ஏகாதசி , துவாதசி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,

திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று ஏகாதசி, துவாதசி மற்றும் திரியோதசி திதிகளுக்கான பலன்களை பார்ப்போம். இந்த தகவல் யாவும் அகத்தியர் அருளிய "அகத்தியர் சோதிட காவியம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை.

ஏகாதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

ஆமெனவே காதசியில் ஜெனனமானோன்
அன்பாக குருவிடத்தில் பிரியமானவன்
தாமெனவே தனதான்னிய முடையோனாகும்
தக்கபடி தானுரைக்கும் நீதிமானாம்
நாமெனவே நாட்டினிலே யெவருமெச்சு
நளினமுடன் நேர்த்தியா னதுவேசெய்வன்
காமெனவே கல்வியினில் வல்லோனாவன்
காசினியில் யாவர்களு மதிக்கத்தானே.

ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் குருவிடத்தில் பிரியமுடையவர்களாகவும், தன தானிய முடையவர்களாகவும், தக்கபடி நீதி சொல்லும் நீதிமான்களாகவும், பூமியில் யாவருங் கண்டு மெச்சும் படியான காரியங்களை நேர்த்தியாக செய்பவர்களாகவும், கல்வியில் வல்லவர்களாகவும், உலகில் எல்லோரும் மதிக்கத்தகவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

துவாதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

தானெனவே துவாதசியில் ஜனனமானோன்
தானதர் மக்களது தழைக்கச் செய்வான்
நானெனவே நல்லகுண சீலமுள்ளான்
நளினமுள்ளான் மிக்கதோர் தனமுள்ளான்
கானெனவே நூதனமாங் காரியங்கள்
கண்டவர்கள் பிரம்மிக்க கருத்தாய் செய்வான்
மானெனவே மங்கையர்கள் மகிழநாளும்
மாரனைப்போல் புவிமீது விளங்குவானே.

துவாதசி திதியில் பிறந்தவர்கள் தானதர்மங்கள் செய்பவர்களாகவும், நல்ல குணமுடையவர்களாகவும், செல்வவளம் படைத்தவர்களாகவும், புதுமையான காரியங்களை அனைவரும் வியக்கும் வண்ணம் செய்கிறவர்களாகவும் இருப்பார்களாம். மேலும் ஆண்களாயின் பெண்கள் மகிழும்படியாக மன்மதனைப் போலும், பெண்களாயின் ஆண்கள் மகிழும்படியாக ரதிபோலும் இருப்பார்கள் என்கிறார்.

திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

வண்மையுடன் திரியோதசியில் ஜெனனமானோன்
வையமிசை தனவந்தனாக வாழ்வான்
பண்மையெனு மினத்தோர்க ளில்லாபாவி
பழிபுரிவான் யாவருக்கு மாகாலோபி
உண்மைதனை யொருபோது மோதமாட்டான்
ஓதுவதெல்லாம் பொய்யே யுறுதிகொள்வான்
தண்மையிலா மாந்திரீக னெனப்பேர் பூண்டு
தன்பெருமை தானோதித் திரிகுவானே.

திரியோதசி திதியில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், பொய்யும், புரட்டுமாய் காலம் தள்ளுகிறவனாகவும், வாக்குச் சுத்தமில்லாதவனாய் இருப்பான் என்கிறார். பொய்யாக தன்னை மாந்திரிகன் என்று சொல்லிக் கொள்ளும் தற் பெருமைக்காரனாயிருப்பான் என்கிறார்.

நாளைய பதிவில் கடைசி இரண்டு திதிகளான சதுர்தசி மற்றும் பௌர்ணமி திதிகளுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம். ஒரு வித்தியாசத்தை நன்றாக கவனியுங்கள் சதுர்த்தி திதி இல்லை சதுர்த்தசி திதி.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Vijayakumar said...

Thozhi,

In Thriyodhisi thithi Siddhars Say they always say only lies and live their life. Why there will be no one who lives truthfully . This information which is given here will hurt a lot those who are born in this thithi......

Anonymous said...

தோலை உரித்தார் போன்று எனக்கு கூறப்பட்டுள்ளது.

நன்றி சகோதரி.

இறைவன் என்றும் உங்களுடன்,
விவேகன்

Anonymous said...

எனது திதி துவாதசி...:D

Bogarseedan said...

this looks very general characteristics One can get specific details from birth charts . I am waiting for posts on reading birth charts.

Unknown said...

ammavasi ?? intha palan engae?

Post a comment