பிள்ளையார் ஆதியில் காணாபத்யம் என்கிற பிரிவின் முழு முதற்கடவுளாய் விளங்கியவர், பின்னாளில் ஷண்மதங்களும் ஒரே குடையின் கீழ் இந்து மதமாய் மலர்ந்த போது இந்து மதத்தின் முழு முதற்கடவுளான சிறப்புடையவர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு செயலையும் விநாயகரை முன்னிறுத்தி அவரை பணிந்தே துவங்குகின்றனர். சித்தர் பெருமக்கள் விநாயகரை எவ்வாறு போற்றித் துதித்தனர் என்பது பற்றிய விவரங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.
இன்றைய பதிவில் விநாயகரின் சமாதி பற்றிய ஒரு தகவலை பார்க்க இருக்கிறோம். ஆம்!, முழு முதற்கடவுளான விநாயகரின் சமாதியேதான், போகர் தனது "போகர் 7000" ம் என்ற நூலில் இந்த விவரங்களை பகிர்ந்திருக்கிறார். எங்கே என துல்லியமாய் விவரம் கேட்பவர்கள் பாடல் எண் 4900 முதல் 4910 வரையிலான பாடல்களை பார்த்து தெளியலாம்.
பதிவின் நீளம் கருதி போகர் விநாயகரின் சமாதியை தரிசித்த காட்சியை விவரிக்கும் நான்கு பாடல்களை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
தந்தாரே இன்னமொரு மார்க்கம்சொல்வேன்
தயவான புலிப்பாணி மைந்தா கேளு
சொந்தமுடன் அடியேனும் குளிகைகொண்டு
துப்புரவாய் மேருகிரி தன்னில்சென்றேன்
அந்தமுடன் பதின்மூன்றாம் வரையில்சென்று
அவ்வரையில் விநாயகரைக் காணேன்று
விந்தையுடன் அடியேனும் மனதூவந்து
விருப்பமுடன் குளிகைகொண்டு சென்றேந்தானே.
தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர்
தண்மையுடன் குருதனையே நினைந்துகொண்டு
தேனான பதின்மூன்றாம் வரையில்சென்றேன்
தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண
கோனான தும்பிக்கையுடைய மாண்பன்
கொற்றவனாம் கணபதியாம் என்றசித்து
மானான மகதேவகன் என்னுஞ்சித்து
மகத்தான சமாதிபதி கண்டிட்டேனே.
காணவே விநாயகரின் சமாதிகண்டேன்
கருவான சமாதியது மூடவில்லை
பூணவே அங்குசமும் ஒத்தைக்கொம்பும்
புகழான யானைமுகம் சமாதிபூண்டு
ஊணவே பூமிதனில் சமாதிபூண்டு
உறுதியுடன் இருகரமும் ஏந்திக்கொண்டு
மாணவே வெகுகாலம் இருந்தசித்து
மகத்தான மூன்றுயுகம் கண்டசித்தன்.
சித்தான சித்துமுனி விநாயகந்தான்
சிறப்பான மேருகிரி தன்னிலப்பா
முத்தான பதின்மூன்றாம் வரையில்தானும்
முனையான குளிகையினால் கண்டுஉவந்தேன்
பத்திதரும் நெடுங்காலம் இருந்தசித்து
பாருலகில் சாத்திரத்தின் முதலாம்சித்து
வெத்திபெறும் விநாயக சித்தர்தம்மை
வேகமுடன் மேருவரைதனில் பார்த்திட்டேனே.
களைப்பே இல்லாமல் தொடர்ந்து பயணம் செய்யும் குளிகையை செய்து அதனை பயன்படுத்திடும் முறையை தான் வசிட்ட முனிவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும், அதன் படி அந்த குளிகையை உருவாக்கிய பின்னர், குருவான காலங்கிநாதரை நினைத்து வணங்கியபடி மேரு மலையின் பதின் மூன்றாம் பகுதியில் உள்ள விநாயகரின் சமாதியை காணச் சென்றதாக குறிப்பிடுகிறார்.
குருவருளினால் அந்த மேருமலையில் பதின்மூன்றாம் பகுதியில் விநாயகரின் சமாதியை கண்டதாகவும், அந்த சமாதியானது மூடப் படாமல் திறந்து இருந்ததாகவும் அங்கே அங்குசமும், ஒற்றைக் கொம்பும் யானைமுகமுமாக சமாதி நிலையில் விநாயகர் பூமியில் இருக்கக் கண்டேன் என்கிறார். மூன்று யுகமும் கண்ட சித்தனான விநாயகர் நான்காம் யுகத்தில், உறுதியாக இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டு சமாதி நிலையில் இருக்கிறார் என்கிறார்.
இந்த தகவல்களை போகர் தனது சீடரான புலிப்பாணிக்கு சொல்வதாக பாடல்கள் அமைந்திருக்கிறது.
சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக யாரும் விரிவான கட்டுரைகளோ அல்லது ஆய்வுகளோ செய்திருந்தால் அது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
Post a Comment
23 comments:
நிறைய கற்கிறேன் உங்களின் மூலமாகவும்
Good to see vinayagar sathoorthi day...
thanks vinayaga...
உங்கள் பகிர்வுக்கு நன்றி...நல்ல தகவல்...
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
விநாயகர் சதுர்த்தி திருநாளில் இதைப்படிக்கும் பாக்கியம் கிடைத்ததை பெறும் பாக்கியமாகவே கருதுகிறேன்
unmaiya thozhli?..migavum sirappana ondru...meru mallai enga iruku-nu solla mudiyuma..."
