ஆன்மீகம் என்பது.....!!

Author: தோழி / Labels:

ஆன்மீகம், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள், ஆளுக்கொரு அர்த்தங்களை பிடித்துக் கொண்டு தங்களுடைய மதம்தான் உயர்வானது என்று நிரூபிக்க வேண்டி என்னவெல்லாம் சொல்கிறார்கள், செய்கிறார்கள். கொஞ்சம் அழுத்தமாய் யோசித்தால் இத்தகைய மதங்களினால் சமூக நல்லிணக்கம் என்பது எங்காவது சாத்தியமாகி இருக்கிறதா? இதற்கு என்னதான் தீர்வு? வாருங்கள் இன்று இதைப் பற்றி கொஞ்சம் பேசித் தீர்ப்போம்.

அண்ட பெருவெடிப்பில் துவங்கிய இந்த பூமியில் ஒரு செல் உயிரியாக ஜனித்து இன்று மனிதனாய் வளர்ந்திருப்பதாக அறிவியல் சொல்கிறது. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் அறிவியலார் சொல்லும் சாத்தியங்களை ஏற்றுக் கொள்கிற மன நிலைக்கு அநேகமாய் நம்மில் அனைவரும் வந்து விட்டோம். ஆக ஆதியில் இருந்து இன்றைய நிலை வரை நம்மை வார்த்தெடுத்தது எது? 

அதுதான் காலம். ஆம், கால பரிமாணத்தில் உருவானதுதான் இந்த பூமியும் அதில் வசிக்கும் அத்தனை உயிரினங்களும். இந்த காலத்திற்கு கடவுள் வேஷம் போட்டால் எப்படி இருக்கும். ஆனால் யாரும் அப்படி காலத்துக்கு கடவுள் வேஷம் போட்டதாக தெரியவில்லை. நம்மை போலவே கையும் காலும் உள்ள பிம்பங்களை உருவகித்து அதற்கு மகா சக்தியை கொடுத்து அதற்காக நம்முடைய காலத்தை கரைத்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே, நாம் பார்க்கப் போகிற ஆன்மீகம் என்பது மிக நிச்சயமாக மதத்தின் அடையாளம் இல்லை. அது நம் மனதின் அடையாளம். இதை தெளிவாக உணராமல் போனதால்தான் ஆளுக்கொரு மதச்சாயத்தை அப்பிக் கொண்டு நிற்கிறோம். சர்வ நிச்சயமாக மதச் சின்னங்களை உடம்பெல்லாம் அணிந்து கொண்டும், மத நூல்களை படித்துக் கொண்டும், அதன் விதிகளுக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு வாழ்வதல்ல ஆன்மீகம்.

எது நம்மை இயக்குகிறதோ அது எதுவென தேடி அறிவதே ஆன்மீகம். இது ஒரு வகையான அறிவு சார்ந்த தேடல். ஆன்மீகம் என்பது நமது அறிவின் ஓர் இயல்... ஆம்!, அறிவியலேதான். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நிரூபிக்கப் படாத எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதே இல்லை.

ஆக, எது நம்மை இயக்குகிறது? கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பார்ப்போமே!, இரண்டு பேரின் அன்புதான் நம்மை உயிர்விக்கிறது, அவர்களின் அன்பும், அக்கறையும் நம்மை வளர்த்தெடுக்கிறது. அனுபவம் நம்மை செதுக்குகிறது, அறிவைத் தருகிறது. கருணை நம்மை உயர்த்துகிறது. ஆசையோ நம்மை உந்துகிறது. பெருகிய ஆசைதான் பொறாமையை தருகிறது. பொறாமை நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது. பெருகிய ஆசையும், பொறாமையும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.

ஒரு வாழ்நாளை இயக்குவது இவைதான். இந்த சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுதான் மனிதம். இதில் நம்மை எது உயர்த்தும் எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான் நாம் தேடும் ஆன்மீகம். இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கிறது. நாம்தான் இந்த கருத்துக்களை மறந்து விட்டு மதம் சொல்லும் கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொய்யான ஒன்றின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.

வாழ்க நலமுடன்.

