நோயின்றி வாழ...

Author: தோழி / Labels: , ,

உயிரினங்களுக்கு உணவே பிரதானம். எதை உண்கிறோம், எப்படி உண்கிறோம் என்பதில்தான் உடலுக்கு வலுவும் நோவும் வருகிறது. இந்த எளிய உண்மையை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். இது தொடர்பான தெளிவான தீர்வுகள் நம்மிடம் ஏராளமாய் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உணராது உடலையும், உயிரையும் வருத்திக் கொள்கிறோம் என்பது நகைமுரண்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கருத்தினை வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் 
கழிபேர் இரையான்கண் நோய்.

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும், அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.

உடலுக்கு ஒத்து வராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய் வருகிறது. இதையும் வள்ளுவ பெருந்தகை நறுக்கென சொல்லியிருக்கிறார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம் மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

இத்தனை தெளிவான வரையறையை என்றைக்கோ நம் முன்னோர்கள் தீர்மானமாய் சொல்லியிருந்தாலும் இதன் தெளிவுகள் நம்மில் பலருக்கும் தெரியாதவை., அத்தகைய சில நோயணுகா விதிகளை தொகுப்பதே இன்றைய பதிவின் நோக்கம். தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இருந்து தொகுக்கப் பட்ட தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி பாடல்களை தவிர்த்திருக்கிறேன். பாடல்களை பின்னூட்டத்தில் வெளியிடுகிறேன்.

தேரையர் அருளிய நோயணுகா விதிகள்.

மலசலங்களை அடக்காமலும், பெண் போகத்தை விரும்பாமலும், உண்ணும்போது காய்ச்சிய நீரையும், பசுமோரை அதிகமாகவும், நெய்யை உருக்கியும் உண்பவர்கள் பேரைச் சொன்னாலே வியாதிகள் நீங்கிவிடும் என பொது விதியாக சொல்கிறார்.

மேலும்...

பசுவின் பாலையே அருந்த வேண்டுமாம். எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை  உட்கொள்ளும் நாட்களில் வெந்நீரில் குளிப்பது உடலுக்கு நன்மை கொடுக்குமாம்.

பகலில் உறங்குவதும், தன்னை விட வயதில் மூத்த மாதரை சேர்வதும், இளவெயிலில் உலவுவதும், மலசலங்களை அடக்குவதும், சுக்கிலத்தை அடுத்தடுத்து விடுவதும் உடலுக்கு தீமையைக் கொடுக்கும் என்கிறார். 

இடதுகையை கீழாக வைத்து படுப்பதும், புளித்த தயிரை உண்பதும், பெண்களுடன் மாதத்திற்கு ஒருதடவை மட்டுமே சேர்வதும் உடலுக்கு நன்மையை கொடுக்கும். 

மூல நோயை உண்டாக்கும் பதார்த்த வகைகளை தவிர்க்க வேண்டும். முதல் நாள் சமைத்த கறியை ஒரு போதும் உண்ணக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் உண்பதும், உணவு உண்டதும் பகலில் உறங்குவதும், பசிக்காது உணவு உண்பதும் உடலுக்குத் தீமையைக் கொடுக்கும்.

மிகுந்த தாகம் உண்டானாலும் உணவு உண்ட பின்னரே நீர் அருந்த வேண்டும். அதன் பின்பு அருந்தக் கூடாது. உணவு உட்கொண்ட பின்னர் சிறிது தூரம் நடத்தலும். ஒன்றரை மாதத்திற்கு ஒருதடவை நசியஞ் செய்துக் கொள்வதும், மாதத்திற்கு நான்கு தடவைகள் சவரஞ்செய்து கொள்வதும், மூன்று நாட்கொரு தரம் கண்களுக்கு மையிட்டுக் கொள்வதும் நன்மையை கொடுக்குமாம். 

