வச்சிரகாய ஜாலம்

Author: தோழி / Labels: , , ,

சித்தர்கள் அருளிய ஜாலங்கள் பற்றிய தொடர் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இன்றைய பதிவில் தட்சிணாமூர்த்தி அருளிய வச்சிர காய ஜாலம் பற்றி பார்ப்போம். வச்சிர காயம் என்றது இந்திரனின் கையில் இருக்கும் வச்சிராயுதம் போன்ற உறுதி படைத்த தேகம் பெருவதற்கான ஜாலம். இதை ஒரு காய கற்ப முறை என்றும் சொல்லலாம்.

இந்த தகவல் தட்சிணாமூர்த்தி அருளிய "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

பலமான கற்பமிது மண்டலந்தானையா
பொச்சாலி யரிசி பச்சைப்பயறு மொன்றாய் சேர்த்து
வாமென்று பொங்கி தேக்கிலையில் கொட்டி
வாவின்பசும் பால்படிதா னுண்பீராகில்
போமென்றும் புளியாரை முப்பூவினுப்பும்
பேராக வதைக்கடைந்து உண்ணலா மைந்தா
நாமென்று மலைமிளகு காரமதுவாகும்
நண்பான பச்சைப் பயறு குழம்பதுவுமாமே

அமென்று இம்முறையில் மண்டலம் கொள்வீர்
யன்பான பித்தநீர் கும்பஸ்தனம் போல
வேமேதான் சலமேல்லாம் விழுந்தங்கே போகும்
விடுபட்டால் பித்தநீர் விந்து கல்லாகும்
நாமேதான் இந்தப்படி ஞாயமதாய் சொன்னோம்
நரைதிரையும் மற்றுப்போ மண்டலத்துக் குள்ளே
ஏமேதா மெழுகு வச்சிரக் காயமாகு
மியம்பினதோர் வச்சிரகாய சாலமாச்சே

நிலையான காயமதில் நோய்வருகாதையா
நிராமயத்தை தினந்தோறும் நின்றுகளிகூர்வாய்
அலையாதே யொருமனதாய் மண்டலங் கொள்வீரால்
ஆயுசுக்கு தினந்தோறும் பயமில்லை வயதுபதினாறாம்
குலையாதே நாய்போல வாழ்வைச் சேதமாக்கா
கூடுவா றோடே கூடாதே குறிப்பாக நில்லு
துலையாதே பெண்மாய்கை விட்டபோதையா
சொன்னதெல்லாம் மாடுமடா துதி பெறுவாய் நீயே

பொச்சாலி அரிசியையும், பச்சைபயறும் ஒன்றாக சேர்த்துப் பொங்கி அந்த சோற்றை, தேக்கு மரத்தின் இலையில் கொட்டி அதனுடன் ஒரு படி பசும் பாலை சேர்த்து உண்ண வேண்டுமாம். அப்படி உண்ணும் போது புளியாகீரை, முப்பூவின் உப்பு, காரத்திற்க்கு மலைமிளகு ஆகியவை சேர்த்து கடைந்து உண்ணலாமாம், பச்சைப் பயற்றை குழம்பிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டுமாம். இவை தவிர உணவில் வேறு எதனையும் சேர்க்கக் கூடாது என்கிறார் தட்சிணா மூர்த்தி..

மனதை தளரவிடாமல் ஒரு மனதாய் இந்த முறையில் ஒரு மண்டலம் தொடர்ந்து உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீரெல்லாம் வெளியேறி, பித்தநீர், விந்து எல்லாம் கல்லாகுமாம், அத்துடன் இந்த ஒரு மண்டலத்திற்குள் நரைதிரை யாவும் நீங்கி, உடல் மெழுகு போல் பளிச்சென வச்சிரமாகும் என்கிறார்.

இப்படி ஒரு மண்டலம் தொடர்ந்து உண்பவரின் உடல் அழியாது நிலைத்துவிடும் என்றும், அப்படி நிலைத்த உடலில் நோய் அணுகாது என்றும் கூறுகிறார்.மேலும் ஆயுளுக்கு பயமில்லாமல் இருப்பதுடன் என்றும் பதினாறு வயது போல் இருக்கலாம் என்கிறார்.

இந்த முறையில் பத்தியமாக பெண்சேர்கை தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். இந்த வித்தையை "வச்சிரகாய சாலம்" என்றே தட்சிணாமூர்த்தி கூறியிருக்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

18 comments:

வரலாற்று சுவடுகள் said...

உப்பு கூட சேர்க்கக்கூடாதோ?

KUKU said...

pochali arici means???

தோழி said...

@வரலாற்று சுவடுகள்

புளிப்புக்கு புளியாகீரையும், உப்பு சுவைக்கு முப்பூவின் உப்பும் பயன்படுத்த வேண்டும்.

Leo Saravanan said...

பொச்சாலி rice endran enna...............

