போகர் ஜாலவித்தை!

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் என்றாலே அரிதான எட்டு விதமான சித்துக்களையும், வாய் பிளக்க வைக்கும் ஜாலங்களையும் நிகழ்த்திக் காட்டுகிறவர்கள் என்பதான பொதுக் கருத்து உண்டு. இந்தக் கருத்தினை முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. ஏனெனில் சித்தர்களின் பாடல்களின் ஊடே இம் மாதிரியான ஜாலங்களைப் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இவை எதற்காக சொல்லப் பட்டது என்பதும், அதன் பின் புலத்தில் மறைந்திருக்கும் உட் கருத்துக்களும் ஆய்வுக்கு உட்பட்டவை.

இந்த வாரத்தின் நெடுகில் அப்படியான சில சித்துக்களை பார்க்க இருக்கிறோம். இன்றைய பதிவில் போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் அருளியிருக்கும் ஒரு ஜால வித்தை பற்றி பார்ப்போம். ஒரு குடத்தில் நீரை அள்ளி அந்தக் குடத்தினை தலைகுப்புற கவிழ்த்தாலும் பானையில் உள்ள நீர் கீழே சிந்தாதிருக்கும் ஜாலத்தை போகர் பின் வருமாறு கூறுகிறார்.

நடந்தபின்பு இன்னமொரு ஜாலங்கேளு
         நல்லமயி ரோசனையும் மத்தக்காசும்
அடர்ந்ததொரு நாற்கரந்தை வயன்றவேரும்
        அரசமர வேருடனே இந்த நான்கும்
குடத்துள்ளே சமனிடையாய் அறைத்துப்பூசி
         குளங்கிணற்றில் ஜலமதனை மொண்டுவந்து
அடைத்திருங்குஞ் சபைதனிலே கவிழ்த்துக்காட்டில்
         அணுவளவு ஜலங்கீழே வீழா தாமே.

கோரோசனை, மத்தக்காசு, கரந்தை வேர், அரசமர வேர் ஆகிய நான்கினையும் சம எடையில் எடுத்து தூய்மை செய்து, அவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டுமாம்.பின்னர் இந்த கலவையை குடத்தின் உட்புறத்தில் நன்றாக பூசி உலர வைக்க வேண்டும் என்கிறார். இந்த கலவை நன்கு காய்ந்த பின்னர் இந்த குடத்தில் நீர் எடுத்து அதனை கவிழ்த்தால் சிறிதளவு நீர் கூட கீழே விழாது என்கிறார் போகர்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

இன்றைய நவீன நீர்மவியலில் (Hydraulics) இம் மாதிரியான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை பயன்படுத்திட முடியுமானால் மனித குலத்துக்கு நல்லதுதானே...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

வரலாற்று சுவடுகள் said...

ஆச்சர்யமான தகவல் தான். இதைத்தான் "சித்த விளையாட்டு" என்பார்களோ ..?

arul said...

nice post

SABARI said...

nice. it makes a bridge between the traditional and modern science. it lets the reseach students to thing ahead.

kaleappan said...

தோழி,

மத்தக்காசு என்றால் என்ன?

நன்றி.

jaisankar jaganathan said...

தண்ணீ கீழே கொட்டினா விழத்தான் செய்யும். ஒன்னும் பண்ண முடியாது. எத்தனை சித்தர் வந்தாலும் புவி ஈர்ப்பு விசை இருக்கும்

kavigee said...

korosanai?

|Eswar〉 said...

@jaisankar, சில சிறப்பு திரவங்களுக்கு புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி நகரும் தன்மையுண்டு, அதற்கான வேறு வேறு விளக்கங்களை விஞ்ஞானிகள் கொடுக்கின்றனர். அது போல், இதுவும் நடக்கலாம், பொருளின் பாகுநிலை இந்நிலையில் மாறி, திடமாகாலாம், அல்லது, கலயத்தின் பரப்போடு, நீரீர்ப்புத் தன்மை அதிகமாகி, ஒட்டிக்கொள்ளலாம். செய்து பார்த்தால் தான் தெரியும் என்றாலும் அறிவியல் பேசும்போதும் கவனித்துத் தான் பேச வேண்டும், ஏனெனில் அறிவியல் ஆய்வாளர்களுக்கே விளங்காத மிக சாதாரண விடயங்களே ஏராளம் இங்கு உண்டு. ஒன்றில் நடந்தால், அதுவே இன்னொன்றிலும் அது நடக்கும் என்பதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. பகுத்தறிவென்பது எந்தவொரு விடயத்தின் மெய்ப்பொருளைக் காண்பது. உங்களின் சந்தேகம் மிக நன்று, இன்னும் இதுபற்றி நிறைய படித்தால்- செய்து பார்த்தால்-உணர்ந்தால், இதற்கானப் பதிலை அறியலாம்.

sse said...

அன்பான தோழி,
பதிவுகள் மிகவும் அருமை.
ஹரி

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அற்புதம் - ஆனால் அரசமர வேர் தவிர வேறொன்றும் தெரியவில்லை

Unknown said...

siththarakal are considered to reach the ultimate knowledge. They were able to easily control and change the basic properties.very interesting. Particularly the great Bogar the prince of mystics.

tamilvirumbi said...

தோழி ,
நீரின் அடர்த்தியையும் ,புவி ஈர்ப்பு விசையை எதிர்நோக்கும் அளவிற்கு , அந்த கலவையின் தன்மை இருக்குமானால் ,ஆச்சர்யமானது தான் .மிக்க நன்றி .

Prasath G said...

THIS SITE IS VERY USE FULL

Prasath G said...

REALY TODAY IS A GOOD DAY OF MY LIFE FOR JOIN IN SITHARGAL ULAGAM

Ramesh said...

nalla pathivu thozhi....

Post a Comment