சித்தர்கள் இராச்சியம்.... அடுத்த கட்டத்தில்!!

Author: தோழி / Labels:


2010, பெஃப்ரவரி மாதம் என்னிடமிருந்த தகவல்களை பதிந்து வைக்க வேண்டி துவக்கப் பட்ட இந்த வலைப் பதிவு, இன்றோடு 654 பதிவுகள், அவற்றில் பதின்மூன்று மின் நூல்கள், 3145 நண்பர்கள் பின் தொடர இதுவரை இருபத்தி எட்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் வாசிக்கப் பட்ட வலைப் பதிவாக வளர்ந்து நிற்கிறது. 

இது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. குருவருளும், தன்னலம் கருதா பல நண்பர்களின் ஆலோசனைகளும், இதற்கு சற்றும் குறைவில்லாத உங்களின தொடர்ச்சியான ஆதரவும்தான் இத்தனை பெரிய வளர்ச்சிக்குக் காரணம். 

இந்த நிலையில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் போது வலைப் பதிவின் பக்கம் வரவோ, பதிவுகளை எழுதிடவோ முடியாத சூழ்நிலையில் இருந்த போது நண்பர்கள் சிலர் சித்தர்கள் இராச்சியம் பதிவின் தகவல்கள தமிழைத் தாண்டிய வெளியில் அறிமுகம் செய்தாலென்ன என்கிற கேள்வியினை முன் வைத்தனர். பதிவின் தகவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவிற்கு எனக்கு மொழியாளுமை இல்லை என்பதால் தயங்கினேன். அதற்கும் தீர்வாக இந்த மொழி பெயர்ப்பின் பொறுப்பினை பதிவரும், நண்பருமான தமிழ் தமிழானவள் அவர்கள் ஏற்றுக் கொள்வதாய் முன் வந்தார்.

நண்பர்களின் ஒத்துழைப்புடன் தமிழ் தமிழானவள் இந்த மொழியாக்கத்தை கடந்த இரண்டு வாரமாய் செய்து வருகிறார். முதல் கட்டமாக அவரால் மொழி மாற்றம் செய்யப் பட்ட சில பதிவுகளை தனியொரு வலைத் தளத்தில் வலையேற்றி இருக்கிறேன். இது தொடர்பான உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன். ஏதேனும் குறையிருப்பின் தயங்காமல் சுட்டிக் காட்டிட வேண்டுகிறேன்.

இந்த முயற்சியில் தன்னுடைய மற்ற பிற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, நாளொன்றுக்கு ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாய் செலவழித்து இந்த மொழி மாற்றத்தை செய்துவருகிற தமிழ் தமிழானவளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் இந்த வாய்ப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் ஆங்கில வலைப் பதிவின் முகவரி

http://www.siththarkal.info/

இந்தப் பதிவினை தமிழறியாத உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது முன்னோர்களின் அருமை பெருமைகளை உலகத்தாரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

27 comments:

வரலாற்று சுவடுகள் said...

அருமையான விஷயம், தமிழறியாத பலருக்கு ஆங்கிலப்பதிவின் மூலம் நம் முன்னோர்கள் அருமை பெருமைகள் எல்லை மற்றும் மொழி தாண்டியும் பயணிக்கும் ..!

வாழ்த்துக்கள் சகோ ..!

LAV said...

You are going to the next level. All the best.
vazhthukkal.
venkat

Nandha gopal said...

உங்களின் உலகளாவிய சிந்தனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.... இந்த முயற்சி நம் தாய் மொழியை சேர்த்து வளர்க்குமாயின் அனேக வரவேற்புகள்......

வாழ்த்துகள்.....

சேலம் தேவா said...

ஆங்கிலமொழி மட்டும் அறிந்தவர்களுக்கும் சித்தர் பெருமக்களை அறிந்து கொள்ள ஒரு நல்ல முயற்றி..!! வாழ்த்துகள் தோழிக்கும்,தமிழ் தமிழானவள் அவர்களுக்கும்...

சாம்ராஜ்ய ப்ரியன் said...

@தமிழ் தமிழானவள் - வாழ்த்துகள் அக்கா :-)

arul said...

superb

My Mobile Studios said...

வணக்கம்

உங்கள் புது தொண்டு வளர வாழுதுகள்

சித்தர்கள் தொலைகாட்சி வர வேண்டுகேரன்.

நன்றி

kimu said...

vazhthukkal thozi :)

நீச்சல்காரன் said...

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். விரும்பினால் சித்தர்கள் பற்றிய தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து, அரிய தகவல்களை ஆவணப்படுத்தலாம்.

murugan said...

உங்கள் சேவை பெருக இவ்வயகம்....வாழ்துக்கள்! சித்தர்களின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு....குருவே சரணம் !

S.Puvi said...

