பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

Author: தோழி / Labels: , ,

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. 

பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.


ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம். 

இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer)  தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது. 

மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.

புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!

தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு...

தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே

மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும் என்கிறார்.

மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.

இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

29 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

S.Puvi said...

இத் தகவல் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. இப்படியான தகவல்கள் மூடிமறைக்கப்படுவதனால் தான் பல பிறழ்வு நடத்தைகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

Unknown said...

அருமையான தகவல்!

kuppusamy said...

'எழுத்தாணிப் பூண்டின் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்'.

இதுவும் ஆய்வுக்கு உட்பட்டதா?

Anonymous said...

thozhi nalla thagaval......thayavu seithu neeralivu noikanna marunthai edavum please

arul said...

very useful post

Unknown said...

Thalai mudi uthirvai kattupaduthavum, uthirntha pagangalil meendum mudi valaravum nammudaya sithargal ethaenum muligaigalai parinthurai thirukkirargala thozhi??

Unknown said...

Perumpalana makkal inraya kazha kattathil migavum pathika patta vishayangalil ithuvum ondru... Koonthal melinthu sottai engira nilayai adaiyamal irukavum meendum koonthal thailaikavum vazhi irupin, pagirnthukollumaru thalmaiyudan ketukolgiraen...

sse said...

அன்புள்ள தோழி,
நல்ல பதிவு.நிலகடம்பு எப்படி இருக்கும்,அதன் தற்போதைய
பெயர் என்ன என்றும் தெரியபடுத்தினால் மிகவும்
உபயோகமாக இருக்கும்.
மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ள தற்காலத்தில் அதற்கான
மருந்தும் தெரியபடுத்தினால் நல்லது.
தங்கள் பதிலை தவறாமல் தெரியபடுத்தவும்
நற்பவி என்றும் அன்புடன் ஹரி

Unknown said...

Mannikkavum , Naan Ungalai Oru Doter aaha Ninaithu Oru Question Ketkiren , Thayavu Seithu Mannikkavum, Aankalin Uruppai Periyathaga Matra Marunthu Irukkiratha , Irunthal Tholi Yennai Mannithu Antha Marunthai Koorungal

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

suthanthiram said...

Nalla thakaval payan petren nantri

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT SERVICE...GREETINGS FROM NORWAY...!!!

dinesh said...

what is Nilakadambu?. how can identify that?

nadarasa sritharan said...

நல்ல தகவல்....

tamilvirumbi said...

தோழி ,
இன்றைய காலகட்டத்தில் திருமணமாகி ,குழந்தை இல்லாத பெண்கள் ,ஹார்மோன் ஊசி போட்டுகொள்கின்றனர்.இதன் காரணமாகவும் மார்பக புற்று நோய் வருகிறது.
தங்களின் இந்த பதிவு பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் .மிக்க நன்றி .

bala said...

very good information sister

Balaji
Tirunelveli

Unknown said...

Nice to read and useful to see this kind of lines, will girls and ladies will follow this?

அ. வேல்முருகன் said...

இது போன்ற பதிவுகள் தவிர்க்க வேண்டியது என்பது என் கருத்து

மார்ப்பு அளவை பொறுத்து பால் சுரப்பதில்லை மேலும் பெண்ணின் மார்புக்கு இரண்டு பயன்பாடு மட்டுமே. மற்றபடி அது உடலின் ஓர் அங்கம்.

1. குழந்தைக்கு பால் கொடுப்பது
2. உறவின் போது முன் விளையாட்டாக உணர்ச்சியை தூண்டும் ஒரு பகுதி

Unknown said...

நன்று தோழி!

THIRUMAL said...

udal uyaramaka valara ethum marunthukal ullatha tholi

erunthall sollungal

Unknown said...

Arumaiyana oru pathivu, nandri

Unknown said...

where to buy nilakadambu please say.

avm said...

கடுகு எண்ணெய்யில் மாதுளம்பழத்தோளை போட்டு காய்ச்சி,அதை மார்பகங்களுக்கு மிருதுவாக தடவி
மசாஸ் செய்து வந்தால் விம்பி புடைத்து வரும்.

Unknown said...

entha nelakadambu enka kadakum

Unknown said...

very useful post

Unknown said...

நன்றி பயனுள்ள தகவல்

Unknown said...

நிலகடம்பு தற்போதைய பெயர் சொன்னால் நன்றாக இருக்கும்

Unknown said...

now indha plant name enna nu solunga pls

Post a comment