தேரையர் அருளிய பற்பொடி

Author: தோழி / Labels: ,

பற்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் முதுமொழி "ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி" என்பதுதான். நமது முன்னோர்கள் பல் துலக்க இந்த இரண்டு மரத்தின் குச்சிகளைத்தான் பயன்படுத்தி வந்தனர் என்பதாகவே நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தக் இரு குச்சிகளைத் தாண்டிய பற்பொடிகளையும் நம் முன்னோர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர். அவற்றை பற்பொடி என்பதை விடவும் ஒரு மருந்துப் பொருளாக கருதி பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

சித்தர் பெருமக்கள் இத்தகைய பல்வேறு அரிய பற்பொடிகளைப் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாகவே அருளியிருக்கின்றனர். இத்தகைய பற்பொடிகளை தொடர்ந்து பயன் படுத்தினால் நமது பற்கள் வலிவும், பொலிவும் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் தேரையர் அருளிய பற்பொடி ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல் “தேரையர் வைத்திய காவியம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

போகுந் தந்த வியாதிக் கொருமுறை
ஆகுஞ் சீன மரக்குடன் துத்தமும்
தாகுந் தான்றி தனிக் கடுக்காயுடன்
வாகு மாசிக்காய் வாகாய் விராகனெடெ.

எடுத்து கும்ப மெழிலா யரைத்துமே
கடுத்து மண்டலங் கருதியே தேய்த்திட
அடுத்த தந்த மசையும் பல் லுக்குத்து
முடுத் தப்பாமல் முடுகியே யோடுமே.

சீன அரக்கு, மயில்த் துத்தம், கடுக்காய், மாசிக்காய் ஆகியவற்றை தலா ஒரு விராகன் எடை அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்கு பொடியாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ள பற்பொடி தயார்.

இந்த கலவையைக் கொண்டு ஒருமண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து பல் துலக்கிவர பல் அசைவு, பல் வலி, முரசு சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார். இந்த சரக்குகள் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்... நன்றி...

S.Raja said...

நன்றி தோழி. போகர் கண்ட விநாயகர் சமாதியை பற்றி சற்று விலக்கி சொல்லுக ப்ளீஸ் ......

Unknown said...

Thanks

Sara said...

Thozi Naan Ore Oru kelviku vidai ketkiren, thayavu koornthu pathil alithal mikka nandri udayavanaga karuthuven. Ella Mooligaigal matrum sitha marunthugal kidaikum oru idathai thelivana mugavariyudan thara vendugiren.

Ungal pathiluku mikka nandri.

தோழி said...

@Sara

கொழும்பில் செட்டித் தெருவில் (sea street, colombo 11) மருந்துக் கடைகள் இருக்கின்றன அங்கு கிடைக்கும். இந்தியா பற்றி தெரியவில்லை, தெரிந்தவர்கள் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்...

premnath said...

tholi vannakam neatraiya milagu karpam migaum karam ithanaikum 10 milagu than irrukum

ARANTHANGI ABDULLAH said...

mail thuttham visam entru sollukirargal ethai vail poottu pal thullkkalama viparam kooravum

ARANTHANGI ABDULLAH said...

mail thuttham visam allava ethai vail poottu pal thulakkalama viparam kooravum

Gita said...

Great..

சின்னமனூர் தமிழன் said...

nalla thagaval

சின்னமனூர் தமிழன் said...

nalla thagaval

S.Raja said...

Tholi, please answer my above request??

mithra said...

iniya thozhi....
vanakkam.... thangalin azhavatra ulaipukku mikka nandri... thangalai epdi thodarbu kolvadhu.... mailid kooravum...

S.Raja said...

Hi ALL Almost 99% of these mooligai's are available in Chennai.

M/s.K.Ramaswamy Chetty
177,Rasappa chetty street,
Park town,
chennai- 600003.

It's located near kanthaswamy koil(kantharkottam). I have went there thrice ... Even this information is came to know by tholi in the earlier edition... She is more and more informative then anybody else in my point of view. So don't ask her from here on she has lot more to serve. If any one ask the same question in the forth coming edition you guys come forward and answer this particular question.

தோழி said...

@raja

பத்து பாடல்களின் ஊடே உள்ள தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு விநாயகரின் சமாதி பற்றிய அறுதியான தீர்மானங்களுக்கோ, முடிவுகளுக்கோ வர இயலாது. இது தொடர்பில் வேறெங்கும் தகவல்கள் கூறப் பட்டிருக்கின்றனவா என்பதை தேட வேண்டும். அது அத்தனை எளிதானதில்லை, நிறைய நேரமும் பொறுமையும் அவசியம். குருவருளினால் எதிர்காலத்தில் மேலதிக தகவல்கள் எனக்கு கிடைத்தால் இங்கே அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.

raja said...

Tholi, First of all Thanks for your time and that too timely response........ For me it's very very difficult to understand these lines. People like you got lot more blessing's from god(I am not lie it's true).I think you have lot more patience and so it's around the corner. I believe that you can do it for us...

Unknown said...

நல்ல தகவல்

La Venkat said...

தோழி,
தங்கள் ஒவ்ஒரு பதிவும் வாசிக்க வாசிக்க ஆச்சரியமான தகவல்.
ஒருபுறம் மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் சிறுது பொறாமையாகவும் உள்ளது. இறைவன் உங்களுக்கு மட்டும் இப்படி பல அறிய தகவல்கள், படிக்கவும், அதை பகிரவும், பரந்த மனம் தந்து உள்ளான்.
என்னால் இயன்ற வரை தங்கள் வளைத்தலத்தை பற்றி எனது நண்பர்களுடன் பகிர்ந்து உள்ளேன்.
எப்போதாவது தாங்கள் இந்தியா வர நேர்ந்தால் தயவுசெய்து தகவல் பகிர வேண்டுகிறேன். என்னை போல் இன்னும் பலர் தங்களை சந்திக்க ஆவலாய் இருக்கலாம்.
தங்கள் உயர்ந்த பணி தொடர வாழ்த்துகள். தங்கள் பணியில் உரிய நேரம் வரும்போது எனக்கும் சிறுது இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்,
தோழன்,
வெங்கட்.

sse said...

வணக்கம்.விநாயகர் சமாதி பற்றி நான் கொடுத்த
தகவல்கள் சித்தர் போகர் வேறொரு நூலில்
குறிபிட்டு இருப்பதாகும்.அதற்கு மேல் வேறு
யாரும் இதைப்பற்றி எழுதவில்லை

Unknown said...

Mayil thutham visham illaya?

Prasanna said...

super information!

Prem said...

தோழி,

இந்த பாடலில் சீன அரக்கு என்று ஒற்றை பொருளாக பொருள் படாது, சீனம் என்னும் படிகாரம் மற்றும் அரக்கு என இரு பொருளாக பொருள் படும்..

Unknown said...

Nice

Post a Comment