கருணைக்கிழங்கைத் தவிர மற்றய எந்த கிழங்குகளை உண்பதும், நள்ளிரவில் கஸ்தூரி முதலிய வாசனாதி திரவியங்களையும், பூக்ககளையும் பயன்படுத்துவதும், பெண்கள் நடக்கும் போது பறக்குந் தூசி நம் மீது படும்படி நெருங்கிச் செல்வதும் தீமையைக் கொடுக்குமாம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மரங்களின் நிழல் இவைகளில் தங்குவது கூடாதாம், உட்கொண்ட உணவு  சீரணிக்கும் காலத்தில் புணர்ச்சி செய்வதும், நகத்திலிருந்து தெறிக்கும் நீரும், தலை முடியில் இருந்து தெறிக்கும் நீரும் நம்மீது படுமாறு அவைகள் தெறிக்கும் இடத்தில் இருப்பதும் தீமையைக் கொடுக்கும்.

மாலை நேரத்தில் உணவு உண்பதும், உறங்குவதும், மலசலம் கழித்தலும், புணர்வதும், அழுக்கேறிய ஆடைகளை நீக்குவதும், தலை சீவுவதும் தீமையைக் கொடுக்கும். மேலும் இந்த மாலை நேரத்தில் பசுவையும், முன்னோர்களையும், குருவையும் வணங்கி நிற்பது நன்மையைத் தருமாம்.

இத்தகைய நியதிகளை கடைப்பிடித்து வாழ்பவர்கள் இருக்கும் இடத்தில் எமனுக்கு வேலை ஒன்றும் இருக்காது என்கிறார் தேரையர்.

எளிய விதிகள்தானே, யாரும் பின்பற்றலாம். நவீன மருத்துவமும் தற்போது இத்தகைய கருத்துக்களையே முன்மொழிகிறது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

பிற்சேர்க்கை

நண்பர்களே,

இன்றுடன் சித்தர்கள் ராச்சியம் வலைப்பதிவு தனது 700 வது பதிவினை நிறைவு செய்கிறது. முன்னெப்போதும் சொல்லி வந்ததைப் போலவே இத்தனையும் உங்கள் அனைவரின் அன்பினாலும், ஆதரவினாலும், மேலான குருவின் வழிகாட்டலினாலுமே சாத்தியமாயிற்று.

குருவருள் அனுமதிக்கும் வரை இந்த முயற்சி தொடர்வேன் என்பதை மட்டும் கூறி, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.  

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

32 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து கருத்துக்களும் குறள்களும் அருமை...
நன்றி...

Suresh said...

சித்தர் பெருமக்களை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் பதிவுகள் மிகவும் உறுதுணையாக உள்ளன. உங்கள் பணி தொடர்ந்து சிறக்க சித்தர் பெருமக்களையும் எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

தோழி said...

திண்ண மிரண்டுள்ளே சிக்க வடக்காமற்
பெண்ணின்பா லொன்றைப் பெருக்காம - லுண்ணுங்கா
னீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலிய ரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்
மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினுமருந்தோம்
ஞாலந்தான்வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே

உண்பதிருபொழுதொழிய மூன்றுபொழுது உண்ணோம்
உறங்குவதிராவொழியப்பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்
மண்பரவுகிழங்குகளிற்கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே

ஆறுதிங்கட்கொரு தடவைவமனமருந்தயில்வோம்
அடர்நான்குமதிக்கொருக்காற் பேதியுறைநுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்
வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கைதவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம்புட்பமிவைநடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்குமிடத்தே.

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில்வல்யோஞ்
சுகப்புணர்ச்சியசன பசனத்தருணஞ்செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை
வகுப்பெடுக்கிற சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே

kimu said...

வாழ்த்துக்கள் தோழி :)

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பயனளிக்க கூடிய குறிப்புக்கள்! பின்பற்றக்கூடியவையும் கூட பகிர்வுக்கு நன்றி தோழி!

tamilvirumbi said...

தோழி ,
ஆரோக்கியம் குறித்து தாங்கள் பகிர்ந்த அனைத்தும் தங்களின் பதிவுகளில் ஒரு மகுடம் போல் உள்ளது .
மிக்க நன்றி .

Karthik said...

வாழ்த்துக்கள் தோழி

Unknown said...

Nice

Ashwin said...

congrats

krishna said...

நன்றி.சிறிய திருத்தம்: மாலை நேரத்தில் உணவு உண்பதும், உறங்குவதும், மலசலம் கழித்தலும், புணர்வது, அழுக்கேறிய ஆடைகளை நீக்குவது, தலை சீவுவது நல்லதல்ல என்று இருக்க வேண்டும் என கருதுகிறேன். கவியில் விடுப்போம் என்றுதான் உள்ளது.

