அகத்தியர் அருளிய ஆசனங்கள் - முத்ராசனம்.

Author: தோழி / Labels:

பத்மாசனத்தை தொடர்ந்து இன்று அகத்தியர் அருளிய முத்ராசனம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

காணடா ஆசனத்தை விரித்துச் சொல்வேன் 
கருவாக முத்ர ஆசனத்தைக் கேளு
தோணடா பத்மாசனதில் இருந்துகொண்டு
தானாக பின்னோக்கி கரங்கள்கோர்த்து
முத்தாக முன்னோக்கி குனிந்துகொள்ள
மயங்காதே முத்ர ஆசனமுமாச்சு

- அகத்தியர்.

பத்மாசனத்திற்காக என்ன நிலையில் அமர்ந்திருந்தோமோ, அதே நிலையில் அமர்ந்து முத்ராசனத்தை செய்ய வேண்டும். பிறகு கைகளை முதுகுப் பக்கமாகக் கொண்டு வந்து, வலது கை மணிக்கட்டுப் பகுதியை இடது கையால் பற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பிடிப்பு இலேசாகவும், இலகுவாகவும் இருக்க வேண்டும். முரட்டுத் தனமான பிடிப்பு கூடாது. இவ்வாறு கைகளைப் பிணைத்துக் கொண்ட பிறகு நிதானமாகவும் மெதுவாகவும் முன்புறம் குனிய வேண்டும். நன்றாகக் குனிந்து முன்னாலிருந்து தரையைத் தொடும் நிலைக்கு வர வேண்டும். பிறகு பழையபடி பத்மாசன நிலைக்கு வந்துவிட வேண்டும்.

முன்புறம் குனியும் போது மூச்சைத் இயல்பான கதியில் தாராளமாக வெளிவிட வேண்டும். நிமிரும் போது சீரானகதியில்மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.இந்த ஆசனத்தைச் செய்யும் சிலர் கைகளைப் பின்புறம் கட்டுவதற்குப் பதிலாக, கைகளால் கால்களின் கட்டை விரலைப் பற்றியவாறு குனிந்து நிமிருவது உண்டு. ஆசனம் பழகும் போது கவனம் சிதறாமல் ஒரு முகமாய் மூச்சை கவனித்து செய்து வர வேண்டும்.

யோக முத்திராசனம் செய்வதன் காரணமாக ஜீரண உறுப்புகளின் செயற்பாடுகள் தூண்டப்பட்டு குடல் இயக்கும் சீராகிறது. நீடித்த மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த ஆசனத்தை பழக தீர்வு கிடைக்கும். இடுப்பு, வயிற்றுப் பாகங்கள் உறுதியகி, பொலிவான அமைப்பைப் பெறவும் இது உதவுகிறது.

முக்கியமாய் வயிற்றில் புண்(Ulcer) அல்லது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகுவலி உடையவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

நாளைய பதிவில் மயூராசனம் பற்றிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.Post a Comment

14 comments:

jana said...

அருமை தோழி மிக தெள்ள தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

arul said...

superb post

SACHIN tendulkar said...

USEFUL ASANA

tamilvirumbi said...

தோழி ,
பட விளக்கத்துடன் தாங்கள் பதிவு செய்த முத்ராசனம் மிகவும் அருமை .மிக்க நன்றி.

SABARI said...

nice. thanks

s suresh said...

விரிவான எளிமையான விளக்கம்! நன்றி!~

இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

nadarasa sritharan said...

மிகவும் அருமை....

jaisankar jaganathan said...

தோழி,
நீங்கள் இந்த ஆசனம் பற்றி ஒரு சிடி வெளியிட்டால் மகிழ்ச்சி.

HYGTR said...

அருமை தோழி மிக தெள்ள தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

Raja Elangovan said...

nice thankyou

Natarajan Velan said...

superb

mahaaraajah said...

பொதுவா ஆசனங்கள் வைத்திய செலவை கொடுக்காது... 'கீபிடப்'

mahaaraajah said...

பொதுவா ஆசனங்கள் வைத்திய செலவை கொடுக்காது... 'கீபிடப்'

கவியாழி கண்ணதாசன் said...

அருமை

Post a Comment