சப்தமி, அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,


திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று சப்தமி மற்றும் அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களை பற்றி பார்ப்போம்.

சப்தமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

அரையவே சப்தமியில் ஜெனன மானோன்
அதிகபல முடையதோ ரானதீரன்
நிரையான நிதியுளான் நீடும்பிரபு
நிந்தையிலான் தயாள குணமேயுள்ளான்
குரையிலான் கூருமொழி யுருதியுள்ளான்
குவலயத்தி லனைவருக்கும் நன்மையுள்ளான்
உரையவே யுற்றதோர் மெய்யிற்றானும்
ஓங்குமே க்ஷயரோக மென்றுசெப்பே.

- அகத்தியர்.

சப்தமி திதியில் பிறந்தவர்கள் அதிக வலு உடையவர்களாகவும், தீரர்களாகவும், செல்வம் உடையவர்களாகவும், பிரபுக்களாகவும், இரக்க குணம் உடையவர்களாகவும், உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர்களாகவும், உடலில் காசநோயை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

செம்பவே யட்டமியில் ஜெனன மானோன்
செந்திருவின் கடாட்சமது வுள்ளோனாவான்
ஒப்பவே யோங்கிடும் பிரவிச் செல்வம்
உதவியாஞ் சந்ததியும் விருத்தியாகும்
மெப்பவே மேதினிய லின்னோன்றானும்
மைந்தரினால் கீர்த்தியது மகிட்சியாகும்
தப்பவே க்ஷயரோகம் தன்னைவாட்டும்
தானுமே காமுகனாங்த் திரிவன் காணே.

- அகத்தியர்.

அட்டமி திதியில் பிறந்தவர்கள் திருமகளின் அருளைப் பெற்றவர்களாகவும், பிறவியிலேயே செல்வந்தராகவும், குழந்தைப் பேறு உடையவர்களாகவும், புத்திரர்களினால் புகழ் அடைபவர்களாகவும், காசநோயை உடையவர்களாகவும், காமுகர்களாகவும் இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் நவமி மற்றும் தசமி திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களை பற்றிய அகத்தியரின் தெளிவுகளை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

Bogarseedan said...

nice post

Anonymous said...

அங்கு பாதரசம் வாங்கலாமா?

revathy said...

nice mam

Inquiring Mind said...

எல்லாமே பாசிடிவான பலன்களே சொல்றீங்க.. நெகடிவாவும் நிறைய சொல்லியிருப்பாங்களே..

Unknown said...

neengal kooruvathu anaithum unmai thaana?
yean ketkiren yendral, anaithirkum oru paadal vaithirukeer, avai anaithum unmaiyil siththar yeluthiyathu thaana, siththarkal paadal yelithil yaaridamum poi serathu, apadi iruka ungaluku mattum yevvaru ethanai paadal kidaithathu, ungal blog i valarpathirkagava?
naan ungalai kutram koora villai, unmai makkaluku poga veandum yenpatharkaga ketean.
unmaiyaga irunthaal ungal pani arumaithaan.

nanmaiye nadakatum,

தோழி said...

@Sathish Nagarajan


உங்களுடைய சந்தேகங்கள் நியாயமானதே, பதிவுகளில் இணைக்கப்பட்டுள பாடல்கள் யாவும் முறையே தொகுக்கப் பட்டு புத்தகங்களாக அச்சிடப்பட்டிருக்கின்றன. அப்படியான புத்தகங்கள் உங்கள் ஊரில் இருக்கும் நூலகங்களில் இன்றும் தூங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றைத் தேடி பயன்படுத்திக் கொள்ளத்தான் நமக்கு நேரமில்லை.

மேலும் போகிற போக்கில் வெறும் தகவலை யாரும் சொல்லிவிட்டுப் போய்விட முடியும். தகவலின் உண்மைத் தன்மையை பொதுவில் அனைவரும் அறியத் தரவேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு பதிவிலும் சிரமம் கருதாமல் பாடல்களையும் ஆதாரத்திற்காக இணைத்திருக்கிறேன்.

krishnababuvasudevan said...

Really very good

Post a comment