ஆசனம் - ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels:

ஆசனம் என்ற சொல்லுக்கு இருக்கை, அசையாத இருப்பு நிலை என்றெல்லாம் பொருள் கூறப்படுகிறது. ஆசனம் என்பது வடமொழிச் சொல். தமிழில் இதனை "ஆதனம்" என்றே திருமூலர் குறிப்பிடுகிறார். நம்மில் பலருக்கும் ஆசனம் என்பதை விடவும் யோகாசனம் என்கிற பதமே பரிச்சயமானது. இது குறித்து யோகம் பற்றிய முந்தைய பதிவுகளில் விளக்கியிருப்பதால் தொடருக்கு தேவையான தகவலை மட்டும் இங்கே தொட்டுச் செல்கிறேன்.

யோகம் என்கிற உயர் வாழ்வியல் லட்சியத்தின் எட்டு படி நிலைகளில் மூன்றாவது படி நிலைதான் ஆசனம். இதை திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 

இயமம், நியமம், ஆதனம் (ஆசனம்), பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன யோகத்தின் எட்டு படிநிலைகளாகும். இதனையே அட்டாங்கம் என்று விவரிக்கிறார் திருமூலர்.

முதல் படிநிலையான இயமம் என்பது ஒருவர் தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க விதிகளைப் பற்றி சொல்கிறது. இரண்டாவது படிநிலையான  நியமம் குரு வணக்கத்தையும், இறை பக்தியையும் வலியுறுத்துகிறது. மூன்றாவது படிநிலைதான் நாம் பார்க்க இருக்கும் இந்த ஆதனம்(ஆசனம்).

முதல் இரு நிலைகளில் தேறிய பின்னரே மூன்றாவது நிலையான ஆசனம் பழகிட வேண்டும். ஆனால் பணத்தை முன்னிருத்தும் இன்றைய  அவசர யுகத்தில் முதல் இரு நிலைகளின் முக்கியத்துவத்தை யாரும் கவனிப்பதில்லை அல்லது வலியுறுத்துவதில்லை என்பது வருந்தத் தக்கது. மன இயக்கம் ஒழுங்கில் வந்த பின்னரே உடல் இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வரும் ஆசனம் பழகிட வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பலனையும் நாம் பெறமுடியும் என்கிற அடிப்படையை புரிந்து கொள்ளவது அவசியம்.

சரியான இருக்கை அல்லது ஒரு நிலையில் நிற்றல் என்று பொருள்படும் இந்த ஆசனங்கள் மற்றும் அவற்றின் பலன்களை குறித்து சித்தர் பெருமக்கள் விரிவாகவே தங்களின் நூல்களில் விளக்கியிருக்கின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் அகத்தியர் அருளிய 'அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் ஒன்பது ஆசனங்களையே பார்க்க இருக்கிறோம்.தேர்ந்த குரு ஒருவரின் வழிகாட்டுதலில் இவற்றை பயிற்சி செய்வது சிறப்பு.

இந்த ஆசனங்களை யார் பழகலாம், அதற்கு என்ன தகுதிகள் தேவைப் படும். எந்த இடத்தில், எந்த சமயத்தில் ஆசனம் பழக வேண்டும். இப்படி ஆசனங்களை பழகுவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது பற்றிய விவரங்களோடு நாளைய பதிவில் தொடர்கிறேன்.Post a Comment

16 comments:

Unknown said...

வெல்கம் பேக் சகோ,

அருமையான தொடரோடு திரும்ப வந்திருக்கிறீர்கள், தொடர்கிறோம் தொடருங்கள்!

Unknown said...

வணக்கம் . அடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள் .தொடருங்கள்

sury siva said...

யமம், நியமம் இவற்றிற்குப்பின்னே தான் ஆசனம்.பின்பு தான் தாரணை, பிராணாயாமம், ப்ரத்யாஹாரம் எல்லாமே.
இதை வலியுறுத்திச் சொன்னமைக்கு மகிழ்ச்சி.
மற்றும், யமம் நியமம் இவை இரண்டுமே உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு வகையான
கட்டுப்பாட்டினைக் கொண்டும் வல்லமை படைத்தவை.
இந்தக் கட்டுப்பாடுகளை உள் வாங்கியபின், நிலைப்பட்டபின்பு தான் ஆசனம் என்ற அத்தியாயத்திற்குள்
செல்ல இயலும்.

குறுக்கு வழியில் போகாது, நேர் வழியில் முன்னோர் இட்ட வழியிலேயே செல்லவேண்டும் எனச்
சுட்டிக்காட்டியிருப்பது பெருமைப்படக்குரியது. ராஜ யோகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் நான்கு
படிகளையும் தாண்டி, எடுத்த எடுப்பிலேயே தியானத்தைச் சொல்லித் தருகிறோம் என வணிக ரீதியிலே
செயல்படும் பல நிறுவனங்கள் இன்று லட்சக்கணக்கில், ஏன் ! கோடிக்கணக்கில் தொண்டர்களைக் கவர்ந்திருக்கின்றன.
அவர்தம் பொருளை அபகரித்து இருக்கின்றன என்பது வெள்ளிடை மலை.

கை கட்டு போட்டு இருந்தது விபத்துக்குப்பின் ஆறி விட்டதா ?
குணம் அடைந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஆசிகளுடன்,
சுப்பு ரத்தினம்.

Bharath said...

தோழி,நலமா ?

interesting title. Awaiting to learn more... :)

La Venkat said...

தோழி,
தாங்கள் நலமுடன் திரும்பியது மிக்க மகிழ்ச்சி.
இறைவன் எல்லா நலமும் வளமும் தர பிராத்திக்கிறேன்.
தோழன்
வெங்கட்.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

raja said...

Great.... Here are few info about tamilan...திருமூலர்

கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?

இன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.

"அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்-

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
-ஆசான் திருமூலர்-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-ஆசான் திருமூலர்-

இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
(size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

raja said...

தோழி,

It's a kind remainder to update
thamilarjothidam.....

jegans said...

தோழி! நலமா..?
வருகைக்கு நன்றி.

geethasmbsvm6 said...

கை சரியாயிடுச்சா?

தோழி said...

இப்போது பரவாயில்லை, தட்டச்சும் அளவிற்கு தேறியிருக்கிறேன்.... விசாரித்தமைக்கு நன்றி.

DEVA Unknown said...

Fantastic

Malar said...

Hi Thozhi....
Just a small suggestion.
You have lot of things put under let interested people can do research. Why can't we members of this blog form a team to do so?
If we do with pure heart we will get Siththarkal blessings also. We can pass the valuable tresure of information to the next generation. We can get mukththi from birth with their blessing. What do you say members?

S.Raja said...

U R right Man and I agree with you

kumar said...

thanks for providing useful posts..

Unknown said...

romba pudichiruku enaku mudhala irunthu kathukanum asai muthala irunthu epadi armbikurathu nu theriyala please help me

Post a Comment