துருசு செந்தூரம் தயாரிக்கும் முறை

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தில் முக்கியமான அக மருந்தான செந்தூரம் பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், அவை தயாரிக்கப் படும் நான்கு முறைகள் பற்றிய விவரங்களை நேற்றைய பதிவில் பார்த்தோம்.

அந்த நான்கு வகை செந்தூர தயாரிப்பு முறைகள் முறையே...

1 - மிருத்தயுஞ்சம்.

மூலச் சரக்குகளை நன்கு எரித்து சிவக்க செய்து எடுக்கப்படுவது மிருத்தயுஞ்சம் எனப்படும்.

 2 - அயச்செந்தூரம்.

மூலச் சரக்குகளை நன்கு புடம்போட்டு சிவக்க செய்து எடுக்கப்படுவது அயச்செந்தூரம் எனப்படும்.

3 - சண்டமாருத செந்தூரம்.

மூலச் சரக்குகளை நன்கு அரைத்துச் சிவக்க செய்து எடுக்கப்படுவது சண்டமாருத செந்தூரம் எனப்படும்.

4 - அயவீர செந்தூரம்.

மூலச் சரக்குகளை நன்கு வறுத்துச் சிவக்க செய்து எடுக்கப்படுவது அயவீர செந்தூரம் எனப்படும்.

இந்த நான்கு வகைகளை பயன்படுத்தி பல்வேறு தேவைகளுக்கு என பிரத்யேகமான செந்தூரங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றுள் முக்கியமான ஒரு செந்தூரம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். துருசு செந்தூரம் சித்த மருத்துவத்திலும், இரசவாததிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை தயாரிக்கும் முறையினை தேரையர் தனது நூலான "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் பின் வருமாறு அருளியிருக்கிறார்.

செய்யப்பா துருசு களஞ்சுஎடைதான் ரெண்டில்
திறமாக உத்தாமணிப் பாலூட்டி ஆட்டி
வைய்யப்பா மூழ்கியபின் வளமே கண்டு
பதறாதே கதிரொளியில் ஊறப்போட்டு
மெய்யப்பா அவ்விலைச் சாற்றாலாட்டி வில்லை
மேலுலர்த்தி யிலையாட்டிக் குகையே பண்ணி
வைய்யப்பா குகையுள்ளே மருந்தை விட்டே
மண்சீலை செய்துலர்த்திப் புடத்தைப் போடே
போட்டடா குக்குடத்திற் செந்தூரிக்கும்

- தேரையர்.

இரண்டு கழஞ்சு துருசு எடுத்து உத்தாமணிப் பாலில் சிறிது நேரம் ஊறவிட்டு, அதைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை உத்தாமணிப் பால் ஊற்றி  சூரியஒளி படும்படி வைக்க வேண்டுமாம்.

நன்கு ஊறிய இந்த கலவையை எடுத்து கல்வத்திலிட்டு அது ஊறுவதற்கு பயன்படுத்திய அதே பாலை விட்டு மெழுகுப் பதமாக வரும் வரை அரைத்து வில்லைகளாகச் செய்து காயவைத்து எடுக்க வேண்டும் என்கிறார். உத்தாமணி இலையினால் குகை செய்து அதனுள் காயவைத்து எடுத்த வில்லைகளை வைத்து அதன் மேலே சீலைமண் செய்து மீண்டும் நன்றாக காயவைக்க வேண்டுமாம்.

நன்கு காய்ந்த பின் அதற்கு குக்குப் புடம் போட் வேண்டுமாம். பின்னர் புடம் ஆறியபின் அதை எடுத்தால் துருசு செந்தூரமாகி இருக்குமாம். இதுவே துருசு செந்தூரம் செய்யும் இலகுவான வழிமுறை என்கிறார் தேரையர்.

எல்லாம் சரிதான்.. இந்த துருசு செந்தூரத்தைக் வைத்து என்ன செய்வது?

