூடாக்கி வைத்து மூன்று கண்ணுடைய தேங்காய் சிரட்டையால் மூடி அதனை கட்டிவைத்துவிட விஷம் நீங்குமாம்.

விஷக்கடி வாயில் குரும்பியை தடவி துணியால் கட்டிவைக்க விஷம் நீங்குமாம். 

சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்து தின்றாலும், சீந்தில் தண்டில் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்குமாம்.

கொடிவேலிச் சாற்றை உண்ண பதினெட்டு வகை எலிவிஷங்கள் நீங்கும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

11 comments:

Anonymous said...

Thozhi

i am really appreciate you... the great thinks you are bringing back to the world.. continue your service..

Regards
Senthilkumar

Unknown said...

அன்பு அம்மா பூரம் என்றல் என்ன கூறவும்

வல்லிசிம்ஹன் said...

அருமையான வைத்தியங்கள். பொறுமையாகப் பின்பற்ற வேண்டும்.மிகவும் நன்றி தோழி.

Nareshcare said...

Super

Unknown said...

விஷக்கடி வைத்தியம் அருமை

arthursoundar said...

சித்தர்களின் முத்திரைகளை எவ்வளவு நாள் பயன்படுத்தினால் மாற்றம் தெரியும்
T.SOUNDAR RAJAN

arthursoundar said...

Trademarks of their activities and how they feel the need to explain about the duration of

arthursoundar said...

முத்திரைகள் அவை செயல்படும் விதம் மற்றும் அவைகளின் செயல்பாடுகளை உணரும் கால அளவு ஆகியவற்றை பற்றி விளக்கம் வேண்டும்

praba said...

Can u have any ideas for wegith loosing

vairramuthu said...

nice

vairramuthu said...

nice

Post a comment