மழையில் நனையாதிருக்கும் உபாயம்

Author: தோழி / Labels:

இயல்பில் சித்தர்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகியே வாழ்ந்திருந்தனர். தங்களுடைய அக மற்றும் புறத் தேடல்களுக்கு மனித சஞ்சாரமற்ற தனிமையான இடங்களே அவசியமாக இருந்தன. இதன் பொருட்டே காடுகள், மலைகள் என இயற்கையின் மடியில் வாழ்ந்திருந்தனர்.

இம்மாதிரியான இடங்களில் புயல், மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் கூறுகளிடம் இருந்து காத்துக் கொள்வதற்கென சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். அவற்றில் இன்று மழையில் இருந்து காத்துக் கொள்வதற்கென போகர் அருளிய உத்தியினை பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வே, இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கு உரியது.

இந்த தகவல் போகர் அருளிய "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

நேரென்ற நாகரச ந்தன்னை யெடுத்து
நெறியாக விடுத்தாவின் பாலிற்போடு
காரென்ற கட்டியதா யிருகிப்போகும்
கருவான யிருபத்தேழு மணியுஞ்செய்வாய்
சீரென்ற ருத்ராட்சங் கூடச்சேர்த்து
செபமாலை முடித்துநீ சிரசிற்போடே
போட்டுநீ மழைதனிலே போனாயானாற்
புகழான மழைத்துளிதான் மேல்விழாது

- போகர்.

நாகரசத்தை எடுத்து பசுப்பாலில் போட்டால் அது கட்டியாக இறுகிவிடுமாம். இறுகியதும் அதனை எடுத்து இருபத்தி ஏழு மணிகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம். அந்த மணிகளுடன் இருபத்தி ஏழு உருத்திராட்ச மணிகளும் சேர்த்து ஒரு ஜெப மாலையைப் போன்று ஒருமாலை தயார் செய்துகொள்ள வேண்டுமாம். 

பின்னர் மழை நேரங்களில் அந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு சென்றால் மழைத்துளி உடம்பில் விழாது என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே.!

இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

arul said...

informative post

s suresh said...

ஆச்சர்யமான தகவல்களை அள்ளித்தரும் தங்களுக்கு நன்றி! இன்று என் தளத்தில் மழை ஹைக்கூக்கள்! http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

Ashwin said...

naaga rasam endraal yenna?

வரலாற்று சுவடுகள் said...

நாகரசம் என்பது என்ன சகோ!

Jasmine said...

Dear Thozhi,
Can you please describe about 'Nagarasam' and how do we get this?

Many Thanks

jaisankar jaganathan said...

நாகப்பாம்மை புழுஞ்சு ஜூஸ் போட்டு அதில ரசம் தயாரிக்கனும். அதான் நாக ரசம்.

வரலாற்று சுவடுகள் said...

@jaisankar jaganathan

ஏது கொஞ்சம் விட்டா 'பல்'லை பொடி பண்ணிதான் பல்பொடி தயாரிப்பாங்கன்னு சொல்லுவீங்க போல :D

Jekathish Ramalingam said...

Very Much impressive Informative !

Bala said...

பேசாம ஒரு குடை எடுத்துட்டு போயிடலாம்...

Anonymous said...

ammavasaila poranthavangaloda palangal solamudiuma please

vijay said...

hi this is vijay i reed your all post really good god bless you.............

vijay said...

i think few people asking you what is the nagarasam???? nobody reply if you don't mind what is the naagarasam

Gem Muruga said...

nagarasam it is asecret word only know the siddas.nagarasam is ment to amirtham .some are told nagam is notifid to the zing metal

sahul hameed said...

It might be, a kind of mercury ,derived from zinc metal !

சுமன் said...

முதலில் நீ செய்து பாரூம்

Post a Comment