மருத்துத் தயாரிப்பு முதல் இரவாதம் வரை பல செய்முறைகளுக்கு இந்த துருசு செந்தூரம் பயன்படுகிறது. அந்த வகையில் துருசு செந்தூரத்தைக் கொண்டு செம்பைத் தங்கமாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

11 comments:

jaisankar jaganathan said...

எனக்கு ஒரு டவுட். செம்பை தங்கமாக்கனும்ன்னா ஏன் தங்க விலை இன்னும் குறையலை. ஈஸியா மாத்திடலாமுல்ல

சித்தன் ருத்ரா said...

மிருத்தயுஞ்சம் என்பது மரணத்தை வெல்வது என்பது பொருள்...

raja said...

Great thing about you is not only learning but spreading what you have learnt...much more important thing is, what you spreading is more and more precious than gold,diamond....so on.

My Hearty Congratulation to you. I hope & Pray God will give everything to you and to your family..

One more personal request..you haven't updated our thamilarjothidam from May 2011 till now I know you are busy with siththarkal ragasium Just a remainder.

வரலாற்று சுவடுகள் said...

ஆச்சிரியமான தகவல்! நாளையும் வருவேன்!

Unknown said...

is rasavatham is a method of converting any low grade material to high graded or only copper to gold. I read it is also possible to convert iron to gold. I also read that there are modern methods for conversion but it is very costly and resulting gold can be radio active. Scientifically you are changing the atomic structure of material. This is really amazing.

mani said...

thozhikku vanakkangal.. naan ungalukku oru mail anuppa aasai padugiren. pls enakkaaga ungalu mail mugavariyai en mail id kku anuppi vaiyungal thozhi. manikandan.tnr@gmail.com

jerry said...

Thozhiku en anbu vanakkangal. Thamizh methu nikangal konda anbirku mikka santhosangal. Natham endral enna porul?

Mk Sugumaran said...

அன்புள்ள தோழி,
உங்களுடைய சித்தர்கள் ராஜ்ஜியத்தை இன்றுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக விளக்கவுரைகளுடன் சித்தர்கள் பாடல்கள் சொல்லி இருக்கிறீர்கள். நான் என்னிடத்தில் ஒரு சித்தவைத்தியர் கொடுத்த போகர் ஏழாயிரதத்தை தமிழில் தட்டச்சு செய்து இணையத்தில் .PDF ஆக வெளியிட்டேன். அதையே சற்று அழகுபடுத்தி திரு.நடராஜன் கந்தசாமி என்பவர் என்னுடையபெயரிலேயே archive.org என்ற இணையதளத்தில் வெளியிட்டார். எனக்கு சித்த மாருத்தும்பற்றி தெரியாது ஆனால் அதை தட்டச்சு செய்யும்போது ஓரளவு தெரிந்துகொண்டேன். ஆனால் சரியான விளக்கங்கள் தெரியாது. உங்கள் தளத்தில் நிறைய விளக்கங்கள் உள்ளன . மக்களை செனறடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் தற்போது அப்புத்தகத்தை யுனிகோடாக மாற்றி http://bogar-siddhar.blogspot.in என்ற இணையத்தில் வெளியிட்டுள்ளேன். தங்களுக்கு அவை தேவையென்றால் பயன்படுத்திக்கொள்ளவும்.
இப்படிக்கு
எம்.கே.சுகுமாரன்

Elangovan Hariesh said...

Aya chendhuram, Ayaveera chendhuram and Sanda Marutha chendhuram are not method, these are all important medicines, available in all alternative medicine shop(Nattu marunthu kadai). for further suport 9367650514, 9655923397.

Elangovan Hariesh said...

The above said Chendhuram all are Great Medicines having 300 years expiry period, Not Methods. for further clarification contact 9367650514, 9655923397.

prathap raman said...

Senduram and sumnnam are same or different

Kodana kodi nandrigaludan
Prathap.p

Post a Comment