பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆச்சர்யமும், அருவெறுப்பும் தரக் கூடிய சில மருத்துவ முறைகள் உள்ளன. அப்படியான ஒரு மருத்துவ முறை பற்றியதே இந்த தொடர். தமிழில் "அட்டை விடல்" என அறியப் படும் இந்த மருத்துவ முறையினை ஆயுர்வேதத்தில் "ரக்த மோக்ஷ்ன்" என்றும் ஐரோப்பிய கண்டத்தில் "Hirudotherapy" என்றும் அறியப் படுகிறது.
அட்டைகள் என்பவை புழு இனத்தை சேர்ந்தவை. மழைக் காலங்களில் நமது வீட்டோரங்களிலும், நீர் நிலைகளின் அருகாமையிலும் இவற்றை காணமுடியும். தற்போதைய அறிவியல் வகைப்பாட்டின் படி 500 க்கும் மேற்பட்ட அட்டைகள் கண்டறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட சிலவகை மட்டுமே இந்த வகை மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.
அதென்ன அட்டைவிடல் என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும்.
மருத்துவ சிகிச்சை என்பது இரண்டு பெரும் பிரிவுகளாய் அறியப் படுகிறது. ஒன்று அக வைத்தியம், மற்றது புற வைத்தியம். அக வைத்தியம் என்பது மருந்தினை உள்ளுக்குள் உண்ணக் கொடுப்பதன் மூலம் சிகிச்சை அளிப்பது, மற்றது புற வைத்தியம். இது உடலின் மேற்பரப்பில் சிகிச்சை செய்வது. இது உலகில் உள்ள எல்லா வகை மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பல்வேறு புற சிகிச்சை முறைகள் கூறப் பட்டிருக்கிறது. அவற்றில் அட்டை விடல் என்பது ஒரு வகை சிகிச்சை முறை.
இந்த இடத்தில் ஒரு தகவலாக சித்த மருத்துவத்தின் புற சிகிச்சை முறைகளையும் பட்டியலிட விரும்புகிறேன். அவை கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், கட்டுதல், பீச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞ்சல், அசுத்த ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல் பசை, களி, சலாகை, சிட்டிகை என்பனவாகும்.
இவற்றில் அட்டை விடல் என்பது ரத்தத்தை உறிஞ்சக் கூடிய அட்டைகளை உடலின் மேற்புறம் விட்டு கடிக்க விடுவதன் மூலம் அளிக்கப் படும் சிகிச்சை முறையாகும். நோயின் தன்மை மற்றும் தீவிரத்தை பொறுத்து இந்த அட்டை விடல் உடலின் குறிப்பிட்ட பகுதியில் விட்டு அந்த இடத்தில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சிடச் செய்யும் முறையே அட்டை விடல் ஆகும்.
இந்த முறையில் இரத்தக் கட்டு, வீக்கம், அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தலைவலி,வாந்தி, மூட்டுவலி, தோல் வியாதிகள், பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சினைகள் போன்றவைகளை குணமாக்குகின்றனர்.
எல்லாம் சரிதான், இதில் சித்தர்கள் எங்கே வருகிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே...
விவரங்கள் நாளைய பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
nice post
புற மருந்துகள் 32 மற்றும் அக மருந்துகள் 32. இவற்றை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் தோழி.
நம் சித்தர்கள் எதையும் விட்டுவைக்கவில்லை போலவே ..!
அன்புள்ள தோழிக்கு என் முதற்கண் வணக்கம் . தாங்கள் தமிழ்க்கும் , தமிழர்களுக்கும் செய்யும் சேவைக்கு நன்றி என்று ஒரு சொல்லில் ஈடு செய்ய முடியாது. .. தாங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்யும் சேவை பல காலங்களுக்கு தொடர வேண்டும் அதற்காக என் முழு ஆதரவும் உண்டு என்று சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.....
நான் இன்று உங்களை நாடி வந்ததன் காரணம் பின்வருமாறு......
என் பெயர் சுரேஷ் நான் டெல்லி இல் வேலை செய்து வருகிறேன். என் உடன் பணி ஆற்றும் மற்றொரு நபருக்கு கடந்த இரு வருடங்களாக கண்ணில் ஒரு கோளாறினால் பார்வை பறிபோகும் நிலையில் உள்ளார்.அவர் பெயர் தினேஷ். வயது 25 . அவருக்கு சொல்லபடும் கோளாறு "choroiditis" ஆகும்.கடந்த இரண்டு வருடங்களாக பாதிக்கபட்டு அதற்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு பலனில்லாமல் இன்று முழு பார்வையும் பரி போகும் நிலையில் உள்ளார்.
தாங்கள் இந்த நோயை முழுவதுமாக குணபடுத்தி பார்வை பெறுவதற்கு தக்க சிகிச்சை முறையினை சித்தர்கள் அருளினால் சித்தர்கள் படல்கிளில் இருந்து ஆராய்ந்து கூற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
Post a Comment