நாகபாம்பின் விஷம் இறக்கும் மந்திரம்

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது கடித்து விஷம் தலைக்கேறி விட்டால் அந்த விஷத்தை இறக்கும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் விஷம் இறங்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார்.

சித்தியுள்ள நாகமதின் வித்தையப்பா
     தெளிந்துகொண்டு மனதுறுதி யாகப்பாரு
கொல்லென்ற கூத்துவனார் லபியினாலே
     கொடுமையென்ற விஷமேறித் தலைமேற்கொண்டா
சொல்லென்ற சொல்லதினால் மைந்தாமைந்தா
     சுகமாகத் தீருதற்கு மந்திரங்கேளு

வில்லென்ற விசைபோலே விஷத்திற்பாய்ம்
     விசையாக அங்கிலிசிங் நசிநசியென்னே.
யெண்ணியுரு அருபதிலே விஷந்தான்தீரும்
     யென்மகனே உறுதிகொண்டு இருந்துபாரு
புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்
     ஆதிதொடுத் தந்தமந்திரம் சித்தியாமே.

ஒருவரை நாக பாம்பு தீண்டி விஷம் அவர உடலெங்கும் பரவி தலைக்கேறி விட்டால், அவர் அருகில் அமர்ந்து "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை அறுபத்தி நான்கு தடவை தொடர்ந்து உச்சரிக்க உடலில் பரவிய விஷம் இறங்கிவிடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம்.

இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

நாளைய பதிவில் நெருப்பில் நடக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

35 comments:

byfour said...

அருமையான தகவல் தொடரட்டும் உங்கள் நற் பனி . ஒரு சந்தேகம், இந்த மந்திரத்தை நம் நமக்கு பாம்பு கடித்தால் கூட பயன் படுத்த முடியுமா ?

kimu said...

நல்ல பயன் உள்ள தகவல்

jaisankar jaganathan said...

1008 தடவை சொல்லி இலங்கையில் இருக்குற எல்லோரையும் காப்பாத்த வேண்டியது தானே. அப்புறம் ஏன் இந்த டாக்டர்ங்க இருக்காங்க. எல்லோரையும் துரத்தனும்.

mymobilestudios.blogspot.com said...

வணக்கம்

அற்புதங்கள் தொடரட்டும்

வாழுதுகள்

நன்றி

jaisankar jaganathan
உங்களை சித்தர்கள் நல்வளிபடுதுவார்

geethasmbsvm6 said...

தோழி, இது குறித்து என் அம்மா சொல்லி நான் கேள்விப் பட்டிருக்கேன். என் அப்பாவின் அப்பா மந்திரங்கள் சொல்லி விஷத்தை இறக்குவார்னு சொல்வாங்க.

எனக்கே ஒரு முறை "காணாக்கடி" என்னும் பூச்சி கடித்து உடல் முழுவதும் சிவந்து வீங்கிய போது என் மாமனார் கிராமத்திலுள்ள மந்திரிக்கிறவரைக் கூப்பிட்டுத் தான் மந்திரிக்கச் சொன்னார். மந்திரித்துக் கயிறு கட்டி மூன்று நாட்கள் பத்தியம் மூன்றாம் நாள் விஷம் இறங்கி விடும். நம்பினால் நம்புங்கள். மூன்றே நாட்களில் சரியாப் போச்சு. இது நடந்தது 1977-ஆம் வருஷம். நாங்க இருந்ததோ சரியான பட்டிக்காடு. அந்தக் கிராமத்துக்கு மின் விளக்கே அந்த வருஷம் தான் வந்திருந்தது. அதுவும் எங்க மாமனார் வீட்டிலும், ஊர்த் தலைவர் வீட்டிலும் தான் மின் இணைப்புக் கொடுத்திருந்தாங்க. அவ்வளவு சின்ன ஊர்.

geethasmbsvm6 said...

எட்டுக்கால் பூச்சி என்னும் சிலந்திக்கடிக்கும் மந்திரிப்பாங்க. சிலந்தி கடிச்சு என் கணவரும் மந்திரிச்சுத் தான் சரியாச்சு
இன்னும் சொல்லப்போனால் எனக்கு முதுகு முழுதும் அக்கி வந்திருந்தப்போ, மந்திரமும், அக்கியிலே எழுதினதிலேயும் தான் சரியாச்சு
ஆனால் தேர்ந்த நபர்களாய் இருக்கணும். அக்கி வந்தது, 1987-ஆம் வருஷம் ஏப்ரலில். மே மாதம் வரையிலும் சிரமப் பட்டிருக்கேன்.

பாலா said...

இப்ப என்னோட மூணு வயசு பொண்ணும் அக்கினால ரொம்ப சிரமபடுரா???

tamilvirumbi said...

தோழி ,
நல்ல பகிர்வு .மிக்க நன்றி .

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சித்தர் பாடல்களில் இது கொஞ்சம் எளிமையா இருக்கின்றது புரிவதற்கு.

krishna said...