இந்த கட்டுரை கடந்த ஏப்ரல் 22ம் திகதி கொழும்பில் வெளியான "ஓம்கார சாதனா 2012" என்கிற இதழில் வெளியான எனது கட்டுரை. பதிவுலக நண்பர்களுக்காக அதனை இங்கே பகிர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

25 comments:

வரலாற்று சுவடுகள் said...

அருமையான கருத்துகள் ..!

சம்பூகன் said...

Vazhthukkal
ungaluku. . .
Nandrigal
iraivanukku. . . .

சம்பூகன் said...

Vazhthukkal
ungalukku. . .
Nandrigal
irai arulukku . . .

ThirumalaiBaabu said...

மிக எளிதான , தெளிவான விளக்கம் . மிக்க நன்றி .
தனது பணியை மீண்டும் செவ்வணே தொடர இந்த ஆத்மாவின் வாழ்த்துக்கள் .

LAV said...

அன்புள்ள தோழி,

முழு ஆரோக்கியததுட்தன் திரும்பியது மிக சந்தோசம்.

தோழன்
வெங்கட்

GV said...

Welcome back, dear Friend. Great things are always very simple like the one you explained here

panneer selvam said...

அருமை

Inquiring Mind said...

அதிகம் படித்தவர்களுக்கும், அதிகம் யோசிப்பவர்களுக்கும் அடிக்கடி இப்படி புத்தி குழம்பி விடுவதுண்டு.. யதார்த்தத்தை விட்டு வெகுதூரம் சென்று விடுவார்கள்..

சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் இருப்பார்கள்.. ஆசையில் உந்தி, செல்வம் தேடுபவர்களும் வேண்டும்.. ஆசையை வென்று ஞானத்தை தேடுபவர்களும் வேண்டும்.. இந்த உலகம் என்பது எப்பொழுதுமே நல்லதும் கெட்டதும் கலந்தேதான் இருக்கும்.. இந்த நிதர்சனத்தை உங்கள் கட்டுரை பிரதிபலிக்கவிலல்லை.. மதத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பைத்தான் காட்டுகிறது..

மேற்கத்திய ரிலிஜியன் என்பதும், கிழக்கத்திய பக்தி சார்ந்த மதங்களும் முற்றிலும் வேறு.. எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்ப்பது உங்கள் தவறு..

சைவம், வைணவம் என்பது பல பாதைகளில் ஒன்று.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணிக்கிறார்கள்.. அவ்வளவுதான்.. எதற்கு அவர்களை ஒரு கீழ்மட்ட நிலையில் வைத்து பார்க்கும் வழக்கம்?

thamarai said...

welcome thozhi
vaazhithukkal & vanakkamgal
udal nalam anatharkku iraivanukku nanrigal

Jayachandran said...

Welcome back my friend..

kimu said...

"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்"

- கவிஞர் - கண்ணதாசன் - அருமையான பாடல் வரிகள்....

"உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்"

உண்மையான வரிகள் - தோழிக்கு பொருந்தும்.

சித்தர்களின் இராச்சியத்தில் நாம் அறியாத பல உண்மை தகவல்களை

பதிவு செய்துள்ளார். அதனால் பல நன்மைகளும் பதிவை படித்து

பின்பற்றுபவர்களுக்கு நடந்துகொண்டு இருக்கிறது.

தோழியின் வார்த்தையிலும் / வரிகளிலும் நாம் மயங்கியுள்ளோம்

அவர் அன்பு நன்றி கருணை கொண்ட மனித உருவில் தெய்வம்!!!

SRIRAM said...

THOZHIKKU -- ANBUDAN ASHIRVATHANGAL THANGAL SEVAI TAMIL KOORUM NALLULAHATHIRKKU MELUM MELUM THEVAI.

ANBUDAN,
S.MANIVANNAN

SRIRAM said...

ANBULLA THOZHIKKU,
ANBUM ARANUM UDAITHAIYIN ILVAZKAIKKU ENDRU THIRUVALLUVARIN VAKKUKETRATHU POL AMAINTHURIKIRATHU INTHA KATTURAI,Ungalukku IRAIVAN anbum ,asiyum vazangattum neengal needulivazkaha valamudan seerum sirappumaga tamil koorum nallulagirkku thangalin sevai thevai.
Endrum Anbudan,
S.Manivannan

Unknown said...

