கனமான பொருட்களை இலகுவாய் தூக்கும் ஜாலம்.

Author: தோழி / Labels: ,

தட்சிணா மூர்த்தி அருளிய ஜால வரிசையில் இன்று கனமான பொருட்களை இலகுவாய் தூக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

ஆடவே யின்னமொரு கருவதனைக்கேளு
அப்பனே குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கெழிஞ்சியது போலேயப்பா
நன்மையுள்ளோர் கண்டறிவார் யென்றே
கூடியே அதைச் சுருட்டி மேலே
குணமான ஆள்பாரம் கல்லைவைக்க
ஆடியே பாத்திருக்க அந்தக் கல்தான்
அப்புறத்தில் போய் வீழும் பாரே

பாரடா கிராணமது தீண்டும் போது
அங்கிலி வம்நசி நசிமசி யென்றே
செயமாக ஆயிரத்தி யெட்டுரு
செபித்து மிக வேரை வாங்கி
திரமாக சிரசுதனில் வைத்து நீயும்
கலங்காமல் பாரமதை ஏற்றிப்பாரு
கருத்துடனே தான்தூக்க கனக்காதே
மார்க்கமாம் மூலிகை சாலம் தானே

கனக்காது உலக்கைமுதல் கட்டிலைய்யா
கனிவான பல்லக்கு கொம்பினோடு
அனக்காது இதுகள்எல்லாம் நோக்கும் போதில்
அவ்வேரை வாயிலிட்டு தூக்கிப் பாரு
இனைக்காது ஆனையைத்தான் வாலைப்பற்றி
இழுத்தாக்கால் பின்னகர்ந்து வரும் நீபாரு
நினைக்காது கல்லைத்தான் உதைத்தாயானால்
நகருமே பெரும்பாரம் பின்னோக்கித் தானே

மலைதாங்கி அல்லது குன்று தாங்கி என்றொரு மூலிகை இருக்கிறது. அதாவது ஒரு ஆள் பாரம் உள்ள கல்லை இந்த மூலிகையின் மீது வைத்தால் அந்த கல்லை இந்த மூலிகை புரட்டிப் போட்டு விடுமாம். நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த மூலிகையை வாங்க முடியும்.

இந்த மூலிகையை கண்டறிந்து, கிரகண நேரத்தில் "அங்கிலி வம் நசி நசி மசி" என்ற மந்திரத்தை 1008 உரு செபித்து அந்த மூலிகையின் வேரை பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். இந்த வேரை தலையில் வைத்துக் கொண்டு எந்த பாரத்தை தலையில் ஏற்றினாலும் கனமாக தெரியாது என்கிறார் தட்சிணா மூர்த்தி.

உலக்கை, கட்டில், பல்லக்கு போன்ற கைகளால் தூக்க வேண்டியிருந்தால் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு தூக்கினால் கனமாக தெரியாதாம். மேலும் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு யானையின் வாலை பிடித்து இழுத்தாலும் யானை பின்னோக்கி நகருமாம். அது போல பெரிய கல்லை காலால் உதைத்தாலும் அது நகர்ந்துவிடும் என்றும் சொல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே.... ஆர்வமுள்ளவர்கள், வாய்ப்புள்ளவர்கள் பரிட்சித்துப் பார்க்கலாமே....

இந்த வித்தையை "மூலிகை சாலம்" என்கிறார் தட்சிணாமூர்த்தி.

குறிப்பு:

நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த பிச்சு என்பது விலங்கினங்களின் உறுப்புகளில் ஒன்று. ஈரல் உள்ள எந்த ஒரு விலங்கினத்திலும் இது காணப் படும். அதாவது ஈரலுக்கு அருகில் கரும்பச்சை நிறத்தில் ஈரலோடு ஒட்டிக் கொண்டிருக்கும். இது ஒரு அங்குலம் முதல் இரண்டு அங்குல நீளம் வரை காணப் படும். இதனை பித்து என்றும் கூறுவர். இது கலங்காமல் கவனமாக எடுத்து பயன் படுத்த வேண்டும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

Unknown said...

