ஜீவசமாதி - நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels:


தவயோகத்தில் சிறந்த ஞானியர் உலக வாழ்க்கையில் தங்களுடைய கடமைகள் முழுமை அடைந்ததாக கருதிடும் போது மேலான இறை நிலையோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அவர்தம் உடல் இயக்கமும், மன இயக்கமும் நின்று விட்டிருப்பினும், உயிர் மட்டும் உடலை விட்டு பிரியாதிருக்கும். இத்தகைய உயர்நிலை அடைந்த ஞானியரின் உடலுக்குச் செய்திட வேண்டிய சமாதி கிரியைகளை இது வரை பார்த்தோம். 

இதன்படி ஞானியரை குழியில் பத்மாசனத்தில் அமர்த்தி பரிவட்டம் சாற்றி திருவெண்ணீறு, நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப் புற்கள், வில்வ இலைகள், மலர்களைக் கொண்டு குழியை முழுவதுமாய் நிரப்பிட வேண்டும் என பார்த்தோம். எக்காரணம் கொண்டும் மணலைக் கொண்டு மூடக்கூடாது. தரை மட்டம் வருமளவுக்கு மேலே சொன்ன பொருட்களைக் கொண்டு குழியை நிரப்பிய பின்னர், நிறைவாக பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் தந்து நிலத்தின் மேல் மூன்று அடி அகலம், மூன்றடி உயரத்தில் மேடை அமைக்க வேண்டும் என்கிறார் திருமூலர். 

இப்படி அமைக்கப் பட்ட மேடையின் மீது அரச மரக் கன்று அல்லது சிவலிங்கம் ஒன்றினை ஸ்தாபிக்க வேண்டுமாம். இப்போது இது மாதிரியான அமைப்புடைய மேடைகளை பல்வேறு இடங்களில் பார்த்த நினைவு உங்களுக்கு வரலாம். ஆம், அவை எல்லாம் ஞானியரின் ஜீவசமாதிகளே, காலப் போக்கில் அவை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சென்றடையாமல் கைவிடப் பட்ட நிலையில் இருக்கின்றன.

திருமூலர் தான் அருளிய வழியில் முறையாக அமைக்கப் பட்ட ஜீவசமாதி உள்ள இடத்தில் அந்த ஞானியரின் எண்ண ஆற்றல்கள் அவரின் உடலை விட்டுப் பிரியாது அவ்விடத்தே சூட்சுமமாய் நிறைந்திருக்குமாம். மேலும் அந்த இடத்திற்கு வருவோரையும், வழிபடுவோரையும் ஞானியரின் எண்ண ஆற்றல் வழி நடத்தும் என உறுதி கூறுகின்கிறார்.

நண்பர்களே!, இத்தனை புனிதம் வாய்ந்த ஜீவ சமாதிகள் நமது நாட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றின் மகத்துவத்தை உணராதவர்களாகவே நாம் இருக்கிறோம். இத்தகைய தவசீலர்களை வணங்குவதன் மூலம் அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும். தொடர்ந்து இந்த ஜீவ சமாதிகளை வணங்கி வந்தால் நாடு வளம் பெறுவதுடன், நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும்.

இத்துடன் ஜீவசமாதி பற்றிய இந்த குறுந்தொடர் நிறைவு பெறுகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

arul said...

nice ending

சித்தன் said...

தோழிக்கு ஒரு சின்ன வேண்டுகோள்: எந்த எந்த இடத்தில் எந்த எந்த ஞானியாரின் ஜீவசமாதி அமைந்திருகிறது என்று ஒரு பதிவில் வெளியிட்டால் அனைவரும் அறிந்துகொள்ளலாம். நன்றி

வரலாற்று சுவடுகள் said...

ஜீவசமாதியை பற்றி நிறைய தங்களது தொடர் பதிவில் நிறைய தெரிந்துகொண்டேன் சகோதரி.., பகிர்வுக்கு மிக்க நன்றி ..!

சம்பூகன் said...

தோழி இது போன்ற
ஜீவ சமாதிகள் இருக்கும்
தலங்கள் சிலவற்றை கூறினால் நன்றாக இருக்கும்.

panneer selvam said...

அருமை

நன்றி தோழி

Sivananthan said...

