மிளகு கற்பம் (புதியது)

Author: தோழி / Labels:

நீடித்த இளமையோடும், நோயற்ற உடல் நலத்துடன் வாழ சித்தர்கள் பல கற்பவகைகளை அருளியிருக்கின்றனர்.இவை யோக கற்பம், மருத்துவ கற்பம் என இரு வகையில் அடங்கியிருக்கிறது. மருத்துவ காயகற்பங்கள் சிலவற்றை ஏற்கனவே சில பதிவுகளின் ஊடே பகிர்ந்திருக்கிறேன். அந்த வகையில் முன்னரே மிளகு கற்பம் ஒன்றினை பகிர்ந்த நிலையில் இன்று  அகத்தியர் அருளிய மற்றொரு மிளகு கற்பம் பற்றி பார்ப்போம்.

இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....

கேளடா கற்பமொன்று சொல்வேன்மைந்தா
கிருபையுள்ள மாதுரதி யமுர்தந்தன்னை
கேளடா வாங்கியொரு கரகத்திட்டு
கெணிதமுடன் பருமிளகாய் யெடுத்துக்கொண்டு
கேளடா அமுர்தரசத் தேனில்நன்றாய்க்
கெட்டியுடன் சட்டமதா யூறவைத்து
கேளடா நீரறவே யூறிற்றானால்
கேள்வியென்ன அந்திசந்தி ஐந்துகொள்ளே.

கொள்ளையிலே கபமகலும் வாசியேறும்
குருவான பதிதனிலே தீபங்காணும்
சுள்ளையிலே யகப்பட்ட பாண்டம்போலே
சோர்வான தத்துவங்கள் சுத்தமாகும்
பிள்ளையிலே உங்களைப்போல் பிள்ளையுண்டோ
பிலமான அமுர்தரசங் கொண்டதாலே
உள்ளெழுந்த மந்திரத்தின் சித்தியாலே
உத்தமனே சக்கரம்நின் றாடும்பாரே.

நல்ல பெரிய மிளகாக பார்த்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமாம். அந்த மிளகு மூழ்கும் வரை தேனை ஊற்றி, அந்த பாத்திரத்தை மூடி ஒன்றினால் மூடி விட வேண்டும். மிளகானது தேனை முழுவதுமாக உறிஞ்சி, பாத்திரத்தில் தேன் வற்றிப் போன நிலையில் அந்த மிளகை எடுத்து பத்துப் பங்காகப் பிரித்துக் கொள்ள வேண்டுமாம். இதனை அந்தி சந்தி வேளைகளில் ஒவ்வொரு பங்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார்.

இவ்வாறு ஐந்து நாட்கள் உண்டால், கபம் நீங்கி வாசி மேல் நோக்கி ஏறுவதுடன் புருவமத்தியில் ஒளி தென்படுமாம். அத்துடன் சூளையில் சுட்ட மண் பாண்டம் போல் நமது உடல் சுத்தியடைந்து உறுதியாகும் என்கிறார் அகத்தியர். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

25 comments:

thamarai said...

தோழி

அந்தி சந்தி என்றால் என்ன
எந்த நேரம் தயவுசெய்து
விளக்கவும்

தாமரைசெல்வம்.கா

Unknown said...

ஆச்சிரியமான தகவல்!

Unknown said...

அப்படின்னா இதுக்கு பத்தியமா பாலும் சோறும் நெய்யும் சாப்பிடத்தேவையில்லையா?

Unknown said...

அருமையான விடயம் தான் ஆனா மிக சரியாக இதை செய்ய முடியுமா?

தோழி said...

@thamarai

அந்தி சந்தி என்பது சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரங்கள்.

Unknown said...

தியானத்தின் போது கொசு கடிக்காமல் இருக்க உபாயம் எதேனும் கூறுங்கள்

Unknown said...

தியானத்தின் போது கொசு கடிக்காமல் இருக்க உபாயம் எதேனும் கூறுங்கள்

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமை..

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

thanks entha pathiu eanaku payan ullathu
unkal seavai thotartoum

Unknown said...

Thanks

SABARI said...

Yes. Enakum ithu periya prachana.

Kosu marunthu vachutu atha monthu pathukittu thiyanam pandrathum sontha selavula sooniyam vachukirathum onnuthan.

Plz plz plz plz enakum sollinka.

But oru vazhi iruku. Ippo oru software use pannitu iruke. Antimosquito software. Itha mobile install pannitu on panna kosu poiduthu. Ithula irunthu generate aakura ultra sound kosuku erichal aakiduthama. Try it.

Unknown said...

agathiar vaitiyattil inippunirukku enna vaitiyam? telivaaga sollunggal.nanri

Unknown said...

பயனுள்ள தகவல் . நன்றி

Vinodh said...

Thanks for the details thozhi. I'll try this and tell you the results.

Sara said...

Thozhi,

Neengal kooriya kaya karpa vagaiyil migavum ellaguvana karpam ithu thaan, plz 100+ ithumathiriyana sulabamana vagaigalai thedi enngaluku thriviyungal.

Nandri Thozhi.

Unknown said...

Dear Thozhi,

I tried this but even after days honey is not absorbed into pepper. May be I missed something?

Any help?

Thank you!

Remanthi said...

நல்ல தகவல்...

Unknown said...

S its not absorbed into pepper. pls reveal!!

Unknown said...

SIR,
SHANMUGAM,10.03.1981
MY PULL PROFILE

Unknown said...

dear thozhi, all your posts are very useful. i am expecting more from you.

Anonymous said...

It's not working.

JOURNEY OF LIGHT - திகழ் சக்கரத்தார் said...

Nan try seithu kondu irukiren Thozhi nandri

ashwin said...

@renuka tamil கொசுவிடம் கடிக்காதே என்று த்யானத்தில் கூறுங்கள்

Unknown said...

siddarkaluku porunthum namakku kosu thollai thanga mudiyalai ulagathi yarukum payapadamattuthu

ASHOK said...

@நந்தவனம் Sir, u tried this?? wats ur experience . pls share

Post a comment