வரலாற்று சுவடுகள் said...

@தோழி

விளக்கத்திற்கு மிக்க நன்றி சகோ ..!

Narayanan said...

@தோழி

pochali arisi enbathu pacharsi ya?

Lakshmi Narasimhan said...

பொச்சாலி அரிசி என்றால்?

தோழி said...

பொச்சாலி என்பது ஒரு வகையான நெல் ரகம். அது தற்போது பயிரிடப் படுகிறதா என்பது தெரியவில்லை. நாட்டு மருந்து கடைகளில் விசாரித்தால் விவரம் தெரியும்.

sse said...

அன்புள்ள தோழி
கருங்குருவை அரிசி எங்கு கிடைக்கும்.
என்றும் அன்புடன் சீனிவாசன்

sse said...

வெள்ளை காக்கானம்/கருப்பு காக்கானம் என்பது
புளு மற்றும் வெள்ளை சங்குபூவா?
பொன்முசுட்டை என்பதன் தற்போதைய பெயர் வட்டத்
திருப்பி,என்பதா அல்லது வேறு பெயர்கள் உண்டா என
என விளக்கம் அளிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

sse said...

பொன்னாவாரை ,பறட்டை,பேய் கொம்மட்டி,
காத்தொட்டி,மதமத்தை,கருஞ்செம்பை
,பால்குரண்டி,கட்டுக்கொடி,குதிரைவால்புல்லு,
உள்ளொட்டி/புறவொட்டி,சிறுமுன்னை,
கோழியவரை,செம்பசலை,வட்டதுத்தி,
நீர்மேல் நெருப்பு,மாவிலங்கு, கார்த்திகைகிழங்கு,
நாவிவேர்,நிர்விஷம்,காஞ்சுரை,ஓடுவை,
ஆனைக்கால்சுனை,பின்துடரி,செங்கத்தாரி,
வெண்சுண்டி,ஆரணமுரி,தேள்கொடுக்கு,
என்ற மூலிகைகள் தற்போது இருக்கிறதா?
அவற்றின் தற்போதைய
வழக்கில்உள்ள வேறு பெயர் தெரிவிக்க
முடியுமா மேலும் அடையாளம்
காணமுடியுமா?அவற்றின் botanical name
தேவை .தயவு செய்து தெரியபடுத்தவும்.
சதுரக்கள்ளி படம் தேவைபடுகிறது.
கிடைத்தால் பதிவிடவும்.

தோழி said...

@sse

பல்வேறு அரிய மூலிகைகளை தனது தோட்டத்தில் வளர்த்து அதன் அருமை பெருமைகளை இணையத்தில் பதிவாக்கிடும் அரும்பணியை பெரியவர் திரு. மூலிகைவளம் குப்புசாமி அவர்கள் செய்து வருகிறார். அவர் போன்ற அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் நீங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கான சரியான பதில் கிடைக்கும். அவரது வலைப் பதிவின் முகவரி

http://mooligaivazam-kuppusamy.blogspot.com/

SABARI said...

Nalla pathivu

sse said...

அன்புள்ள தோழி,
அவரது வலை எனக்கு முன்பே பரிச்சயம்.
விவரம் பெற முயற்சிக்கிறேன்
நன்றி சீனிவாசன் .க

சித்திரகுப்தன் said...

தமிழ் சமூகத்தின் நன்றி கலந்த வணக்கம்.
அருமையான பதிவுகள்.காலம் முழுவதும் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

சித்திரகுப்தன்
காலப்பெட்டகம் http://kaalappettakam.blogspot.in/

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

siddharvedhagurukulam siddharvedhagurukulam said...

மதிப்பிற்குரிய தோழி
முந்தய பதிவுகளில் க சீனிவாசன் என்ற அன்பர் சில வினாக்கள் எழுப்பி இருந்தார்
அதாவது குன்றியாரை என்றால் என்ன என்பது இதற்கு விளக்கம் சித்தர்கள் கூறும் மூலிகைகளில் குன்றி மற்றும் ஆரை என இரண்டு வகைகள் உள்ளன ஆனால் இம்மூலிகைகளிளிருந்து
தைலம் எடுக்க முடியாது எனவே சித்தர் பாடலில் உள்ள குன்றியாரை என்பது குன்றிவிரை என குறிப்பதாகும் இதிலிருந்து சுலபமாக குழித்தைலம் எடுக்கலாம் முன்பு காலங்களில் ஓலைச்சுவடிகளில்
எழுத்துக்களை கூட்டெழுத்து முறையில் எழுதியதால் ஒரு எழுத்து வேறு எழுத்தாகத்தோன்றும் இதில் ஒரு எழுத்து
பிழை வ என்பது ய என மாறிஉள்ளது நன்றி !

sse said...

Anbulla sithar vedha gurukulam,
Thagavalukku nandri
K.Seenivasan

Post a Comment