அட்டைகளை இனம் காணுதல்!, பாதுகாத்தல்!

Author: தோழி / Labels: ,


நேற்றைய பதிவில் அட்டைகளின் வகைகளைப் பற்றி பார்த்தோம். அவற்றில் நல்ல அட்டைகள் என வகைப் படுத்தப் பட்ட அட்டைகளே இந்த அட்டைவிடல் சிகிச்சைக்கு பயனாகும். இன்றைய பதிவில் சிகிச்சைக்கு தகுதியான நல்ல அட்டைகளை எப்படி இனம் காணுவது, அவற்றை எப்படி பாதுகாப்பது போன்ற தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

அட்டைவிடல் சிகிச்சைக்கு தகுதியான அட்டைகளின் வரையறையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

அஞ்சுவிரல் நீளத்தில் அட்டை விடலாகும்
மிஞ்சவே அட்டை விட வேண்டாம் – மிஞ்சி
கடிவாய் தினவின் கடுத்து வலி வீங்குந்
துடியாரு நல்லிடையாய்ச் சொல்.

இந்த மருத்துவத்திற்க்குப் பயன்படுத்தப்படும் அட்ட்டைகள் ஐந்து விரற்கடை நீளம் உள்ளனவாக இருக்க வேண்டும் என்கிறார். இந்த வரையறைக்கு உட்படாத அட்டைகளை கடிக்க விட்டால் அவை ஆபத்தை உண்டாக்குமாம்.

அட்டைகளில் ஆண் பெண் அறியும் விதம்...

அட்டையில் பெண்ணும் ஆணும்
அறிந்திட வேணு மாகில்
கொட்டியும் பதுமந் தானுங்
கூடவே நீரில் போட்டால்
அட்டையை விட்ட வாறே
ஆண்பது மத்திற் சேருங்
கொட்டியிற் பேசு சேருங்
குறியதனை யறிந்து கொள்ளே.

தாமரையும், கொட்டியும் கலந்துள்ள நீரில் இவ்வட்டைகளை விட்டால் ஆண் அட்டைகள் தாமரையில் போய் ஒட்டிக் கொள்ளுமாம். பெண் அட்டைகள் கொட்டியைச் சேருமாம். இந்த செயல்களைக் கொண்டு அட்டைகளின் பால் வகையை அறியலாம். 
                                                                                   
இப்படி இனம் கண்டு சேகரித்த அட்டைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றியும் அகத்தியர் விளக்கியிருக்கிறார்.

அட்டை தோற்றும் வகையதனை
அறியக் கேளாய் அரக்காம்பால்
கொட்டிக் கிழங்கு பசுமஞ்சள்
கோல கழுநீர் வார்த்தரைத்து
மட்டி தாகக் கரைத்ததிலே
வாய்த்த உருவைத் தேற விட்டுக்
கட்டிக் கொண்டுபோய்விடுவீர்
காலன் தவிர்க்குங் கண்டீரே.

அட்டைகளைச் செவ்வல்லி, கொட்டி, பசு மஞ்சள் இவைகளின் கிழங்கை அரைத்துக் கலந்த நீரில் விட்டு பாதுக்காக்க வேண்டும் என்கிறார்.

இதுவரை அட்டைகளைப் பற்றிய தகவல்களை பார்த்தோம். இனி வரும் நாட்களில் இந்த சிகிச்சை முறை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Unknown said...

வியப்பான தகவல்.!

Anonymous said...

யோகர் சுவாமிகளின் பாடல் புத்தகத்தின் பெயர் ”நற்சிந்தனை”.very good news

tablasundar said...

வனக்கம்
அட்டைகளை பற்றீய தொகுப்பு மிகவும்
பயனுள்ள தகவல்களை அளிக்கிறது,
மிக்க நன்றி
அன்புடன்
அன்பன்
நா.சுந்தர்

nagen said...

எங்கள் ஊரில் (மலேசியா) இந்த அட்டை விடல் சிகிச்சை முறையை மலாய் மக்கள் அளித்து வருகிறார்கள்.இங்கு ரப்பர் மர காட்டில் அதிகமாக காணலாம்.

sri sudarshana chakra said...

நீங்கள் எழுதிய இந்த மருத்துவ முறை மிகவும் அபூர்வமாக மறைக்கப்பட்டது . உங்களுக்கு எப்படி கிடைகிறது இந்த தகவல்யல்லாம் :) ...!! மற்றும் உங்களின் இந்த பதிவு நன்றாக இருக்கிறது.:) நனறி.

sse said...

தோழி மற்றும் வாசக நண்பர்களே,
ஆயுர்வேத மருத்துவத்தின் தெய்வமாக
வணங்கப்படும் தன்வந்திரி பகவான் தன்
வலது கையில் அட்டை ஒன்றை ஜபமாலை
போல வைத்திருப்பார்.ஏனென்றால் சுத்த
ப்படுத்துதல் முதல் கடமை என்பதை காட்டவே.
இந்த கோலத்தில் இவரது திருஉருவச்சிலையை
கோவை ஆரிய வைத்திய சாலை கோயிலிலும்
வைத்தீஸ்வரன் கோயில் உள்ளேயும் காணலாம்.
தன்வந்திரி பகவானே விஷ்ணுவின் அம்சமான
சித்தர் என்ற நம்பிக்கையும் உண்டு.
கருத்துரைகளை தெரிவிக்கலாம்.
என்றும் அன்புடன் சீனிவாசன்.

Anonymous said...

தயவு செய்து உங்களிடம் உள்ள 'நற்சிந்தனை' புத்தகத்தில் உள்ள பாடல்களை பிரசுரியுங்கள்.மிக விரைவில் சுவடியாக
பராமரிக்கப்படும் சித்தர் ஒருவரி்ன் நுாலாக்கி அனுப்புகிறேன்.
நன்றி
இப்படிக்கு
சித்தரின் பக்தன்
மதுஊரன்

srini srirangam said...

Dear thozhi!How is your health now? DANVANDHRI TEMPLE AT SRIRANGAM TOO.(SEPERATE SINNIDI NEAR THAYAR SANNIDI).HE HAS ATTAI IN HAND. HE IS ACTUALLY GOD OF MEDICINE. HE IS A DR. TO MAHAVISHNU TOO. HE CURES UNCURABLE DESEASES LIKE CANCER. TUMOUR ETC IF U DO ABHISEKAM FOR ONE DAY &ARCHANAI FOR 48DAYS.IT IS A MIRACLE. I AM TYPING FROM ANDROID MOBILE . SO SORRY FOR NOT TYPING IN TAMIL.SRINI SRIRANGAM

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நல்ல பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள்

Post a comment