இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.
ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனையும் படைத்தது.
பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு உதவி வரும் திரு. எம். சரவண குமார் அவர்கள் சீரும், சிறப்புடனும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.
முனைப்போடு உழைப்பவரே!
பங்குச் சந்தையிலும்
தமிழைப் பவனிவர வைத்தவரே!
எம் வயதிற்கொப்ப
உம் அனுபவங்களையும்
அனுபவங்களின் அறிவையும்
பதிவுகளில் பகிர்ந்தவரே!
இணையம் தந்த இமயமே!
துணையாய் இருந்து
உயர வழிகாட்டிடும்
உற்ற தோழரே!
சங்கடப் பொழுதுகளில்
உடனிருந்து உதவிசெய்து
சப்தமின்றி ஊக்குவிக்கும்
அன்பு நெஞ்சம்கண்டு
அகமகிழ்ந்து போற்றுகிறேன் உம்மை!
இவ்வினிய நன்னாளாம்
உங்கள் ஜனன நாளில்
குருவருளை நான் வேண்டுகிறேன்!
சிந்தை, எண்ணம்,
சொல், செயல்,
குடும்பம்,
வாழ்க்கை,
தொழில்
என அனைத்திலுமே
மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும்
நிம்மதியுடனும்
தொடர்ந்து
வெற்றி நடை போட
குருவருள் என்றும் உமக்கு
குறைவின்றிக் கிடைக்கட்டும்!
வாழ்த்தி வணங்குகிறேன்!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
11 comments:
வாழ வழிகாட்டிய வள்ளல் எனது பெருமைக்குரிய குரு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..,
சரவணன் அவர்களுக்கு சித்தர்கள் ரகசியம் வலைத்தளம் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
valthukkal saravanan.
திரு.சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வெங்கட்.
தோழி
தங்கள் நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். பிறந்த நாள் கவிதை மிக அருமை.
அன்புடன்
வேலன்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
தோழி !
தோழியின் அன்பிற்குரிய நண்பர் திரு எம்.சரவணகுமார்
அவர்களின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.அவர்
மென்மேலும் புகழ்பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என
"சித்தர் பிரபஞ்சம்"வலை தளம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
இமயகிரி சித்தர்
வாழ வழிகாட்டிய வள்ளல் எனது பெருமைக்குரிய குரு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..,
Vazgaa vallamudan, valthugal
Post a Comment