பூட்டினை உடைக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: , ,


சித்தர்கள் அருளிய ஜால வித்தைகள் வரிசையில் இன்று பூட்டினை உடைக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். 

ஆம்!, பூட்டினை உடைக்கும் ஜாலம்தான். எதற்காக பூட்டை உடைக்க வேண்டும்?, அதற்கான அவசியம் ஏன் வந்தது என்பதெல்லாம் நமக்கு ஆர்வத்தினை தூண்டும் கேள்விகள். போகர் அருளிய இந்த ஜாலவித்தைக்கு "கருடன் குஞ்சு வித்தை" என்று பெயர். 

பூட்டுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு?, பதில் போகர் அருளிய "போகர் 700"  என்ற நூலில் இருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

வாங்கியே மந்திரத்தினாலே மைந்தா மகத்தான
இலை கசக்கி விலாங்காணி தன்னில்
ஓங்கியே பிழிந்திடவே தெறிக்கும் இன்னம்
உரைக்கின்றேன் கருடனிட குஞ்சு பார்த்து
ஓங்கியதன் கால் விலங்கிட்டப் புறம் போனால்
உள்ள பெருங்கருடன் கந்து மூலி கொண்டு 
தாங்கியே எடுத்து வந்த கூட்டில் வைக்கத்
தலை தெறிக்கும் குஞ்செல்லாம் பறந்து போமே

பறந்துபோம் அக்கூண்டை எடுத்து வந்து
பாங்கான தணல் மூட்டிப் பார்த்தாயானால்
சிறந்ததொரு மூலிகைதான் வேகாது நிற்கும்
சிவசிவா எடுத்து அதனைப் பதனம்பண்ணு
கறந்திட்ட பால்போல் வெள்ளையாய்ச் சொன்னேன்
காட்டாதே தலைதெறிக்கும் இன்னம் ஒன்று

குஞ்சுடன் இருக்கும் கருடனுடைய கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து, தாய் கருடன் இல்லாத நேரத்தில் கருடனின் குஞ்சின் காலில் விலங்கிட்டுவிட்டு தூரமாகச் சென்று கவனிக்க வேண்டுமாம். தாய்க் கருடன் கூட்டிற்கு வந்து குஞ்சின் நிலமையை பார்த்துவிட்டு, வெளியே பறந்து சென்று, மூலிகை ஒன்றை எடுத்து வந்து கூட்டில் வைக்குமாம் அப்போது விலங்கானது தெறித்துப் போகுமாம். அப்போது குஞ்சு தாய்க் கருடனுடன் சுதந்திரமாய்ப் பறந்து போய்விடுமாம்.

குஞ்சுகள் பறந்து போனதும் அக்கூட்டை பத்திரமாக எடுத்து வந்து எரிக்கவேண்டும் என்கிறார். அப்படி எரித்தால் அந்த குறிப்பிட்ட மூலிகையைத் தவிர மற்றதெல்லாம் எரிந்து போய்விடுமாம். அப்போது அந்த மூலிகையை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டுமாம். அந்த மூலிகையைப் பயன்படுத்தி எந்த உலோக பூட்டுக்களையும் தகர்க்கலாம் என்றும் மேலும் அந்த மூலிகையை வைத்து பல சித்துக்கள் செய்யலாம் என்றும் சொல்கிறார்.

இதொரு தகவல் பகிர்வே....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

20 comments:

arul said...

nice post

Unknown said...

ஆச்சர்யமான தகவல்!

Anonymous said...

ஆச்சர்யமானத் தகவலாக உள்ளதே !
பகிர்விற்கு நன்றி !

naveenkumar said...

Hi Thozhi,

Athai sanjeevi mooligai entrum solvarkal kelipatrikiren ,athai odum thanneril potal ethir thisai noki selumam.

Unknown said...

இப்படி பூட்டை திறந்து கொள்ளையடிக்க ஐடியா தரீங்களே? போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணீட மாட்டாங்களா?

”தளிர் சுரேஷ்” said...

