செம்பை தங்கமாக்கும் செந்தூரம்

Author: தோழி / Labels: , ,

சித்த மருந்துகளில் முக்கியமான அக மருந்தான செந்தூரம் பற்றிய தகவல்களை கடந்த இரண்டு பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில் துருசு செந்தூரத்தினை கொண்டு செம்பினை தங்கமாக்கும் முறை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

செம்பினை தங்கமாக்குதல் என்ற உடன் அது நமக்குள் பல்வேறு சிந்தனைகளையும், ஆர்வத்தையும் தூண்டியிருக்கும்.ஆனால் சித்தர் பெருமக்கள் இந்த செயல்பாடுகளை முழுக்க முழுக்க மருந்து தயாரிப்பின் ஒரு அங்கமாகவே சொல்லிச் சென்றிருக்கின்றனர். தயாரித்த மருந்தின் தரத்தினை பரிசோதிக்கவோ அல்லது மருந்து தயாரிப்புக்குத் தேவைக்காக கீழ் நிலை உலோகத்தை தரமுயர்த்திடவே இந்த செம்பை பொன்னாக்கும் முறை கூறப்பட்டிருக்கிறது.

இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த முறை தேரையர் அருளியது. தேரையரின் "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல் இது. 

புகழான கொக்கு மந்தாரைப் பூச்சாற்றால்
நாட்டடா செம்புவிராக னெடையும் பத்து
நலமாக ஏழுவிசைக் காய்ச்சித் தோய்த்து
ஆட்டடா குகைக்குள்ளே வைத்துருகும் போதிலே
அப்பனே கழஞ்சியெடைச் செந்தூரம் போடு
தேட்டடா வுருகுவெள்ளி கண்விட் டாடும்
தெளிவாக செய்திடில் ஐந்ததுவாகும் மாத்தே.

- தேரையர்.

ஒரு விராகன் எடை அளவு செம்பினை எடுத்து அதனை கொக்கு மந்தாரைப் பூச்சாற்றில் நன்கு தோய்த்து எடுத்து உருக்கிக் கொள்ள கூறுகிறார். அதே செம்பினை மீண்டும் மீண்டும் ஏழுதடவை கொக்கு மந்தாரை பூச்சாற்றில் தோய்த்து எடுத்து உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

இப்படி மீண்டும் மீண்டும் உருக்கி எடுத்த செம்பினை  குகையில் வைத்து மீண்டும் உருக்க வேண்டுமாம். அப்படி குகையில் வைத்து உருக்கும் போது முன்னர் செய்து வைத்துள்ள துருசு செந்தூரத்தில் ஒரு கழஞ்சி எடை எடுத்து செம்புடன் சேர்த்து உருக்க வேண்டுமாம். அவ்வாறு சேர்த்து உருகும் போது வெள்ளி கண்விட்டாடுமாம் அப்போது அதை இறக்கிவிட கூடாது என்றும் அந்த நேரதில் மிகக் கவனத்துடன் உருக்கி எடுத்தால் செம்பானது ஐந்து மாற்று தங்கமாக கிடைக்கும் என்கிறார். 

ஆச்சர்யமான தகவல்தானே.... ஆம் தகவல் மட்டுமே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... Post a Comment

13 comments:

வரலாற்று சுவடுகள் said...

ஆச்சிரியமான தகவல்தான்!

தொடருட்டும் சித்தர்களை நோக்கிய தங்களது தேடல் பயணம்!

s suresh said...

நல்லா இருக்கு தகவல்! படிக்கத்தான் முடியும்! ரசிக்கத்தான் முடியும்! அருமை!

இன்று என் தளத்தில்

தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

kimu said...

அரிய தகவல்! நன்றிதோழி :)

jaisankar jaganathan said...

தோழி அவர்களே இப்படி ஈஸியா தங்கம் கிடைச்சுட்டா ஏன் இந்தியா இப்படி ஏழை நாடா இருக்கப்போவுது

KINGSATHISH said...

varam kalikaleen

BioBrindavan said...

hi..

I feel very lucky that I could find this blog.. Very interesting..

ARANTHANGI ABDULLAH said...

viraivil nalam pera eraivanaiveenukiewen

TOPSI TELEVISION NETWORK ORG. said...

சதுரகிரிக்கு செல்லல்லாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் வழிமுறைகளை கூறுங்கள்

Thirumurugan Rajagopal said...

Hello friend,
iraivanaiyum siththarkaliyum nee viraivil kunamaga pirarthikkeren.en appan murugan matrum
siththargal thunai eppodhum unnudan irukkum.
nantri friend
thirumurugan

Raakee said...

Thozi thangaludaya photo irundal thangaludaya vudal nalamaga udava muyarchi seiya mudium.
Iduvum irai siththamo?thangal sirithu voivedukka.Neengal Vazhga Perananda perunilai petru. Maha Sandalan RaaKee.

raja said...

செந்தூரம்...இதபத்தி எனக்கு தெரியாது ..ஆனா தங்க தாது உருக்கர வழிமுறை தெரியும்
1.தங்கத்தை உருக்கர வழிமுறை வேறு
தங்க தாது உருக்கர வழிமுறை வேறு

2. தங்கதாது கரையும் ஆனா உருகாது
தங்கம் உருகும் ... தங்க தாது சுலபமா கிடைக்கும் ஆற்று படுக்கைல முறம்பு பாறைல இருக்கும் உருகும் முறைய சொல்ல கூடாது அதனால .....END......்

raja said...

செந்தூரம்...இதபத்தி எனக்கு தெரியாது ..ஆனா தங்க தாது உருக்கர வழிமுறை தெரியும்
1.தங்கத்தை உருக்கர வழிமுறை வேறு
தங்க தாது உருக்கர வழிமுறை வேறு

2. தங்கதாது கரையும் ஆனா உருகாது
தங்கம் உருகும் ... தங்க தாது சுலபமா கிடைக்கும் ஆற்று படுக்கைல முறம்பு பாறைல இருக்கும் உருகும் முறைய சொல்ல கூடாது அதனால .....END......்

raja said...

சித்தர் சொன்ன வழிமுறைய சொல்லிடிங்க ...ஆனா தங்கதாது உருக்கர ஓர்ஜினல் வழிமுறை internet ல யும் சரி நாம படிச்ச பாட புத்தகத்திலும் சரி வழிமுறை மறைக்கபட்டிருக்கும் ...தங்க தாது உருக்கர வழிமுறை நான் சொல்லவா எதுக்கு வம்பு ...bay...நல்ல தகவலுக்கு நன்றி

Post a Comment