உங்கள் முயற்சி மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள். தமிழானவள் அவர்களுக்கும் எனது வாழத்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

sekar said...

வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடறுட்டும்

vasanthy said...

தங்களின் தமிழ் தொண்டுக்கு என்றும் இறைவன் அருள் புரிய வாழ்த்துகள்!

vasanthy said...

தங்களின் தமிழ் தொண்டுக்கு என்றும் இறைவன் அருள் புரிய வாழ்த்துகள்!

jayakrishna said...

super and good news.....
vazhthukkal Thozi...
and
vazhthukkal Tamilanaval akka.

jayakrishna said...

.

tamilvirumbi said...

அன்புள்ள தோழி ,
தங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.தங்களிடம் ,ஒனேறரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேண்டுகோளை தங்களிடம் வைத்தேன்.தாங்கள் எனது
வேண்டுகோளை அலட்சிய படுத்தி விட்டீர்கள். அது தங்களின் சொந்த விருப்பம்.தங்களின் பதிவினை ,ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் ,தேர்ந்தெடுத்துள்ள "தமிழ்" எனது மனபூர்வமான பாராட்டுக்கள்.மிக்க நன்றி .

BGN said...

அன்பர்களே. எது எப்படி இருந்தாலும் தமிழன் தமது உரிமைகளையும் , உயிர்களையும் நிறையவே நாட்டுக்காகவும் , மற்றவர்களுக்காகவும் இழந்திருக்கிறான்.தமிழ் தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் அகதியாக இருக்கிறான் .இந்த மொழி பெயர்ப்பு சற்றே கவனுத்துடன் செயல் படுத்த பட வேண்டிய ஒன்று.இந்த இணையத்தில் ரசவாதம் , வர்மம் , மருத்துவ குறிப்பு போன்றவை , மேலும் சில அதி முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் உள்ளதாக நான் அறிகிறேன்.நம்மிடம் இருக்க கூடிய ஒரு சில அறிய பொக்கிசங்களை மொழி பெயர்க்கும் பொது கவனமாக இருபது நல்லதே . எப்படி இருப்பினும் தோழி அவர்களே நீங்கள் குரு ஆசியுடன் அவர்கள் வழிகாட்டுதலுடன் செயல் படுவதே திண்ணம்.கருது சொல்ல்வது எளிது.ஒரு செயல் செய்யும் முன்னே அதன் நல்ல மற்றும் தீய விளைவுகளையும் அறிந்து செய்வது நன்மையே.ஆரம்பத்தில் சிந்திக்காமல் சிங்களவனை வளரவிட்ட காரணத்தால் இன்று நம் தாத்தன் பாட்டன் ஆண்ட பூமியில் நம் சகோதர சகோதரிகளை கொள்வதை வேடிக்கை பார்க்கவேண்டிய அவல நிலை.நினைவில் கொள்ளவும் .நாளை முள்ளி வாய்க்கால் படுகொலை நாள் .நாம் வருந்த வேண்டிய , திருந்த வேண்டிய , ஒன்று சேரவேண்டிய நாள். தமிழன் பாரம்பரியமே அனைவரையும் ஒன்றாக பாவிப்பது , ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் , யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகுக்கு நன்மை புகட்டிய நாம் இன்று நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை. வேற்றுமை பார்க்க வேண்டாம் , பாதுகாப்பாக இருபது நம் கடமை , நம் நிலைமை.
தோழி
குரு வழியே ஆதி ஆதி
குரு மொழியே வேதம் வேதம்
குரு விழியே தீபம் தீபம்
குரு பதமே காப்பு காப்பு ..
நம் குரு வழி நடத்துவார்

BGN said...

Tamil tamilanaval avargaluku .umathu mozhi peyarpu parattuku uriyathu.thozhiyidam kalanthu alosithu pinnar sila paguthigalai ithil idam pera siyyavum

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா, 2 வருஷத்துல 3000+ ஃபாலோயர்ஸா? போட்டுத்தாக்குங்க..

ThirumalaiBaabu said...

What a great work " Tamil Tamilanaval". We thank you so much ...

Rajakumaran said...

thanks.

yogi said...

நல்லதோர் முயற்சி. வாழ்த்துக்கள். பெருமைப்படுகிறேன் உன்னை நினைத்து. வாழ்க உன் தொகுப்புகள். வளர்க இத்தலம்

Sivakumar said...

Thanks for sharing. God bless you. I will pray for you and your team.

SACHIN tendulkar said...

உண்மையை சொல்ல வெண்டும்மானால் தமிழ் தெரியாதவர்களால் இதை புரிந்து கொள்ளமுடியாது.
தமிழனுக்கே சிலது புரியல இதில தமிழ் தெரியாதவங்க வேறயா

Kannan SPS said...

all the best

Kannan SPS said...

please provide pdf version of all this

Post a Comment