மரணத்தை வெல்லும் வேம்பு கற்பம்!

Author: தோழி / Labels: ,

நமது உடலானது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து கூறுகளால் ஆனது என்பதை முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். உடலில் இவை விரவியிருக்கும் விகிதங்களைப் பொறுத்து உடலை வாதம், பித்தம், சிலேத்துமம் என மூன்று வகையாக நமது முன்னோர்கள் பகுத்திருக்கின்றனர்.. இந்த விகிதங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே நோயாக வெளிப்படுகிறது. இதை கவனித்து சரி செய்யாத பட்சத்தில் நோய் முற்றி கடைசியில் மரணம் நிகழ்கிறது. 

மரணம், இதை நம்மில் யார்தான் விரும்புவோம். மரணத்தோடு போராடுவதே நம்முடைய வாழ்க்கை என்று சொல்கிறவர்களும் உண்டு. ஒரு வகையில் இதுவும் உண்மைதான். மரணத்திற்கு எதிரான போராட்டத்தை மனித குலம் காலம் காலமாய் செய்து கொண்டுதான் இருக்கிறது. இறுதி வெற்றி மரணத்திற்குத்தான் என்றாலும் அதைத் தள்ளிப் போடுவதில் நவீன அறிவியலின் துணையோடு நாம் கணிசமாய் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

இப்படி வெல்லவே முடியாத மரணத்தையும் வெல்ல முடியும் என்று உலகிற்குச் சொன்னவர்கள் நம் சித்த பெருமக்கள். இந்த மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் வழிவகையினை சித்தர்கள் காயகற்பம் என்று குறிப்பிடுகின்றனர். இவை இரண்டு வகைப்படும் அவை மருத்துவ காயகற்பங்கள், யோக காயகற்பங்கள் என அறியப் படுகின்றன. இது பற்றி ஏற்கனவே நாம் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள்/ தேவையுள்ளோர் அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இன்றைய பதிவில் அத்தகைய மருத்துவ காயகற்பம் ஒன்றினைப் பார்ப்போம். போகர் தனது "போகர் 7000" என்னும் நூலில் இந்த முறையினை விளக்கி இருக்கிறார். 

சஞ்சீவி யாகுநூற் றாண்டின் வேம்பைச்
சதைப்பட்டை வெட்டி வந்து நிழல் உலர்த்தித்
துஞ்சீவி இடித்துச் சூரணமே செய்து
சுத்தமாங் கருங்குன்றிச் சாறு வாங்கிப்
பஞ்சீவி ஐந்துவீசைப் பாவனமே பண்ணிப்
பரிதிமுன் பரப்பிவடி கட்டிக் கொண்டு
நஞ்சீவி கற்கண்டு நாலில் ஒன்று சேர்த்து
நலமாக மண்டலந்தான் கொண்டி டாயே.

- போகர்.

கொண்டிட்டால் வயிரம்போ லிறுகுந்தேகம்
குறிப்பான கண்ணிரண்டுஞ் சிவப்புமாகும்
உண்டிட்டால் ஊழிவினைப் பயனும்போகும்
உகாந்தமாங் கற்பவரை யிறுகுந்தேகம்
நண்டிட்டா னரம்பதுவு முறுக்குமாகும்
நரதிரையு மாறிப்போம் ஞானமுண்டாம்,
ஒண்டிட்டால் யோகத்தி லுறுதியாகும்
ஒருக்காலுஞ் சாவில்லை உண்மைதானே.

- போகர்.

நூறு வயதைக் கடந்த வேப்ப மரத்தினை சஞ்சீவி வேம்பு என்று குறிப்பிடுகிறார் போகர். இந்த சஞ்சீவி வேம்பின் சதைப் பிடிப்பான பட்டையை வெட்டி எடுத்து, அதனை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை இடித்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்த சூரணத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு அது மூழ்கும் வரை கருங்குன்றி மூலிகை சாறுவிடவேண்டுமாம். பின்னர் அதை வெய்யிலில் வைக்க சாறானது வற்றிப் போகும் என்கிறார். 

சாறு வற்றியபின்னர் மீண்டும் மூழ்கும் வரை கருங்குன்றி மூலிகை சாறுவிட்டு சாறு வற்றும் வரை வெய்யிலில் வைக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஐந்து தடவைகள் வைத்து பின் சூரணத்தை எடுத்து வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனுடன் நாலில் ஒரு பங்கு கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நாற்பத்தி எட்டு நாட்கள் உட் கொண்டால் உடம்பு உறுதியாகும், கண்கள் சிவப்பாகும், ஊழ் வினைகள் போகும், நரம்புகள் முறுக்கேறிப்போகும், நரை திரை அனைத்தும் நீங்கி ஞானம் உண்டாகும். யோகம் செய்வதற்கான உறுதியான மனநிலை எற்படும் என்று சொல்லும் இவர் இதனை உண்டவர்களுக்கு ஒரு நாளும் மரணம் இல்லை என்றும் சொல்கிறார். இந்த கற்ப முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

25 comments:

Anonymous said...

nice information.thank you.i sent a mail.please see and sent reply.

திண்டுக்கல் தனபாலன் said...

பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டதுண்டு... உங்கள் பதிவின் மூலம் தெளிவாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றி தோழியே..!

யோகம் said...

கருங்குன்றி மூலிகை என்றால் என்ன?

Anonymous said...