விநாயகர் பெருமான்,மகாதேவர் என்ற பெயருடன்
இவ்வுலகத்தில் பிறந்து கற்பங்கள் பல கொண்டு
வெகுகோடி காலம் ஞானி போல இருந்தார். இவரும் ஒரு சித்தரே.சம்சார வாழ்க்கை நீக்கி
இப்புவியில் வெகு காலம் இருந்தார்.
இவரை தேவனென்று மக்கள் போற்றி பணிந்து வணங்கினார்கள். மக்கள்,கணபதியை
கடவுளாக்கி பன்னெடுங்காலம் வழி வழியாக
வணங்கியதால்,இவ்வையகத்தில் சுவாமி என்று பெயர் படைத்தார் .
மேருகிரியில் கண்ட கணபதியின் அம்சத்தை
இப்போதும் பிள்ளையார் பட்டியில் கண்டு
உணரலாம்.
கணபதிபெருமானின் உடல் நீலவர்ணம் கொண்டது
என வேறொரு இடத்தில் போகமஹரிஷி
குறிப்பிட்டு இருக்கிறார்.
(போ ச.கா -7000 + போ - ௭௦௦ நூல்களில் )
மேலும்,அவ்வை பிராட்டியும் தனது அகவலில்
"நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்" என்பதாலும்
விநாயகரின் உடம்பு நீல நிறமாக இருப்பது தெரிய
வரும்.
இவரது தரிசனத்தையும் அருளையும் நேரடியாக
பெற்று ,அதை பாடல்களில் பதிவு செய்தவர்கள்
திரு நம்பியாண்டார் நம்பி அவர்களும் மற்றும்
முதிர்கன்னியான அவ்வையார் அவர்களும் ஆவர்.
தற்போது எங்கு இருக்கிறார் என்று தெளிவு செய்தவர்
சித்தர் போகர்.போகமஹரிஷி, மற்ற சித்தர்கள்
எங்கே இருக்கிறார்கள் என்று தேடி கண்டுபிடித்து
அவர்களின் தரிசனம் மற்றும் ஆசி பெறுவதில்
உள்ள பெருவிருப்பத்தின் பாற்பட்டே நமக்கு
அவரது இருப்பிடம் தெரிய வந்தது.
அவர்கள் திருவடிகள் சரணம்.
தோழனாக,கடவுளாக,சகோதரனாக,ஷிப்ர (அதே
க்ஷணத்தில் ) அருள் பாலிக்கும் கணபதியாக
விளங்குபவரும்,ஏனைய சித்தர்கள் போல
இன்றைக்கும் இருந்து அருளை வாரிவழங்கும்
விநாயகர் திருவடிகளை சிரமேற் கொள்வோம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
சித்தர்கள் பாதம் சரணம்....நல்ல தகவல்.....
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)
hi Thozhi,
where is merumalai ,nam ange sella mudiuma
nantri,
meru mallaiyai enbathu tamilagathin merkku thodarchi malayin oru paguthi..ithu thenniku arugil keralathin ellaiyil ullathaga ketarinthen...melum angu sila siddhargal-lin jeeva samathi irupa thaga solkindranar...unmaiya..?
meru mallaiyai pattriyum, "vinayaga peruman-nin" jeeva samathiku selum valiyai patriyum veru ethavathu kuripu "magaa siddhar pogar" padalkalil ullatha...irunthal sollungal ...avaludan kathurukkiren...."
கயிலாய மலையை கண்டு பெரிய பரிக்ரமா என்னும் கயிலையின் நான்கு பிராகாரங்களையும் வலம் வந்தேன் ,ஆனால் மேருமலையை எப்படி நேரில் தரிசனம் செய்வது அதற்கு சித்தர்கள் ஏதேனும் வழி காட்டி உள்ளார்களா ,தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் . அவர்களின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம்
கயிலாய மலையை கண்டு பெரிய பரிக்ரமா என்னும் கயிலையின் நான்கு பிராகாரங்களையும் வலம் வந்தேன் ,ஆனால் மேருமலையை எப்படி நேரில் தரிசனம் செய்வது அதற்கு சித்தர்கள் ஏதேனும் வழி காட்டி உள்ளார்களா ,தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் . அவர்களின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம்
மேரு மலை /மேரு கிரி என்பது கடல் கோல் கொண்ட குமரி கண்டத்தில் இருந்தது .
இபொழுது கடலுக்கு அடியில் உள்ளது
http://en.wikipedia.org/wiki/File:Ancientlemuria.jpg
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg
Image: [im]http://s24.postimg.org/pbrjl3cph/image.jpg[/im]
Colors: [co="red"]Comment Text Here[/co]
Marquee: [ma]Comment Text[/ma]
nalla thagaval thozhi
GOOD NEWS...ITHUPOL PALA THAGAVAL THAR VENDUKIREN.............HAPPY VINAYAGAR CHATHURTHI
CHANDRASEKAR
Amazing Thozhi ....Hats off to you for sharing to all.
என்னுடைய பொருட்களை மனையில் வளரும் செடிகள் போன்றவற்றை பாதுகாக்க ஏதாவது மந்திரம் உள்ளதா? மேலும் மனைக்குள் விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கவும் மந்திரம் சொல்லவும்.
ஆண்மை விருத்தியடையவும் பெண்களை திருப்தி படுத்தவும், மந்திரம் சொல்லவும்
Good
Very Interesting. There is a huge lot of things we really do not know or comprehend in our religion.
Post a Comment