தோழி said...

@krishna

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. பிழையை இப்போது சரி செய்திருக்கிறேன்.

krishna said...

@தோழிநன்றி தோழி.

Unknown said...

முதலில் 700 ஆவது பதிவிற்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்! அசாதாரண பணி தங்களுடையது என்பது அனைவரும் அறிந்ததே! தங்கள் பணி தொடர்ந்திட வேண்டுகிறேன்!

அறிமுகமான நாளிலிருந்தே தங்கள் பதிவுகளை தவறாமல் வாசித்துவிடுவதுண்டு! பணி நிமித்தம் மற்றும் அவ்வப்போது நானும் பதிவுகள் எழுதுகொண்டிருப்பதால் சில நேரங்களில் மட்டுமே தங்கள் பதிவுகளுக்கு கருத்திட வாய்ப்பு கிடைக்கிறது!

Unknown said...

ஆண்டாண்டு காலமாய் நம் முன்னோர்கள் சொல்வது எண்ணவெனில் நோயற்ற வாழ்வுக்கு பசித்த பின் உன்னுதலே நன்று என்று அதைத்தான் இப்பதிவிலும் நான் காண்கிறேன்! தொடரட்டும் தங்கள் செயற்கரிய பணி!

Unknown said...

பரப்பான தலைப்பு, திரட்டிகளின் பதிவை இணைத்தல், காமெடி மொக்கை என்று எதுமே இல்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உபயோகமான பதிவுகள் எழுதிக்கூட ஒருவரால் வெற்றிபெற முடியும் என்பதற்கு உதாரணமாய் பதிவுலகில் இருப்பது எனக்கு தெரிந்து தாங்கள் ஒருவர் தான்!

எவ்வளவோ எழுதினேன்.., அதை புகழ்ச்சி என்று நீங்களும் பிறரும் எண்ணக்கூடும் என்பதால் அத்தனையையும் தவிர்த்துவிட்டேன்!

தங்களது 700-ஆவது பதிவு என்ற மகிழ்ச்சியில் நானும் பங்குபெற்று மகிழ்கிறேன்! தங்களது பணி எப்போதும் தொய்வின்றி தொடர இறைவனை வேண்டுகிறேன்!

என்றென்றும் நேசங்களுடன் வரலாற்று சுவடுகள்!

Unknown said...

அனைத்து கருத்துகளும் அருமை . அனைவரும் கடைபிடிப்பது மிகவும் எளிது . நன்றி .

Unknown said...

தோழி 700 பதிவுக்கு வாழ்த்துகள். மேலும் உதவி மற்றும் தேடல் உதவி தேவைபட்டால் சொல்லுகள் முடிந்தவரை செய்கிறோம்.

Saravanan said...

nandri tholi

Anonymous said...

arumaiyaana thagavalgal !

vaazhthukkal mattrum nandriyum !

revathy said...

nice mam.

Akilan said...

really awesome your blog

Bogarseedan said...

congratulations

Anonymous said...

nice one...please post medicine for DIABETES thozhi.....PLEASE!PLEASE!PLEASE!

Unknown said...

குரு அருளுடன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Biosaravanan said...

Dear Sister, Best wishes for your kind service. Can you find and share some treatment for blood pressure and kidney failure. Please.................

sangari ramesh said...

very nice and amazing..!!!

Unknown said...

Ungal anaithu pathivigalum arumai

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!
பல குறிப்புகள் பின்பற்றக்கூடிய வகையில் தான் உள்ளன.
பகிர்விற்கு மிக்க நன்றி !

s.chithambaranathan said...

மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்!

murugan said...

சரியாக உள்ளது // மாலை நேரத்தில் உணவு உண்பதும்,உறங்குவதும், மலசலம் கழித்தலும்,புணர்வதும், அழுக்கேறிய ஆடைகளை நீக்குவதும், தலை சீவுவதும் தீமையைக் கொடுக்கும்.//.

murugan said...

very good information, sister......

murugan said...

குரு அருளுடன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Post a comment