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஒருவாறு மாற்றிச் சொன்னால் விஷம் இறங்குமென்றும் வேறு வகையில் சொன்னால் விஷம் ஏறும் என்றும் ஒரு புத்தகத்தில் படித்த நினைவு. ஒரு முறை என்னை தேள் கொட்டியபோது எனது தந்தை தவறுதலாக விஷம் ஏறும் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். நான் சந்தகப்பட்டு புத்தகத்தைப் பார்த்து மந்திரம் தவறு என்று சொல்ல பின்னர் சரியான மந்திரத்தை உச்சரித்தார். நடந்த வருடம் ௧௯௬௮. அப்பொழுது இள நரைக்காக தொடர்ந்து வேப்பிலை சாப்பிட்டு வந்ததால் எனக்கு விஷத்தின் தாக்கம் அதிகம் இல்லை. அன்று விஷக் கடி, நகைச்சுவை நிகழ்வாகிவிட்டது.

alkan said...

அரிதான பல தகவல்களை உங்கள் பதிவுகள் கொண்டு வருகின்றன.
குறிப்பிட்ட சிலரின் சொத்தாக மறைத்து வைக்கப்பட்டு ஒளிந்துபோன பல விடயங்களை பகின்றீர்கள்.முயற்சிக்கு பாராட்டுக்கள்
நன்றி

kuppusamy said...

நல்ல பயனுள்ள செய்தி தொடருங்கள். எனக்கு வயது 72 எனது தந்தைக்கு பாம்புக்கடி நச்சு இரக்க மந்திரம் வாயுக்குள் முணுமுணுத்து வெற்றி கண்டார் ஆனால் எனக்குச் சொல்லாமலேயே இறந்து விட்டார்.

La Venkat said...

தோழி,
"அறுபத்திலே" என்று பாடலில் சொல்லிஇருக்க நீங்கள் "அறுபத்தி நான்கு" என்று கூறி இருக்கிரேர்கால்.
தவறாக நான் புரிந்திருந்தால் மன்னிக்கவும்.
தயவு கூர்ந்து மூச்சு கலை பற்றி தொடராவும்.
தோழன்
வெங்கட்.

arul said...

nice post

Unknown said...

nice post

Unknown said...

nice post

S.Puvi said...

இப்படியான ஒரு நிகழ்ச்சியை நேரடியாக பார்த்திருக்கின்றேன். இதன் சூட்சுமம் என்னவென்று புரியவில்லை. தங்கள் பதிவுக்கு நன்றிகள். தூதன் குறி என்று ஒருவகை யோதிடம் இரக்கின்றதாம் அதுபற்றி தங்களிடம் தகவல்கள் இருந்தால் பதிவிடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
என்றும் நட்புடன்
சோ.புவி

Dr.V.K.Kanniappan said...

விஷம் இறக்கும் மந்திரம் சித்திக்க சொல்லும் ‘அங்கிலி சிங் நசி நசி’ எப்படி, எங்கு, எந்த விரதத்துடன் செய்து சித்திக்க வேண்டும்? இதற்கான பயிற்சி முறை என்ன?
வ.க.கன்னியப்பன்

blow lamp said...

பயனுள்ள பதிவு. தமிழர்களுக்கு பயன்படும் தங்களின் பதிவுகள் நாளும் தொடரட்டும்.
நன்றி!

blow lamp said...

முகுதுப்புறத்தில் மூச்சுப்பிடிப்பு வந்தால் அதற்குறிய சித்த வைத்திய முறையை அளித்துதவ தங்களை வேண்டுகிறேன்.

Senthil A said...

I am taking Tamil siddha medicine in chennai NATIONAL INSTITUTE OF SIDDHA Pain reduced complected better than before. I feel alright now.
Thanks to siddtha medicine.
they take care all patient very kind.

Regards,
Senthil A

nagu said...

மகான்களின் ஆசி உங்களுக்கு உள்ளது போலும்....அருமை அருமை....நன்றி

nagu said...

யாரேனும் பிரம்மேந்திரரைப் பற்றிய குறிப்புகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்

Unknown said...

fine

Chandrawathanan Wathan said...

தமிழனின் பெருமையே பெருமை... ஆனால் இன்றைய நிலையை நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது....

Chandrawathanan Wathan said...

மேலும், இவ்வாறான பயனுள்ள தகவல்களும் ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்...

Pathi Boo said...

super but unmaiya ethu

Pathi Boo said...

super pa but unmaiya

Ananth Sozhan said...

Hello All,
One of my friend has been saved in this way few year before in AP. I really do not know what mandra he has used but i got it. Now he is working in IT, Bangalore.
This is very old art which was dieing today.
Any body want more information abt how he saved, call me. 984574450

kc mohan said...

வணக்கம் நல்ல தகவல் ஆனால் புரியும் படி சொல்ல வில்ல "ஓம் அங்கிளி சிங் நசி நசி நம"

இவ்வார 1008 தடவை உரு கொடுக்க வேண்டு
எந்த நாளில் தொடங்கவேண்டு திசை நேரம்என பலவிடயங்கள் உண்டல்லவா அதையும் கூறினால் நல்லம்

ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்

subramanian m said...

http://www.blogger.com/blogger.g?blogID=200827987283567956#editor/target=post;postID=1174581822593696458

Pratheep jeyasunderam said...

thanks

Pratheep jeyasunderam said...

thanks.

ravikumar said...

please publish all topics in pdf format sidhargal rajjiyam

pha.rez said...

பனிரெண்டாயிரம் உரு கெட்டு மந்திரம் (பிறாண பிரதிஷ்டை) மூலம் ஜெபித்தால் மட்டுமே சித்தி ஆதும் 1008 உரு சித்து ஆகாது...,

Post a Comment