அட்டை விடல் சித்தமருத்துவமே!!

Author: தோழி / Labels: ,


அட்டை விடல் என்பது தற்போது பல்வேறு மருத்துவ முறைகளின் ஒரு அங்கமாக இருக்கிறது. எனவே இது எந்த மருத்துவ முறையை சேர்ந்தது என்பது விவாதத்திற்கு உரியது. எனினும் தற்போதுள்ள மருத்துவ முறைகளில் காலத்தால் மிகவும் பழைமையானதான சித்த மருத்துவத்தில் இது பற்றிய தெளிவான விளக்கங்களும் வரையறைகளும் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில் நாம் இதனை தமிழரின் மருத்துவ முறையாகவே கருதிடலாம்.

அட்டை விடல் பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் நயனவிதி 500" என்ற நூலில் விரிவாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். இனி வரும் நாட்களில் அந்த தகவல்களை இங்கே பார்க்க இருக்கிறோம். இந்த அட்டை விடல் வைத்தியத்தின் நோக்கத்தை அகத்தியர் பின் வருமாறு கூறிப்பிடுகிறார்.

அட்டையின் விதிதனை
யறிய யாவருந் திட்டம்
தாகவே செப்ப வுன்னினேன்
மட்டமர் குழலி னாள்
வரன ளித்திடும் இட்ட
விநாயகன் இணையடி போற்றியே.

முன்னமே கேளட்டையின் குணந்தான்
மொய்குழல் மாதே நீ கேளாய்
அந்நா ளன்னம் பால்பருகும்
அது போல் வாங்கும் விஷநீரை
நன்னாள் பார்த்து நோயறிந்து
நயனந் தன்னில் விடுவாயால்
சொன்னோஞ் சொன்னோம் நாற்றிசையுந்
துலங்கச் சொன்னோஞ் சொன்னோமே

அன்னப் பறவையானது பாலில் கலந்திருக்கும் தண்ணீரை பிரித்து எடுத்து விடுவதைப் போல அட்டையானது நமது உடலில் உள்ள நஞ்சு நீரை பருகி குருதியை தூய்மை செய்கிறது என்கிறார். எனவே நோயின் தன்மை அறிந்து அதற்குண்டான நாளில் அட்டை விடல் செய்தால் நோய் தீரும் என்கிறார் அகத்தியர்.

அட்டை விடலின் நோக்கத்தை தெளிவாகச் சொன்ன அகத்தியர், அட்டையின் வடிவத்தையும் வரையறுத்திருக்கிறார்.

ஆதியோ தியவே தத்தில்
அட்டைக்கு மேனி யுந்தான்
ஏதெனில் பல்லு மூன்று
மியன்றஅஞ் சடுக்குத் தோலும்
ஓதிய முகமும் பச்சை
உதிரமுஞ் சிவப்பாய் பின்னை
தீதிலாப் பக்க மிரண்டும்
பருத்திடும் நரம்பு சேரும்.

அரவின் வாய்த் தேரை போன்றும்
அணிமழுத் தலையே போன்றும்
பருதியின் பைங்கண் போன்றும்
பல மணி சிதறி நாற்போல்
விரவியே பல் நெ கிழ்ந்து
மெத்ததெனக் கடிக்கும் அட்டை
கருதியே காலன் தன்னைக்
கட்டிடுங் காயந் தானே.

அட்டையின் உடலானது ஐந்து அடுக்கு தோலினால் ஆனது. மூன்று பற்களை உடையதாக இருக்குமென கூறுகிறார். மேலும் அதன் இரு பக்க ஓரங்கள் தடித்திருப்பதுடன் அதன் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இப்படி பட்ட அட்டையானது உடலை கடிக்க விட்டால் உடலை நோயின்றி காத்து எமனை நெருங்க விடாது செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் அட்டையின் வகைகளைப் பற்றிய அகத்தியரின் தெளிவுகளை பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

arul said...

nice and intresting

S.Puvi said...

புதுமையாகத்தான் இருக்கின்றது
நன்றிகள்

Unknown said...

மதிப்பிற்குரிய தோழி அவர்களே;
நான் யோகர் சுவாமிகளின் பாடல் புத்தகத்தை என்குருவருளால் பெற்றுள்ளேன்.எனது விருப்பம் என்னவெனில் இப்பாடல்கள்
அனைவருக்கும் கிடைக்க‌ வேண்டும் என்பதே.நான் 19.06.2011 அன்று கொழும்பு வருகிறேன்.அப்போது யோகர் சுவாமிகளின் பாடல் புத்தகத்தை
உங்களிடம் கையளிக்க முடியும் என நம்புகிறேன்.
please sent reply.
thank you.
இப்படிக்கு;
சித்தரின் பக்தன்

revathy said...

படிக்கவே அருவருப்பாக உள்ளது .ஆனால் இது உண்மை .தற்பொழுது பியுட்டி par lour இல் கால்களில் உள்ள வெடிப்பு clean பண்ண சிறு சிறு மீன்களை விட்டு கால்களை கடிக்க விட்டு பயன்படுத்துகிறார்கள் .by using the small fishes and they r removing unwanted dead skins.always old is gold only.
K.S.Revathi
chennai

revathy said...

படிக்கவே அருவருப்பாக உள்ளது .ஆனால் இது உண்மை .தற்பொழுது பியுட்டி par lour இல் கால்களில் உள்ள வெடிப்பு clean பண்ண சிறு சிறு மீன்களை விட்டு கால்களை கடிக்க விட்டு பயன்படுத்துகிறார்கள் .by using the small fishes and they r removing unwanted dead skins.always old is gold only.
K.S.Revathi
chennai

sse said...

யோகர் சுவாமிகள் , கடையிற்சுவாமிகள்,
சாது அப்பாதுரை போன்றவர்கள் இலங்கையில்
பெரிய ஞாநிகள் ஆவார்கள்.
சாது அப்பாதுரையின் "எந்த பொல்லாப்பும் இல்லை"
போன்ற வாசகங்கள் எழுத்தாளர் பாலகுமாரன்,
இசை அமைப்பாளர் இளையராஜா போன்றவர்களால்
சிலாகித்து குறிப்பிடபட்டது.உங்களது நூல்களை
தோழி வலைப் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
நன்றி சீனி

nagen said...

தங்களின் தகவல் அனைத்தும் நன்று.

Rockee said...

Nice info..

subasharivu said...

bayanulla thahavalkal

Post a Comment