வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?

Author: தோழி / Labels: ,


புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது.

பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர்.

அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றர் சித்தர் பெருமக்கள்.

எப்படி சுத்தமாய் வைத்திருப்பது?

எளிய விதிகள்தான், யாரும் கடைபிடிக்கலாம்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.

வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் தனது "ரவிமேகலை" நூலில் "பேதிகல்பம்" என்ற பெயரில் அருளியிருக்கிறார்.

சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே. 

- ரவிமேகலை.

சோற்றுக் கற்றாழை மடல் களில் பெரிதாக உள்ளதாகப் பார்த்து ஐந்து மடல்களைக் கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தினால் வயிறு கழியுமாம். அத்துடன் வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று குற்றங்களும் நீங்கும் என்கிறார்.

இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

arul said...

nice post

tamilvirumbi said...

தோழி ,
வயிறை சுத்தம் செய்ய தாங்கள் கூறிய அருமருந்து மிகவும் அருமை .மிக்க நன்றி .ஆனால் ,தற்காலத்தில் உபவாசம் இருப்பது குறைந்து வருகிறது.
ஏனென்றால் ,நீரழிவு நோயாளிகள் பெருகிவிட்டனர்.

வரலாற்று சுவடுகள் said...

கண்டிப்பாக வயிறை வருடத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யவேண்டும் ..!

Ashwin said...

vallalar advise to take these stomach purifying medicines once in a week !

jaisankar jaganathan said...

வயிற்றை சுத்தம் செய்யனும்னா சோப்பு போட்டு கழுவனும். அது கூட தெரியலை

valli said...

தினமும் ஐந்து மடல்களா? அல்லது முன்று நாட்களுக்கும் ஐந்து மடல்களா? விளக்கவும்.
ஒரு பலம் என்பது எவ்வளவு?

sekar said...

நல்ல பதிவு . நன்றி

panneer selvam said...

அருமை தோழி

தேடல் said...

1 பலம் - 35 கி

La Venkat said...

அருமையான பதிவு தோழி.
தங்கள் மூச்சு கலை பதிவை தொடர வேண்டுகிறேன்.
தோழன்
வெங்கட்

La Venkat said...

அருமையான பதிவு தோழி.
தங்கள் மூச்சு கலை பதிவை தொடர வேண்டுகிறேன்.
தோழன்
வெங்கட்

shema said...

I learnt from Dr.Anbu Ganapathy, Sidha doctor,Chennai from a TV Channel that this is called kumari jayaneer. This kumari jayaneer if added with castor oil and boiled in a mud pot, the moisture will evaporate and only the oil would stay. This oil can be stored for a long time. Whenever necessay, this oil can be added with ground palm sugar which will come to a paste form which can be stored for a week. Everyday night take half tspoon of this paste with a piece of any banana(except hill banana)for easy bowel movement and conditioning of stomach. Thanks

kabilan siva said...

நீங்கள் சொல்லும் அனைத்தும் அற்புதமானது, இதனை நான் செய்து பார்க்க அல்லது ஆய்வு மேற்கொள்ள ஆர்வம இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு சில மூலிகைகள் செடி கொடிகளை என்னால் அறிய முடியவில்லை. எனவே அதில் வரும் மூலிகைகள் செடி கொடிகளை வரைபடத்தை இணைதல் இன்னும் உதவியாக இருக்கும்...!?

kabilan siva said...

நீங்கள் சொல்லும் அனைத்தும் அற்புதமானது, இதனை நான் செய்து பார்க்க அல்லது ஆய்வு மேற்கொள்ள ஆர்வம இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு சில மூலிகைகள் செடி கொடிகளை என்னால் அறிய முடியவில்லை. எனவே அதில் வரும் மூலிகைகள் செடி கொடிகளை வரைபடத்தை இணைதல் இன்னும் உதவியாக இருக்கும்...!?

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

கண்டிப்பாக- மிக எளிய வழிதான். நன்றி தோழி

Narayanan said...

என்னால் கற்றாளை ஏற்பாடு செய்ய முடியவில்லை ,அதனால் Aloe vera juice வாங்கி அதில் 5 மூடி அளவு எடுத்து கடுக்காய் சேர்த்து,10 துளி எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் குடித்தேன் வயிறு கழிந்தது.
என்னுடைய உடல் சூடானது எப்பொழுதும் வியர்க்கும் இதன் பிறகு வியரவை குறைத்து விட்டது கடந்த 4 நாட்களாக

நன்றி தோழி

krishnababuvasudevan said...

Upabasam mattum potathaa

kavinila said...

vaalum siththar neengal vaalththukkal

John Simon C said...

good work ma! keep it up!

Bala Murugan said...

thanks

Sayku Sami said...

thank uu

Chandrasekaran Gopalakrishnan said...

நன்றி நல்ல பதிவு.

ஆர்.இராஜேஸ் / R. Rajesh said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி. சில ஆதி தமிழ் நிறுவை அளவுகள் புழக்கத்தில் இல்லாத வேளையில், அதற்கு ஒப்பான மெட்ரிக் அளவுகளைத் தருவது மிகுந்த பயனாக இருக்கும். உதாரணமாக, ஒரு பலம் எவ்வளவு கிராம் (gram) ஆக கண்டடைய படுகிறது? நன்றி.

ஆர்.இராஜேஸ் / R. Rajesh said...

பயனான பதிவு. ஒரு சில ஆதி தமிழ் நிறுவை அளவுகள் புழக்கத்தில் இல்லாத பட்சத்தில் அதற்கு நிகரான மெட்ரிக் அளவுகளை அறிய தருவது மிகுந்த பயனாக இருக்கும். உதாரணமாக ஒரு பலம் எவ்வளவு கிராம் (gram) ஆக கண்டடைய படுகிறது? நன்றி.

Post a Comment