தட்சிணாமூர்த்தி அருளிய ஜாலம்!

Author: தோழி / Labels: ,


தினமொரு சித்தரின் ஜால வித்தையை பகிர வேண்டும் என்பதே இந்த தொடரின் திட்டம். அதனடிப்படையில் கடந்த நாலு நாளில் போகர், தன்வந்திரி, அகத்தியர், புலிப்பாணி சித்தர் ஆகியோர் அருளிய ஜால வித்தைகளின் ஊடே ஒன்றை தெரிவு செய்து பகிர்ந்தேன். இந்த தேடலின் போது கிடைத்த ஒரு ஆச்சர்யமான தகவலின் தொகுப்பே இன்றைய பதிவு.

சிவன் கோவிலின் தெற்குப் பார்த்த சுவரில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை நாமனைவரும் அறிவோம். ஞானத்தின் வடிவாகவும், குருவாகவும் கருதப்படும் இவரை சிவனின் அம்சமாக கருதி மந்திரம் சொல்லி, சடங்குகள் செய்து சிரத்தையுடன் வழிபட்டு வருகிறோம். சிவனின் அம்சம் என கடவுள் நிலைக்கு இவரை உயர்த்தி விட்டதாலோ என்னவோ, இந்த பெருமகனார் அருளிச் செய்த நூல்கள் யாருடைய கவனத்தையும் ஈர்க்காது போய் விட்டதோ என்னவோ...

தட்சிணாமூர்த்தி பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் நம்மிடம் இல்லை. இருப்பவை எல்லாம் புராணகதைகளாகவே இருக்கின்றன. எனினும் அவர் அருளியதாக சொல்லப் படும் நூல்களின் பட்டியல் நீளமானது. அவற்றில் பின் வரும் நூல்கள் என்னுடைய சேமிப்பில் இருக்கின்றன.

தட்சணாமூர்த்தி ஞான சூத்திரம்
தட்சணாமூர்த்தி ஞானச்சுருக்கம்
தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு
தட்சணாமூர்த்தி ஞானபஞ்சாட்சரம்
தட்சணாமூர்த்தி ஞான பூஜாவிதி
தட்சணாமூர்த்தி பெருங்காவியம்
தட்சணாமூர்த்தி ஞானக்குறி
தட்சணாமூர்த்தி சால சூத்திரம்
தட்சணாமூர்த்தி ஞான சைதன்யம்
தட்சணாமூர்த்தி ஞான கற்ப சூத்திரம்
தட்சணாமூர்த்தி தீட்சை ஞானம்
தட்சணாமூர்த்தி காரண ஞானம் 

தட்சிணாமூர்த்தி பற்றி யாரும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படி ஏதுமிருப்பின் அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இனி, இன்றைய பதிவில் தட்சிணாமூர்த்தி அருளிய "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் ஜால வித்தையொன்றை பார்ப்போம்.இந்த வித்தையானது வீரர்கள் போரின் போது ஆயுதங்களினால் காயம் படாமல் தப்பிக்கும் வித்தையை கூறுகிறது.

அதெப்படி காயம் படாமல் தப்பிப்பது, வாருங்கள் அந்த ஜாலவித்தையை அவருடைய மொழியில் பார்ப்போம்.

வெளியாகச் சொல்லுகிறேன் கருவித்தையிதுதான்
விளங்குவில்லு அம்புதடி குண்டு ஆயுதங்கள்
கடியான கத்தியொடுவளை தடிசக்கரம்
கருவான சில்லாகோல் நேரிசம் சமுதாளி
பளியான பாணமொடு அஸ்திரங்களக்கினி
படைசிதறும் போர்வீரர் மந்திரம்பில்லியேவல்
மளியான குத்துவெட்டு அடிகளிது முதலாய்
மகத்தான சாவமெல்லாந் தடைசெய்யக்கேளே

செய்யக்கேள் குன்றியாரைத் தைலம் வாங்கி
சிறியா நங்கைச் சாறுவிட்டு புலிப்பித்துஞ் சேர்த்து
நையக்கேள் மத்தித்து திலர்தமதாக
நலமான புருவமதில் மையதனைப் பூசி
உய்யக்கேள் ஓம்கிறியும் கிறாங்கிலியுஞ் சவ்வும்
உருநூற்றெட்டு தரஞ்செபித்து படையேகி
அய்யக்கேளு யுத்தத்தின் ரணகளத் தினடுவே
ஆமென்று நின்றுவுரு செபிப்பீரையா

ஐயாகேள ம்புவில்லு சிதறியது போகும்
அடிகுத்து அக்கினிகளது சிதறிப்போகும்
நையாகேள் கத்திவெட்டுசில்லாக்குத்து கோல்குத்து
நலமான பாண்டுமுதல் சிதறியது போகும்
மெய்யாகேள் புட்பமாறி பொழிந்ததுபோல
வெடிபாணஞ் சிதறியது விலகும்பாரு
பொய்யப்பா சொல்லவில்லை புலத்தியனேஐயா
புதுமையிது பூதலத்தில்புண்ணியர் செய்வாரே.

