தொடர்ந்து ஓடும் ஜாலம்

Author: தோழி / Labels: ,

ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் உபாயம் ஒன்றினை புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலத்திரட்டு" என்னும் நூலில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஒருவன் இளைப்பில்லாமல் தொடர்ந்து ஒடிக் கொண்டேயிருக்கலாம் என்கிறார்.

அந்த பாடல் பின்வருமாறு....

விழுதியை வாயில் மெண்ணு தின்று
விட்டடக்கிக் கொஞ்சம் தாடையிற் சண்ணு
பழுதர வோடவே ளுபாரி லென்னாளும்
பத்தாலு மிளைப்பில்லைப் பரிந்து பண்ணு

புலிப்பாணி.

கையளவு விழுதி இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று சுவைத்து அதில் ஒரு பகுதியை விழுங்கிய பின்னர் மீதி இருப்பதை தாடையில் அதக்கி வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடலாமாம். இப்படி ஓடுவதால் களைப்பு, இளைப்பு என எதுவும் தோன்றாது என்கிறார்.

நவீன கால ஓட்டப் பந்தயங்களில் பல்வேறு செயற்கை மருந்துப் பொருட்கள் களைப்பில்லாமல் ஓடுவதற்கு துணை புரிகிறது. ஆர்வமுள்ளோர் இந்த விழுதி இலையை ஆய்வுக்குட்படுத்தி அதன் தன்மைகளை வெளிக் கொண்ரலாமே!

வேறொரு தகவலுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை  ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

13 comments:

Unknown said...

very useful information but never destroy the sports by revealing these!

Amarnath G said...

suprb....."

RAJA said...

ஓடி முடித்த பின் பச்சை மரத்தைப் பிடித்துக்கொண்டு வாயில் வைத்திருக்கும் மூலிகையை துப்பிவிட வேண்டும் என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான பகிர்வு........உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

viluthi ilai epadi irukum

Unknown said...

தோழி அவர்களே ,
விழுதி இலை எப்படி இருக்கும் , அது எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் மிக உதவியாக இருக்கும்.

raman said...

Nandri thozi for your information, and pl continue your good work...

Anonymous said...

Yeah.. I want to know more details on vizhuthi ilai...

teenmoon5 said...

விழுதி இல்லை என்றால் மூக்கு சளி பழ மரத்தின் இலைகள். அந்த மரத்திற்குத்தான் விழுதி என்று பெயர். விழுதி இல்லை நீரில் தொடர்ந்து வாய் கொப்புளித்து வந்தாலும் பல் ஆட்டம் மற்றும் குருதி கசிவு நிற்கும்.

Unknown said...

thank u very much for good message

SEKAR said...

my grand father had told it is thiruneetru pachilai<vibhoothi pachilai.

Unknown said...

Viluthi illai scientific name is Cadaba indica, Lam.

Unknown said...

@Tamil Inian see this in google it is what you are searching for cadaba fruticosa

Post a comment