நாகபாம்பின் வாய் கட்டும் மந்திரம்...!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது தீண்டாது இருக்க அதன் வாய் கட்டும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் நாக பாம்பு தீண்டாதிருக்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார்.

ஊணிப்பா ரரவமது வாய்தான்கட்ட
உண்மையுள்ள மந்திரமது ஒன்றுகேளு
பேணிப்பார் நங்கிலிசீ ஓமென்றாக்கால்
பெரிதான நாகமது வாய்தான்கட்டும்
பூணிப்பார் தன்னகமே சாட்சியாகப்
புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்
ஆணிமாத் தந்தமதி னொளிபோல்மைந்தா
ஆதிதொடுத் தந்தமதின் சித்தியாமே.

- அகத்தியர்.

ஒருவரை நாக பாம்பு தீண்ட வந்தால் "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை  உச்சரிக்க பாம்பால் தீண்ட முடியாது அதன் வாய் கட்டிப் போய்விடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர். 

இம் மாதிரியான ஆச்சர்யமான தகவல்கள் எல்லாம் ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... Post a Comment

9 comments:

Suresh Subramanian said...

nalla seiththi thaan... aarayichchi seithaaal migavum payanullaathaaga irukkum

வரலாற்று சுவடுகள் said...

வியப்பான தகவல் தான்!

s suresh said...

நல்ல தகவல்! முயற்சித்து பார்க்கிறேன்! எங்கள் பக்கம் பாம்புகள் அதிகம்!

இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

Unknown said...

people who want to try this, please be careful. without proper guidance this is very dangerous.

arul said...

good news

Senthil Kumar said...

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.

Senthil Kumar said...

மேற்கண்ட மந்திரத்தை பொல்லாத விலங்குகளுக்கும் பயன்படுத்தலாம்...!

”அங் கிலி சிங் நசி நசி” என்று 60 உரு செபிக்க பாம்பு விஷம் இறங்கும். ஆதியில் பார்வதி சிவனின் கழுத்தில் விஷத்தை அமுதமாக மாற்றி மந்திரம் இதுவேயாகும்.

பாவா ஷரீப் said...

கட்டை திறக்க மந்திரம் என்ன தோழி ???
இல்லாவிட்டால் அந்த ஜீவன் சாப்பிடாமல்
இறந்துவிடும் என்று படித்த நினைவு

Anonymous said...

பாம்பு வாய் வழியாக தான் உணவு உண்ணும் , இம் மந்திரத்தின் படி வாயை கட்டிவிட்டால் எப்படி மிண்டும் திறப்பது ? நம்ம பாதுகாக்க வாயை கட்டி விட்டு திறக்க வில்லை என்றல் அதால் உணவு உன்ன முடியாதே அதற்கதான் கேட்கிறேன்

Post a Comment