பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்.

Author: தோழி / Labels: ,


அமாவாசை அல்லது பௌர்னமிக்கு அடுத்தடுத்த நாட்களான பிரதமை மற்றும் துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம். இந்த தகவல்கள் அகத்தியர் தனது "சோதிட காவியம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை.

பிரதமை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

சீராரும் பிரதமையில் ஜெனித்தோன் றானும்
செய்நன்றி மறவாதான் சித்தி யுள்ளான்
பேராரும் புத்தியுள்ளான் பொருளு முள்ளான்
பொருமையுட னெத்தொழிலும் பொருந்துசெய்வான்
ஏராரு மெல்லோர்க்கும் நல்லோ னாவான்
எத்திசையுங் கீர்த்தியது பெற்று வாழ்வான்
சாராருஞ் சந்தோஷ சித்த னாகி 
சாதுவா யிருப்பனெனச் சாற்றுவாயே

அகத்தியர்.

பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்தச் செயலையும் சிந்தித்துச் சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கிச் சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள் என்கிறார். 

துதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

சாற்றவே துதியையிலே ஜெனித்தொன் றானும்
சத்தியவா னொருக்காலும் பொய்யே சொல்லான்
போற்றவே புகழுடையான் சொன்ன சொல்லைப்
பிறட்டியே யொருக்காலும் பேச மாட்டான்
தேற்றவே தன்னுடைய யினத்தார் தன்னை
தேடியே ரட்சிக்குந் திறமையுள்ளான்
ஏற்றவே எவ்வித முயற்சி யாலும்
எழிலாகப் பொருள் சேர்ப்பா னென்றுகூறே.

அகத்தியர்.

துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை இரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

நாளைய பதிவில் திரிதியை மற்றும் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களை பற்றி அகத்தியர் கூறியவைகளை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

arul said...

nice post

revathy said...

very nice mam.

Rajakumaran said...

Nice.

Vasanth kumar vajravel said...

No negative charactistic ?

geethasmbsvm6 said...

நான் பெளர்ணமி பிரதமை திதியில் பிறந்தவள். :)))))))

geethasmbsvm6 said...

தொடர

vgr1972 said...

Nice

vgr1972 said...

மனோன்மணியம் தொரபி பற்றி அறிய மிகவும் ஆவலுடன் இருக்குறேன்
விளக்கமுடன் தெரிய படுத்தவும்
பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
வடிவேல் காந்தி.

Unknown said...

nice post

Unknown said...

நன்றி

jana said...

தோழி இந்த திதி பலன்கள் அனைத்தும் மிகவும் நுட்பமாக சரியாக உள்ளது
தகவலுக்கு நன்றி !

Post a comment