இதை செய்து பார்த்து முயற்சிக்கா விடினும்
பல நல்ல தகவல்கள் தந்து சென்றது.
எந்த வகையிலாவது வேம்பை , மூலிகைகளை
பயன்படுத்துவோம். பலன் பெறுவோம்.
நன்றி !

ARIVU KADAL said...

வேம்புவின் மகிமையினை அனைவரும் உணரும் வகையில் இப்பதிவினை தந்துள்ளீர் நன்றி.

Unknown said...

நல்ல தகவல் நன்றி .

sse said...

அன்புள்ள தோழி,
பல பேர் ஒரே விஷயத்திற்கான விளக்கங்கள் கேட்டால் தயவு செய்து
வெளிப்படுத்தக்கூடியதானவைகளை தெரியப்படுத்தலாமே?தவறு
ஒன்றும் இல்லையே? தவறாக நினைத்தாலும் பரவாயில்லை.
குன்றிமணியில் கருப்புசிவப்பு கலந்தது எங்கும் கிடைக்கும்.வென்குன்றிமணி
முழுவதும் வெள்ளையாக இருக்கும்.அழகர்கோயில்மலை மேல் உள்ள
பண்ணையில் மற்றும் பிற இடங்களிலும் கிடைக்கும்.கருங்குன்றிமணி
முழுதும் கருப்பாக இருக்கும்.ஆனால் இது அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.
நற்பவி ஹரி

arul said...

superb information

sse said...

அன்புள்ள தோழி மற்றும் நண்பர்களே நண்பிகளே
ஆண்டவர் தயவினால் அவர் உதவினால் அவர் அனுமதியுடன்
கூடிய விரைவில் நான் ஒரு மூலிகை பண்ணை அமைக்கலாம்
என்று இருக்கிறேன்.தற்போது சிறிய அளவில் பயிர் செய்து வருகிறேன்.
சற்று பெரிய இடத்திற்கான தேடலில் இருக்கிறேன்.
ஆண்டவர் சித்தப்படி நடக்கட்டும்.நற்பவி

Narayanan said...

உங்களுடைய போகர் கற்பம் நூலின் மூலம் இதை படித்து 100௦௦ வயது உடைய வேம்பு மரத்தின் பட்டையை எடுத்து வைத்து உள்ளேன்.
கருன்குன்றி தேடி கொண்டுளேன்.
கருன்குன்றி என்பது கருப்பு குண்டுமணி இலை சாரா?

மு.சரவணக்குமார் said...

பிள்ளையார் சதுர்த்தியின் போது வாங்கும் புதுப் பிள்ளையாரின் கண்களில் கறுப்பும்,சிவப்புமாய் ஒரு மணியை பொறுத்தித் தருவார்களே அந்த விதையின் செடிதான் கருங்குன்றி. மேலும் விவரங்கள் இந்த இனைப்பில்

http://en.wikipedia.org/wiki/Abrus_precatorius

nadarasa sritharan said...

நல்ல தகவல்....

Ashwin said...

valuable share

Unknown said...

உங்கள் அனைத்து தளங்களிலும் கருப்பு வெள்ளையாகவே இடுகைகளை பதிவேற்றுகிறீர்கள். மற்ற வண்ணங்களையும் பயன்படுத்தலாமே?

பிடித்திருந்தால் ஏற்றுகொள்ளுங்கள்
நன்றி!

Unknown said...

Thank you

S.Puvi said...

சிறந்த தகவல். நன்றிகள். கருங்குற்றி மணி மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு பகுதியில் பார்த்திருக்கின்றேன்.

tamilvirumbi said...

தோழி ,
பாதுகாக்க வேண்டிய பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி .

Sara said...

Thozi, Naan neengal sollum kaya karpathai ellam anuga vendum endru ninaikiren anal pala mooligaigal patri yaridamum thagaval illai. Ella mooligaigalum kidaikum idam ondrai koorinal neengal ezuthiya palanai vida athiga punniyam ungallai serum.

Thavaraga ethum irunthal manniyungal.

En kelviviku pathil kodukindramaiku nandri.

Sara said...

Thozi, Naan neengal sollum kaya karpathai ellam anuga vendum endru ninaikiren anal pala mooligaigal patri yaridamum thagaval illai. Ella mooligaigalum kidaikum idam ondrai koorinal neengal ezuthiya palanai vida athiga punniyam ungallai serum.

Thavaraga ethum irunthal manniyungal.

En kelviviku pathil kodukindramaiku nandri.

Sara said...

Sitharakal blogirkum athai nirvagam seiyyum thozikum mikka nandri.

raman said...

Dear Thozi

I have white patches in my legs sparingly, is there any remedy given by our siddargal... if so please provide the details to enable me to stop spreading. I am look like ugly..... can u help...

raman

Unknown said...

karungkundri seed is toxic so please careful on this if any prepare....

Unknown said...

சகோதரி நன்றி
கீழ் உள்ள ப்லோகர் லிங்கில் சிறிது வாசித்து பாருங்கேளன் . தங்களுக்கு பிடித்த விஷயகளை நம் சமுதாய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களன் .http://omeswara.blogspot.in/
2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: தியானம்
2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: தியானவழி அன்பர்களின் அனுபவம்

Bairavam said...

Arputha thagaval

Unknown said...

Nanbargale.... Ithai yaravathu muyarchithu vettri kandeergala...

Post a comment