தங்க பற்பம் செய்வது எப்படி!

Author: தோழி / Labels: ,


சித்தரியலில் உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அந்த வகையில் தன்வந்திரி அருளிய "தன்வந்திரி வைத்திய காவியம்" என்ற நூலில் தங்கத்தை பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம்.

தன்வந்திரி பற்றி பல முரணான கருத்தாக்கங்கள் உண்டு. தன்வந்திரி மனித குலத்தின் முதல் மருத்துவர் என்று ஒரு சாராரும், இல்லையில்லை அவர் தேவர்களின் மருத்துவர் என ஒரு சாராரும்,  இரண்டுமே தவறு அவர் திருமாலின் அவதாரம் என மூன்றாவது பிரிவினரும் கூறுவது உண்டு. எது எப்படியோ இத்தனை சிறப்புகள் வாய்ந்த அந்த பெருமகனார் ஒரு தமிழர் என்பது மட்டும் அவரது நூலின் வாயிலாக உறுதி செய்து கொள்ள முடிவது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. இவர் முன் வைத்த மருத்துவ முறையே இன்று ஆயுர்வேதம் என பிரபலமாகி இருக்கிறது. 

இனி தன்வந்திரி தனது "தன்வந்திரி வைத்திய காவியம்" நூலில் கூறியுள்ள தங்க பற்பம் செய்யும் முறையினை பார்ப்போம்.

பாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு
    பாங்கான தங்கத்தின் காசு வாங்கி 
நேரப்பா கருமத்தின் இலையரைத்து
    நெகிழவே கவசித்து சீலை செய்து 
சீரப்பா கசப்புடமே இட்டாயானால்
    சிறப்புள்ள பற்பமது என்ன சொல்வேன்
காரப்பா பற்மதை லேகியத்தில் உண்ணும்
    பாங்கான மண்டலம்தான் பத்தியம்தான் பாரே

கார்க்கவே திரேகம்தான் சட்டை தள்ளும்
    பாங்கான திரேகமது வச்சிரகாயம்
தீர்க்கவே இறைச்சி வகை யாவும் கூட்டு
    தெளிவாக நண்டு கறி கூட்டு கூட்டு 
ஆற்கவே சேத்துமங்கள் தொண்ணூற்றாரும்
    அகன்றுபோம் கூடுவிட்டு காசரோகம்
வேர்க்கவே சமம் ஈளை சுவாசங்காசம்
    மிரண்டே ஓடிப்போகும் எனப் பேசினோமே.

கரு ஊமத்த இலையை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு தங்கக் காசுகளை எடுத்து அதன் மீது இந்த கலவையை நன்கு பூசி கவசம் இட வேண்டுமாம். இதன் பிறகு வலுவாக சீலை மண் செய்து "கஜப்புடம்" இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் தன்வந்திரி. (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் கஜப்புடம் பற்றிய தகவல் இருக்கிறது.) இப்படி செய்தால் தங்க காசானது நீறி பற்பம் ஆகியிருக்குமாம்.

இப்படி தயார் செய்யப் பட்ட தங்க பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு பண எடை அளவில் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். உணவில் இறைச்சி வகைகளையும், நண்டுக் கறியினையும் சேர்த்து மற்றவைகளை நீக்கி விட வேண்டுமாம். 

மேலும் நாள் தவறாமல் ஒரு மண்டலகாலம் மேற்கூறிய பத்தியத்தோடு தங்க பற்பத்தை உண்டு வந்தால் அவர்களுக்கு தொண்ணூற்றாரு வகை சிலேத்தும நோய்களும், காச நோய், சயம், ஈளை, சுவாச காசம் ஆகியவை நீங்கி குணமாகும் என்கிறார்.

அரிதான தகவல்தானே!, நாளை வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

வரலாற்று சுவடுகள் said...

தங்கபஸ்பம் பற்றி கேள்வி பட்டதுண்டு, இன்று தான் அதை எப்பிடி தயாரிப்பார்கள் என்று அறிந்துகொண்டேன் நன்றி சகோ ..!

தன்வந்திரி பற்றி பல குழப்பமான செய்திகள் உண்டு, தன்வந்திரியிடம் இருந்து மருத்துவம் கற்றவர்தான் சுஸ்ருதா என்ற முனிவர், இவர் மருத்துவ உலகில் "அறுவை சிகிச்சையின் தந்தை" என்று போற்றப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஸ்ருதா பற்றி எனது தளத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.உங்கள் அளவிற்கு என்னால் தெளிவாகவும் அற்புதமாகவும் எழுத முடியாது என்றாலும் ஏதோ என்னால் முடிந்ததை எழுதியிருக்கிறேன்.

நன்றி சகோ தங்கபஸ்பம் பற்றி அற்புதமான தகவல் தந்தமைக்கு .. :)

sse said...

Good article

Unknown said...

very interesting. Because metals are often considered to be poison to health. Inverting their properties is amazing stuff.

tamilvirumbi said...

தோழி ,
சாதாரணமாக ,உலோகத்தால் செய்த புடங்கள் ,சிறுநீரகத்தை பழுதாக்கிவிடும் என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுவதுண்டு.ஆனால் ,பழங்காலத்தில் ,சித்தர்கள்
பயன்படுத்தியது ஒரு அபூர்வ தகவல் .மிக்க நன்றி.

Sara said...

Karu OOmathai illai engu kidaiku thozie, thayavu seithu sollungal. Melum Kaja pudam poda varati allamal GAS ubayogikalama ??. Thelivu Koorungal.

Nandri.

Krish said...

ஊருக்கெள்ளாம் உபதேசம் செய்ரிங்களே இதை நீங்கள் செய்து பார்த்ததுண்டா

Post a Comment