பெரும் படைகள், போர் வீரர்கள் போன்ற குழுவினரிடம் இருந்தும், வில், அம்பு, தடி குண்டு, கத்தி, வாள், சக்கரம், சிலாக்கோல், நேரிசம், சமுதாளி, பாணங்கள், அஸ்திரங்கள், அக்கினி போன்ற ஆயுதங்களிடம் இருந்தும், மந்திரங்கள், பில்லி சூனியங்கள் போன்றவற்றாலும், குத்துகள் வெட்டுகள் அடிகள் ஆகியவற்றின் பாதிப்புக்களில் இருந்து காத்துக் கொள்ள இந்த ஜால வித்தை உதவிடும் என்கிறார்.

குன்றியாரை என்னும் மூலிகையிலிருந்து தைலம் எடுத்து, அதனுடன் சிறியாநங்கைச் சாறு சேர்த்து பின்னர் அத்துடன் புலிப் பிச்சு கூட்டி கல்வத்தில் இட்டு நன்கு கடைந்து எடுக்க மையாகுமாம். அந்த மையை நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டு "ஓம் கிறியும் கிறாங் கிலியும் சவ்வும்" என்று நூற்றி எட்டுத்தடவைகள் செபித்துகொள்ள வேண்டுமாம்.

பின்னர் யுத்த களத்திற்கு சென்று போர் புரியும் படைகளுடன் கலந்து நின்று போரிடலாமாம்.அப்போது மையை திலகமாக இட்டு இருப்பவரை நோக்கி வரும் அம்புகள், அக்கினி ஆகியவை சிதறிப்போகுமாம். கத்தி வெட்டு சிலாக்குத்து போன்றவையும் பாதிக்காது. பூமாரி பொழிவதை போல் வெடிபாணங்கள் பாதிக்காது சிதறி விடும் என்கிறார்.

இந்த ஜாலவித்தையின் சாத்திய அசாத்தியங்கள் பற்றிய விவாதம் ஒரு புறமிருந்தாலும் கூட கடவுளின் அம்சம் என கருதப் படும் உயர் நிலையை அடைந்த தட்சிணாமூர்த்தி என்கிற யோக புருஷர், தமிழர் என்கிற விவரங்கள் நம்மில் பலருக்கு புதியது. மேலும் அந்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ஆயுதங்கள் பற்றிய விவரங்கள் இந்த பாடல்களின் ஊடே நமக்கு தெரிய வருகிறது. இந்த ஆயுதங்கள் பற்றியும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் அவரது பாடல்களின் ஊடே தகவல்கள் இருக்கிறது.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

17 comments:

Unknown said...

இந்த ஐடியாவ இந்தியா பாகிஸ்தான் போரின்போது பயன்படுத்தி பாக்கனும்

Unknown said...

பிரம்மிப்பை ஏற்படுத்தும் அற்புதமான தகவல் ..!

sse said...

அன்புள்ள தோழி,
தங்கள் பதிவுகளை ஆர்வத்துடன் கண்டு
வருகிறேன்.குன்றியாரை என்பது என்ன?
என்பதை விளக்கமாக தெரிவித்தால் தான்
எங்களுக்கு விஷயம் நன்கு விளங்கும்.
அது குன்றிமணியா?தயவு செய்து விளக்கம்
தரவும்
அன்பன் சீனு

sse said...

