புயல் மழையில் இருந்து காத்துக் கொள்ளும் ஜாலம்.

Author: தோழி / Labels: ,



தட்சிணாமூர்த்தி அருளிய ஜாலங்கள் வரிசையில் இன்று புயல், மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் கூறுகளிடம் இருந்து காத்துக் கொள்ள உதவும் ஜாலத்தை பார்ப்போம். கடவுளின் நிலையில் நாம் அறிந்திருக்கும் ஒருவர் இம் மாதிரியான ஜால வித்தைகளை எல்லாம் அருளியிருப்பாரா என்பது ஆய்வுக்குறியது.

வாருங்கள், புயல், மழையில் இருந்து காத்துக் கொள்ளும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் தட்சிணாமூர்த்தி அருளிய "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

செய்யவே யின்னமொரு செகசாலவித்தை
செப்புகிறோம் இடிமழைகள் மின்னலதுசிதறி
கையவே காற்றுமுதல் விலகியதுபோகக்
கருவான குன்றியாரைத் தைலம் வாங்கி
உய்யவே செய்யானின் பித்துமரத்தஞ் சேர்த்து
உடும்புனிட பித்தும் ரத்தமு ரவாகச் சேர்த்து
ஐயவே மத்தித்தால் மெழுகது போலாகும்
அருளான தாம்பிரத்தாற் குளிசமது செய்யே.

செய்யப்பா குளிசமதில் மெழுகதனை யடைத்து
செயம்பெற வேசிறியும்ஐயும் அங்குசயா
வெய்யவே வென்றுவுரு நூற்றெட்டு செபித்து
விளங்கவே விளையினில் குளிசமதை யிட்டு
மையவே மழைக்காற்று யிடிமின்னலிற் போனால்
மழைசித்து மிடிகாற்று மின்னல் சிதறுங்காண்
பொய்யப்பா சொல்லவில்லை பூதலத்தில்நீயும்
புண்ணியவான் மனிதனல்ல தேவனீதான் பாரே.

இந்த வித்தையை "செகசால வித்தை" என்றே தட்சிணாமூர்த்தி கூறியிருக்கிறார்.

குன்றியாரை என்னும் மூலிகையிலிருந்து தைலம் எடுத்து, அதனுடன் செய்யானின் பிச்சும் , இரத்தமும் சேர்த்துகொள்ள வேண்டுமாம். பின்னர் இதன்டன் உடும்பின் பிச்சும் இரத்தமும் சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு கடைந்தால் இந்த கலவையானது மெழுகுபோல் ஆகி விடுமாம்.

தாமிரத் தகட்டில் தாயத்து செய்து, அதனுள் கல்வத்தில் கடைந்தெடுத்த மெழுகை சேகரிக்க வேண்டுமென்கிறார். பின்னர் அந்த தாயத்தை வலது கையில் ஏந்தியபடி "சிறியும் ஐயும் அங்குசயா" என்ற மந்திரத்தை 108 தடவைகள் செபித்து. பின்னர் தாயத்தை இறுக மூடிக் கொள்ள வேண்டுமாம். அந்த தாயத்தை அணிந்து கொண்டு சென்றால் மழை, காற்று, இடி, மின்னல் ஆகிய எந்த இயற்கை மாற்றங்களும் பாதிக்காது என்கிறார்.

இங்கு செய்யான் என்று குறிப்பிடப்படுவது ஒரு வகை பாம்பு இனம் இது பத்து சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் இதன் அறிவியல் பெயர் Leptotyphlops carlae. இவற்றிற்கு கண்பார்வை கிடையாது என்பது மேலதிக தகவல்.

குறிப்பு: தட்சிணாமூர்த்தி பற்றிய மேலதிக தகவலறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டிருந்த வேண்டுகோளுக்கு இணங்கி நண்பர் விஜயகுமார் ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்தி பற்றிய திருவாடுதுறை ஆதீனம் வெளிட்டுள்ள நூல் உள்ளது என்றும்,. ஆனால் அது பெரும்பாலும் எல்லா ஊரிலும் உள்ள தட்சிணாமூர்த்தி சிலை அமைப்பு பற்றி இருக்கும். பிற தகவல்களும், தியான சுலோகங்கள் முதலியன இருப்பதாக கூறியுள்ளார். பொதுவில் இது சிற்ப கலைஞர்களுக்கு உதவக் கூடிய நூல் என்றும் கூறியிருக்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

S.Puvi said...

அதிசயமான தகவல்கள் தான். நன்றிகள்.
இதில் பிச்சு, கல்வம் போன்ற சொற்பதங்கள் புரியவில்லை அக்கா.

வரலாற்று சுவடுகள் said...

ஆச்சிரியமான தகவல் தான் .. :)

jaisankar jaganathan said...

அப்படின்னா சுனாமி வந்தா உங்களூக்கு கவலை இல்லைன்னு சொல்லுஙக்

arul said...

nice post

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் பதிவு ஆச்சர்யமான ஒன்று .மிக்க நன்றி. இரண்டு உயிர்களை ,கொன்று ,அதில் ஒரு மனித உயிர் வாழவேண்டுமா ? என்பதே எனது சந்தேகம் .

Dr Sunder said...

excellent information, interesting to learn and know, keep up the good work, God bless

''இறைவனடி யுவராஜா'' said...

மேலும் எதிர்பர்கிறேம்...

MARIJEYAKUMAR K said...

நன்றி

Post a Comment