பெரிய கல்லை காலால் உதைத்தாலும் கல் நகர்ந்து விடுமாம், ஆர்வம உள்ளவர்கள் பரிட்சித்து பார்க்கலாம் # கவனிக்க எலும்பு முறிவுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது :D

Apart from joke, ஆச்சிரியமான தகவல் இதுவரையிலும் படித்திராதது

arul said...

nice post

Anonymous said...

ஆய்விற்க்குரிய தகவல்...

sse said...

அன்புள்ள தோழியே,
இப்போதெல்லாம் எந்த சந்தேகமானாலும் யார்
கேள்விகள் கேட்டாலும் பதிலோ அல்லது குறிப்போ
ஏன் தருவதில்லை?தெரியாதவர்கள் கேட்டால்,
விளக்கம் தருவது உங்கள் கடமை.அதுவும் சித்தரியல்
புரிந்து கொள்ள சற்று கடினமானது.ஆகவே பல
வாசிப்பாளர்களின் சார்பாக கேட்கிறேன்.இனி நல்ல
சந்தேகங்களை போக்க வேண்டுகிறேன்

sse said...

அன்புள்ள தோழி,
ஒரு கேள்வி,எல்லோருக்கும் இள
வயதில் பல (லோகாதயமான )
விஷயங்களில் நாட்டம் இருக்கும்.
தங்களுக்கு சித்தர்கள் பற்றி
குறிப்பாக அவர்களின் காய
கல்பம்,ஜாலம்,அஷ்டகர்மம்,
மந்திர தந்திர யந்திர மற்றும் பல
சித்துக்கள் பற்றிய, ஆர்வம் எப்படி
ஏற்பட்டது.இவை குறித்த ஞானம்
உள்ள யாரவது உடன் இருந்து
சொன்னாலும் அவ்வளவு எளிதில்
ஈடுபாடு உண்டாவது யாருக்கும் அரிது.
தங்கள் அனுபவங்களை பகிந்தால்
மிக நன்றாக இருக்கும்.
நன்றி

S.Puvi said...

எங்கள் ஊரிலும் "மொட்டையா கல்" என்று ஒரு மலை இருந்தது. இம் மலையின் உச்சியில் சரிவான பகுதியில் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஒரு கல் இருந்தது. இதில் புதையல் இருப்பதான பலர் நம்பினர். 2005 ம் ஆண்டு கலப்பகுதியில் இனந்தெரியாதவர்களினால் ஏதோ ஓர் பொறிமுறையினைப் பயன்படுத்தி உச்சியிலிருந்து உருட்டிவிடப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னனி இதுவாகவும் இருக்கலாம்.

piravipayan said...

டியர் தோழி

ஒரு வேலை அந்தகாலத்தில எதை உபயோகபடுத்தி தான் கல்லில் அரண்மனை கோயில் எல்லாம் கட்டியிருப்பர்களோ

nanbenda said...

siththa maruthuva thagavalgal vivarangal ariya thamarai pathippagatharin puththagangalai padiungal

vigi said...

ஈஸ்டர் ஐஸ்லாண்ட் டில் உள்ள சிற்பமும் ...... இதைப்போல் ....... கொண்டு வந்திருக்கலாமோ ???

R.vijayaraghavan. said...

ஓம்சக்தி, புன(Puna )பக்கத்தில் ஒரு மலையல் ஒரு பெரிய கல் உள்ளது ,
அதை பத்து பேர் சேர்ந்து தூக்க முடியாது .
ஒரு மந்திரத்தை 5 பேர், ஒன்றாக கல்லை தொட்டுகொண்டு ,
மந்திரத்தை சொல்லிட கல் உயர் ந்துகொண்ட வரும் ,.
மந்திரம் சொல்வதையோ ,அல்லது கைஐ எடுதுவிட்டலோ ,
கல் கீலே விழ்த்துவிடும் .

Unknown said...

@R.vijayaraghavan.

Siththarkal Manthiram said...

குன்று தாங்கி மலை தாங்கி பார்பதற்கு எப்படி இருக்கும்? மற்றும் எங்கு கிடைக்கும்..

Ramesh said...

@R.vijayaraghavan. athu enna manthiram entru kurunkalen ariya avalaha ullathu???

Post a comment