வள்ளலாரின் போதனைகளை செவி வழியாக கேட்டு அறிந்தவன்.எனக்கு பாடல்களை படிப்பதைவிட உரைநடை நூல்களை படிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில் தமிழறிஞர் மறைமலைஅடிகள் அவர்களது நூல்களில் சிலவற்றை படித்துள்ளேன். அதி, ஒரு நூலில் அவர் கூறுகிறார்" தீவிரமான எண்ண அலைகள் அந்த இடங்களிலியே மிதந்து கொண்டே இருக்கும்." அவ்வாறே ஜீவா சமாதி அடைந்த ஞானியர்களின் சமாதியில் நாம் இருக்கும் பொது நமக்கு அதிர்வுகள் கிடைக்கும். அவ்வாறே வள்ளலார் பலிகேட்கும் தெய்வங்களை கண்ட போதெல்லாம் நடுங்கினேன் என்று கூறுகிறார்.ஆக பாசிட்டிவான அலைகளும் நெகட்டிவான அலைகளும் அந்த அந்த இடங்களுக்கு ஏற்ப வியாபித்திருக்கும் என அறிந்துகொண்டேன். அன்றிலிருந்து பலியிடும் இடங்களை தாண்டி செல்லும்போது எனது எண்ணத்தை வேறு விசயங்களில் செலுத்தியவாறே அந்த இடங்களை கடந்து விடுவேன்.

Sivananthan said...

இந்தியாவில்,திருநெல்வேலியில் ஆங்கிலேயர் காலத்தில் கொத்தவால் பொறுப்பில் இருந்தவர் சங்கரப்ப நாய்டு என்பவர்.அவருக்கு வாரிசு இல்லை. அதனால் அவரது சகோதரர் மகனை தத்து எடுத்து வளர்த்தார். அவர் சொத்துக்களை தானம் செய்துவிட்டு ஆன்மீக பணிகளில் இறங்கி விட்டார். அவர்தான் சத்குரு சுப்பராயகுரு சுவாமிகள்.அவர் பல ஊர்களில் ஆன்மீக பணிகள் செய்துவிட்டு , திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குருச்சி ஊரில், ஆன்மீக பணிகளில் நிலை கொண்டு விட்டார். அங்கு நீண்டகாலமாக ஆன்மீக பணிகள் பல செய்து ஜீவசமாதி ஆனவர் சத்குரு சுப்பராயகுரு சுவாமிகள். சுவாமிகள் ஜீவ சமாதி ஆன இடம் கல்லிடைக்குருச்சி குமாரர் கோவில் வளாகம்.இவர் ஜீவசமாதி ஆனவுடன், அடக்கம் செய்த பிறகு அங்கு உள்ள சைவ பிள்ளை வகுப்பை சேர்ந்த தாசில்தார், சுவாமிகள் உடலை பெயர்த்து எடுத்து அம்பாசமுத்திரம் என்ற அடுத்த ஊரில் தாம்பிரபரணி நதிக்கரையில் அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்துவிட்டார்.அதற்க்கு பிறகு சுவாமிகள் குருபூஜையை சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர்கள்தான் வருடா வருடம் செய்து வந்தார்கள். பின்னர் சுவாமிகளின் மகன் வயதுக்கு வந்த பின்னர் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டனர்.இதில் குமாரர்கொவிலும் மேன்மை அடையவில்லை.சுவாமிகளின் சமாதியும் பிரசித்தி ஆகவில்லை. இப்போது கேள்வி என்னவென்றால் ஸ்வாமிகள் ஜீவசமாதி அடைந்து அடக்கம் செயத் இடத்தில் எண்ண அலைகள் இருக்குமா? அல்லது மறுபடியும் அடக்கம் செய்த இடத்தில் எண்ண அலைகள் இருக்குமா? ஆனால் எங்களுக்கு அதிர்வுகள் கிடைத்த வண்ணம் உள்ளது.ஸ்வாமிகள் சமாதி ஆகி 140 வருடங்கள் ஆகிவிட்டது.
தோழிக்கு வாய்ப்பு கிடைக்குமானால் தெளிவு படுயத்துங்கள்.

S.Puvi said...

நன்றி தோழி.
உய்கள் பகிர்வுகள் தொடர என்வாழ்த்துக்கள்.

ஆனைக்குட்டி சித்தரின் ஜீவசமாதி இலங்கையின் கிழக்கே காரை தீவு நகரில் உள்ளது. ஆர்வமுள்ள - அதிஸ்டமுள்ள நண்பர்கள் இங்கு சென்று தரிசிக்கலாம். பூரணை திதியில் இங்கு விசேட பூசைகள் இடம்பெறும்.

k balachandar said...

nantri nalla thagaval.

தமிழன் அனந்தபத்மநாபன் கந்தசாமி said...

Thozhi intha web site il ulla tamil mozhi font type ena vendru theriya villai... naan ithill ulla vatrai download seithu padika virumbukiren ... uthavungal please...

Saravanakumar.B said...

கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய

http://spiritualcbe.blogspot.in

Post a Comment