அகத்தியர் தனது "சோதிட காவியம்" நூலில் அருளியுள்ள திதிகளுக்கான பலன்களின் வரிசையில் இன்றைய பதிவில் திரிதியை மற்றும் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களை பார்ப்போம்.
திரிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...
கூறப்பா திரிதியையில் ஜெனன மானோன்
குணமுளான் பயமுளான் சுத்த னாகும்
சீரப்பா யெத்தொழிலும் நிதானத் தோடு
சித்தமுடன் யோசித்து முடிக்க வல்லன்
பாரப்பா பிரபுவென யெவரு மெச்சப்
பலசாலி யாயுலகி லிருந்து தானும்
தேறப்பா தேவா லயங் காளுக்குத்
தேடியே தருமமது செய்கு வானே.
- அகத்தியர்.
திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.
சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...
வாகாக சதுர்த்தியில் ஜெனன மானோன்
வையமிசை யாவர்களு மகிழநல்ல
பாகாக மணிமந்த்ர வாதியாகி
பலருடைய சினேகமது பண்பாய்க் கொள்வன்
ஏகாக யெத்தொழிலு முடிக்க வல்லோன்
எழிலாகுங் காரிய சித்தி யுள்ளோன்
தாகாக தேசசஞ் சாரியாகி
தக்கதோர் கீர்த்தியது கொள்வான் பாரே.
- அகத்தியர்.
சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்த்ரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்தக் காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.
நாளைய பதிவில் பஞ்சமி மற்றும் சஷ்டி திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
2 comments:
குணம் இருந்து என்ன பலன் ,பணம் வேண்டும் வாழ்க்கை நடத்த mam .
nice post
Post a Comment