மருந்து - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:


நமது உடல் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளின் கலவையே ஆகும். நமது முன்னோர்கள் இந்த விகிதங்களை கொண்டு ஒருவரின் உடலை வாதம் உடம்பு, பித்த உடம்பு, சிலேத்தும உடம்பு என மூன்றாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர். மேலும் நாம் உண்ணும் உணவே நமது உடலுக்கு வலுவையும், நோயையும் தருகிறது. இந்த இரு தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததுதான் பழந்தமிழரின் மருத்துவம். இதனை வள்ளுவர் பின் வரும் இரண்டே வரிகளில் விளக்குவது சிறப்பு.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

திருக்குறள் துவங்கி தொல்காப்பியம், புறநானூறு, கலித்தொகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திரிகடுகம் போன்ற நூல்கள் தமிழரின் மருத்துவம் பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றன. இவை தவிர அநேகமாய் எல்லா சித்தர் பெருமக்களும் மருத்துவம் பற்றிய தனித்துவமான நூல்களை அருளியிருக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தவரையில் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற கோட்பாட்டினை உடையவர்கள். 

இதனை இன்னமும் எளிமையாய் சொல்வதாயின் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத கூறுகளில் இரண்டு கூறுகள் இணைந்து ஒரு சுவையினை உருவாக்குகின்றன. இப்படி நமது உணவின் ஆறு சுவைகளும் ஏதேனும் இரு கூறுகளை பிரதிபலிக்கின்றன. நம் உடலின் தன்மைக்கேற்ப இந்த சுவை உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்.

மேலே சொன்ன முறையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது குறைபாடுகள் தோன்றும் போது அது நோயாகிறது. இந்த நோய்க்கான மருத்துவம் என்பது கூட பஞ்சபூதங்களின் சமநிலையை உடலில் மீட்டெடுப்பதாகவே இருக்கிறது. நோய் என்பது என்ன?, நோயாளியின் தன்மை அல்லது பாதிப்பு எத்தகையது?, அதை தீர்க்கும் வகை என்ன என்பதை அறிந்தே அதற்கான மருந்தை தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். இதையே வள்ளுவரும்...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்கிறார். சித்த மருத்துவத்தில் மருந்துகள் இரண்டு பெரும் பிரிவினில் அடங்குகின்றன. அவை முறையே, "அக மருந்து", "புற மருந்து" எனப்படுகிறது. உள்ளுக்கு சாப்பிடக் கூடியவை அக மருந்துகள் என்றும், உடலின் மேலே உபயோகிக்கக் கூடியவைகள் புற மருந்து என வகை படுத்தப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவும் முப்பத்திரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு....

அக மருந்துகள்..

1.சாறு, 2.கரசம், 3.குடிநீர், 4.கற்கம், 5.உட்களி, 6.அடை, 7.சூரணம், 8.பிட்டு, 9.வடகம், 10.கிருதம் அல்லது வெண்ணெய், 11.மணப்பாகு, 12.நெய், 13.இரசாயணம், 14.இளகம் இலேகியம், 15.எண்ணெய் அல்லது தைலம், 16.மாத்திரை, 17.கடுகு, 18.பக்குவம், 19.தேனூறல், 20.தீநீர், 21.மெழுகு, 22.குழம்பு, 23.பதங்கம், 24. செந்தூரம், 25. பற்பம், 26. கட்டு, 27. உருக்கு, 28. களங்கு, 29.சுண்ணம், 30.கற்பம், 31.சத்து, 32.குருகுளிகை.

புற மருந்துகள்...

1.கட்டு, 2.பற்று, 3.ஒற்றடம், 4.பூச்சு, 5.வேது, 6.பொட்டணம், 7.தொக்கணம், 8.புகை, 9.மை, 10.பொடிதிமிர்தல், 11.கலிக்கம், 12.நசியம், 13.ஊதல், 14.நாசிகாபரணம், 15. களிம்பு, 16. சீலை, 17. நீர், 18. வர்த்தி, 19. சுட்டிகை, 20.சலாகை, 21.பசை, 22.களி, 23.பொடி, 24.முறிச்சல், 25.கீறல், 26.காரம், 27.அட்டை விடல், 28. அறுவை, 29.கொம்பு வைத்துக் கட்டல், 30.உறிஞ்சல், 31.குருதி வாங்கல், 32. பீச்சு.

இவை பற்றிய விளக்கங்களை இனிவரும் நாட்களில் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

La Venkat said...

தோழி,
அட்டகாசமான துவக்கம்.
வாழ்த்துக்கள்
தோழன்
வெங்கட்.

arul said...

nice list

Senthil Kumar said...

நான் எதிர்பார்த்த தகவல் இது தான். மிக்க நன்றி தோழி...!

sujaykar said...

தோழியே உதவுங்கள்,
தங்களது தன்வந்திரி சித்தர் அருளிய நமது பல்லுக்கு நன்மை பயக்கும் தகவலை படித்தேன்.
எனக்கு ஏற்கனவே வலது கீழ் அரவைப்பல்லில் ஓட்டை விழுந்ததன் காரணமாக இது வரையிலும் மூன்று முறை பல்லை நிரப்பியுள்ளேன். மேலும் மேலும் நிரப்பிய இடம் கீழே அமுங்கிக் கொண்டே செல்கிறது.

தற்பொழுது என்ன காரணமோ தெரியவில்லை...எனது இடது கீழ் அரவைப்பல்லில் புதிதாய் ஓர் ஓட்டை ஏற்பட்டுள்ளது..
நான் கடந்த ஆறு மாதங்களாக "இந்தியன் பல்பொடியை"உபயோகித்து வருகிறேன்..
நான் பல் மருத்துவரிடம் சென்று பல்லை நிரப்புவதை தவிர வேறு வழி ஏதேனும் சித்தர்கள் அருளியுள்ளனரா?
தங்களது பதிலுக்காக காத்திருக்கும்,
இரா.சே.கார்த்திக்,
மதுரை
9894135560

Anonymous said...

உணவே மருந்து...

Unknown said...

Its very intresting

Bogarseedan said...

interesting post

Bogarseedan said...

interesting post

Raj Mokan said...

வாழ்க வளமுடன்
மிக சிறந்தப் பணியை துவங்கியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

Post a Comment