அதிசயத் தகவல்! சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

revathy said...

VERY NICE MAM.

Unknown said...

அதிசய தகவல் . நன்றி

Narayanan said...

@naveenkumar
Yes.I too heard the same way as Naveenkumar told

S.Puvi said...

அன்பிற்கினிய தோழி,

இத்தகவல் திருடர்களுக்கு சாதகமாக அமையக்கூடும் என நினைக்கின்றேன்.
இதில் கருடன் என்று கூறியிருக்கின்றீர்கள் ஆனால், சிலர் செண்பகம் என்று கூறுக் கேள்விப்பட்டிருக்கின்றேன். செண்பகம் கருடன் இனத்தை சார்ந்ததா? தெளிபடுத்த முடியுமா?

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி...

stylesuresh said...

atchariyamana thagaval than but ippo than karudan kidayathe

Ananth Sozhan said...

wonderful, keep writing and try to making a Youtube video(english) which could really reach millions of ppl. If required i can also help you.

Unknown said...

Surprising our Thozhi could not understand this particular lock opening is not to be taken verbatim. He talked about the jeevan locked in the worldly life. Garuda in otherwords is greedy. Locking the leg of the baby garuda is controllig the desire, before it becomes old , greedy, like garuda, because once it is becoming avaracious it will try any means to achieve it. Your desire to be to unlock your bondage with the same desire of getting unlocked such that its mother greediness, in other words the stronger desire garuda will find a Mooligai, Moolam means beginning. The mind will go inwards. The more it goes inward, finally it will find something, white, after burning all other desires, which is nothing but the pure soul uncorrupted by worldly pleasures. Once this is achieved, you can achieve anything. Thozhi, I think, we can think in this line also, as any siddhar will not speak in plain terms. If I am wrong , you have the authority to forgive me, because you are a knowledge bank.

SURI BEN NOAH said...

Sorry for butting in but after reading this post, I felt I had to add my two cents worth here. Since what I wish to convey can only be best understood in Tamil, I have used google transliteration to convey my comment. I therefore request readers to forgive if there are any mistakes in spelling or grammar.

"போகர் தன் நூலில் கூறியுள்ளவை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் எல்லா வார்த்தைகளுக்கும் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இவற்றை அகம் என்றும் புறம் என்றும் இருவகையான அர்த்தங்கள் என்று உணர வேண்டும். இன்றைய தமிழர்கள் தமிழை புறத்தில் மட்டும் புரிந்து கொள்கின்றனர். போகர் போன்ற யோகவான்கள் எழுதிய அனைத்துநூல்களிலும் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. அவர் கூறிய பூட்டு நம் உடலினுழ் இருக்கும் மேல்வாசலை திறக்க பயன்படும் பூட்டே.

போகர் சூட்சுமமாக கூறியதை இன்றைய தமிழர்கள் உணரவில்லை. புறத்தில் உள்ள பொருள் ரீதியான அர்த்தத்தையே அறிந்துள்ளனர். ஓம் என்னும் பிரணவமந்திரத்தை உணர்தவர்களே போகர் கூறியுள்ள உண்மைப்பொருளை உணரமுடியும். அவர்களே நம் உடலினுள்ளும் கருடன் வசிகின்றான் என்பதை அறிய முடியும்."

பிழை இருப்பின் மன்னிக்கவும்

KABI the STAR said...

தோழி ,தயவு செய்து தாங்கள் எனக்கு சஞ்சீவி முலிகை பற்றய தங்களின் தெளிவை எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் .....

Garuda sanjeevi sales said...

I have garuda sanjeevi root ,length 7"inch .feel free contact me : 9626668555

Garuda sanjeevi sales said...

I have sales garuda sanjeevi root. Kntact : 9626668555

Garuda sanjeevi sales said...

I have garuda sanjeevi root ,length 7"inch .feel free contact me : 9626668555

Garuda sanjeevi sales said...

I have garuda sanjeevi root ,length 7"inch .feel free contact me : 9626668555

Post a comment