அன்புள்ள நண்பர்களே,மிகவும் நல்ல தகவல்களையும் தங்களை
பின் தொடர்பவர்களையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒரு சிறு அல்ல, மிகபெரும் குறை என்னவெனில் ஏன் அனைவரும்
ஆங்கிலத்திலேயே கமென்ட் செய்கிறார்கள்.சிறந்த வழி ஒன்று
உள்ளது.தாங்கள் அதை தங்கள் பதிவின் வாயிலாக தெரியபடுத்தினால்
சிறப்பாக இருக்கும்.அதற்கு gmail ல் அகௌண்ட் வைத்திருக்கணும்.அதில்
செட்டிங்க்ஸ் சென்று language ல் தமிழ் செட் செய்திட வேண்டும்.
பிறகு மெயில் அனுப்புவதற்கான compose மெயில்ஐ திறந்து அதில்
language (அ) என்று இருக்கும் பிற மொழி எழுத்துருக்களும் இருக்கும்.
அதில் தமிழ் எழுத்தை கிளிக்கினால் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.
பிறகு அதை காபி செய்து உங்களது தளத்தில் கமென்ட் ல் பேஸ்ட்
செய்தாலே போதும்.எனக்கு தெரிந்தவரையில் தெரியபடுத்தி உள்ளேன்.
இதை படிக்கும் நண்பர்கள்,இன்னும் பிற தமிழ் தளங்களுக்கும் இதை
தெரியபடுத்தினால் எல்லோரும் தமிழிலேயே பதில் எழுதலாம்
.படிக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்க.
இறைவனடிமை சீனிவாசன்

Kumar said...

புலத்தியர் அகத்தியரின் சீடர் தானே .

Unknown said...

நல்ல தகவல் . நன்றி

Anonymous said...

//கடவுளின் அம்சம் என கருதப்படும் உயர் நிலை அடைந்த தட்சிணாமூர்த்தி என்கிற யோக புருஷர், தமிழர் என்கிற விவரங்கள் நம்மில் பலருக்கு புதியது.// மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரி, இது போன்று பல விஷங்கள் நம்மால் மறக்க பட்டு மறைக்க பட்டு வந்துள்ளன. இதை வெளிக்கொணர அந்த சாச்சாத் அந்த முருக கடவுள் தான் உங்களை இங்கு அனுப்பி உள்ளார். அவரின் அருள் உங்களுக்கு என்றென்றும் இருக்க வேண்டுகிறேன். உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.

இறைவன் என்றும் உங்களுடன்
விவேகன்

geethasmbsvm6 said...

சிறியாநங்கை பாம்பை வர விடாமல் தடுக்கும். பெரியாநங்கையும் கூட. இவை ரத்த அழுத்தத்திற்கான மருந்தாக ஆயுர்வேதம்,சித்தாவில் மாத்திரை வடிவில் தரப்படும். சர்ப்பகந்தா என்றோ என்னவோ பெயர் வரும்.

geethasmbsvm6 said...

தொடர

tamilvirumbi said...

தோழி ,
மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு.மிக்க நன்றி.
குறையேதும் இல்லை ,மறைமூர்த்தி கண்ணா.

Senthil Kumar said...

அருமையான பதிவு. சுப்பிரமணியர் என்றொரு சித்தரும் இருக்கிறார். அவர் முருகரா என்பது ஆய்வுக்குரியது. எனினும் எனக்கு தெரிந்தவரையில் எல்லா கடவுளரும் மனிதனாக பிறந்து தெய்வமாக மாறியவர்களே. லெமூரியா கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மூன்று கண்கள் இருந்தனவாம். அப்படியென்றால் சிவன், சக்தி, விநாயகர், முருகர், சரசுவதி, அயக்ரீவர் ஆகிய மூன்று கண்கள் கொண்ட தெய்வங்களும் நமது முன்னோர்களே. அவர்களும் சித்தர்களே. நாமும் அவர்களின் வாரிசுகளே. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதே போல் ஒரு சால வித்தை சுப்பிரமணியர் என்ற சித்தரும் கூறியிருக்கிறார். நானும் அதை படித்திருக்கிறேன். நன்றி. உமது பணி சிறக்கட்டும்.

Pratap said...

For a long time i can't read a post of previous month/s

Unknown said...

ungal vellai megavum magathanadhu ..

Reflections said...

Fantastic article- I am also like normal people, go to Dhakshinamoorthy and tell the slokam and go but never stood there and wondered about this person. May be he was a great teacher, yogi. The verses are in old thamizh which unless someone translates it is difficult to understand. Great work Thozhi.

Ommuruganandam said...

If Dhakshinamoorthy is a human and attained such a position in GOD, before him there is no Guru (viyalan) in our astrology ? or no planet called representing his name ?

if possible pls share your thoughts... if you have answers let us know...

Thanks.

Unknown said...

«Õ¨ÁÂ¡É À¾¢×

Unknown said...

thanks

Post a Comment