நெருப்பில் நடக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: ,


சித்தர்களின் ஜாலவித்தை வரிசையில் போகர், தன்வந்திரி, அகத்தியர் ஆகியோர் அருளிய வித்தைகளை இதுவரை பார்த்தோம். அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய ஜாலவித்தை ஒன்றைப் பற்றி பார்ப்போம். இவை யாவும் தகவல் பகிர்வுகளே, இவற்றின் உண்மைத் தன்மை ஆய்வுக்கு உரியது.

இனி, புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலம்" என்னும் நூலில் அருளிய நெருப்பின் மீது நடக்கும் வித்தையை பார்ப்போம்.

மதானப்பா மணித்தக்காளி சாறுகூட 
    மைந்தனே உத்தாமணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
    வளமாக மத்தித்து வைத்துக் கொண்டு 
தானப்பா கைகாலில் தடவிக் கொண்டு
    தன்மையாய்த் தணல்மிதிக்கத் தணலும் நீர்போல்
ஏனப்பா இவ்விதமே செய்தா யானால்
    இதமாகத் தணலதுவுந் தயங்குந் தானே

புலிப்பாணி.

மணத்தக்காளி, உத்தாமணி, வசலை ஆகிய மூன்றின் சாறுகளை தனித் தனியே எடுத்து அவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டுமாம். இந்த சாறு கலவையை கை, காலில் பூசிக் கொண்டு நெருப்பில் நடந்தால் நெருப்பின் உஷ்ணம் கால்களைப் பாதிக்காது என்கிறார். மேலும் நெருப்பானது தண்ணீர் போல் இருக்குமாம்.

சுவாரசியமான தகவல்தானே, ஆர்வமுள்ளவர்கள் பரிட்சித்துப் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

25 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அட, தீமிதி திருவிழாவின் ரகசியங்களை வெளியே சொல்லிவிட்டீர்களே தோழி.

வரலாற்று சுவடுகள் said...

உத்தாமணி என்றால் என்னவென்று தெரியவில்லை ..,

ஆச்சிரியமான தகவல் தான் .. !

magesh said...

உண்மையில் இந்த தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது. தயவுசெய்து நாடி ஜோதிடம்பத்தி நீங்கள் நிறைய தகவல் எழுத வேண்டும். நன்றி

arul said...

utthamani, vasalai - are these things available now?

magesh said...

உண்மையில் இந்த தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது. தயவுசெய்து நாடி ஜோதிடம்பத்தி நீங்கள் நிறைய தகவல் எழுத வேண்டும். நன்றி

magesh said...

மிகவும் சுவாரஸ்யமான தகவல். நன்றி

magesh said...

மிகவும் சுவாரஸ்யமான தகவல்.நன்றி

jaisankar jaganathan said...

தீக்குளீக்கிற தொண்டர்களூக்கு இது ஒரு நல்ல ஐடியாவாச்சே

மு.சரவணக்குமார் said...

உத்தாமணி மூலிகை பற்றிய தகவல்கள் இந்த இணைப்பில் இருக்கிறது.

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6962

வரலாற்று சுவடுகள் said...

@மு.சரவணக்குமார்

மிக்க நன்றி சரவணக்குமார் .. :)

sse said...

இந்த மூலிகைகளின் படங்களையும் இணைத்தால் உதவியாக இருக்கும்.
வாழ்க வளமுடன்
சீனிவாசன்
http://sitharsong.blogspot.in/

baski said...

pls clarify vasalai or pasalai

tamilvirumbi said...

தோழி ,
படிப்பவர்களை வியக்கவைக்கும் இந்த பதிவிற்கு மிக்க நன்றி .

ragu said...

வசலை ennral enna?

ragu said...

what mean muligai வசலை?

விவேகன் said...

ஆச்சரியமான தகவல்

நன்றி தோழி

nanbenda said...

உத்தாமணி என்றால் வேலிபருத்தி
பசலை தான் வசலை ஆகி போனது
indian medicinal herbal என்று நெட்டிலே தேடினால் தெரியும்

ana said...

நண்பற்கலே யாரேனும் எணக்கு உதவுங்கள்
நெருப்பை உண்டாக்கும் சித்தர் யார் அல்லது நெருப்புக்காண சித்தர் யார்
நெருப்பை உண்டாக்கும் மூலிகை எது
தெரிந்த நண்பற்கள் உதவவும்

gsvelu krishna said...

parvathi paraniam pattri therinthal thagaval sollungal

gsvelu krishna said...

parvathi paraniam patri thagaval therinthaal soolungal

Ananth Sozhan said...

Can we try this to make? I can help you.
iamsananth@gmail.com

Muki said...

Thirumathi vijayalakshmi, its not hapenning in villages. Its real one.
Mr. Baski, pulipani tanathu noolil, vasalai endre kuripidukirar

Muthu Samy said...

பசலை கேள்வி பட்டிருக்கிறேன். வசலை என்றறால் என்ன?எழுத்து பிழையா? திீமிதியின் போது கிராமத்தினர் கை கால்களில் அப்படி எதுவும் பூசுவதில்லை
.

Vignesh Veerasamy said...

which place are buying this book...... please tell to me,,,,,,,,, address send to immediately .........my contact number:9789531(urgent immediately)....

Vignesh Veerasamy said...

sidharkal rajiyam book enga kidaikum sollunga urgent ...........contact:9789531884

Post a Comment