எந்த கருத்தையும் புரிந்து கொள்ள முயலும் பொது விமர்சனங்களும் சந்தேகங்களும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது, அந்த வகையில்
இந்த சிவவாக்கியரின் பாடல் சொல்லும் கருத்தையும் இந்த அன்பு, கருணை, ஆசை, அக்கறை, அனுபவம் சொல்லும் வாழ்வியல் கருத்தையும் ஒரே கோட்டில் இணைக்க முடியவில்லை.

உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானுமல்ல
உரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரே

Nandha said...

Nice to c u blogging again..

Unknown said...

madham pidithavargalukku nalla marundhu

gurumurthy said...

Dear friend,
please continue "மூச்சு கலை"

gurumurthy k,
chennai

vasanthy said...

அன்பின் தோழி உங்கள் பதிவுகள் தொடர எனது வாழ்த்துக்களும் கூட

மேழும் தியானம் பற்றிய ஆக்கங்களும் தொடர்ந்தால்
நன்று!

சித்தன் said...

ஆன்மீக வழிகாட்டுக்கு புத்தரின் போதனைகளும், சிந்தனைகளும் ஒரு உதாரணம்

Sivananthan said...

Inquiring Mind அன்பரின் கருத்துகளுக்கு எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.
யதார்த்தைவிட்டு வெகுதூரத்திற்கு சென்று விடுவார்கள் என்று கூறியது மிக சரியானதுதான். எப்படி? நமது முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிமுகப்படுத்தி வளர்த்து எடுத்துவரும் வேளையில், பால பருவத்தில் இருந்தே வார்த்து எடுக்க வழிமுறையை செய்து கொடுத்து வழிகாட்டினார்கள். அனைத்தும் ஒரு உயர்வான நிலையை அடைந்துவிட காட்டிய வழிமுறைகள். ஆனால் பிற்காலத்தில் தொழில் முறை ஆன்மீகவாதிகள் தலைஎடுத்தவுடன் நோக்கம் நிறைவேற வழிவிடாமல் தங்களையே சார்ந்து இருக்கும் மத கோட்பாடுகளை ஏற்படுத்தி மதத்திற்கு அடிமையாக்கி விட்டார்கள். நமது வடலூர் வள்ளலாரை பாருங்கள். அவரது ஆரம்ப காலத்து ஆன்மீக வாழ்க்கையில் விக்கிரக ஆராதனை செய்து வந்தார்கள். பூஜைகள் பல செய்து வந்தார்கள். அவரது ஆன்மீக வளர்ச்சியில் மேலோங்கி வரும்வேளையில் அவருக்கு தியானம் செய்ய விக்கிரகம் தேவைப்படவில்லை. மத நடவடிக்கைகள் தேவைப்படவில்லை.நினத்த இடத்தில் நினத்த வேளையில் தியானிக்க ஆரம்பித்துவிட்டார். அதுதான் வளர்ச்சி. பின்னர் வள்ளலாரே மதங்கள் அனைத்தும் பொய் என்று கூறிவிட்டார். அதனால் ஆன்மீக தமிழ் மேதைகள் (அதில் ஆறுமுகநாவலரும் உண்டு என நினைவு.) நீதிமன்றத்தில் வள்ளலாரின் திருவருட்பாவை மருட்பாவென வழக்கு தொடுத்தனர். வள்ளலாரின் பாடல்களில் ஆபாசம் உள்ளதாக வேறு குற்றம் சாட்டினர். இந்த மேதைகள் அருணகிரியார் பாடல்களை மிக மெச்சி பாடுவார்கள். அருணகிரியார் பாடல்களில் எத்தகைய ஆபாசம் உள்ளது என்பது ஆழமாக படித்தவர்களுக்கு தெரியும். நீதிமன்றத்தில் வழக்கு தோற்றுப் போய்விட்டது. வள்ளலாரின் பாடல்கள் திருவருட்பாதான் என தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள். ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் வள்ளலாரின் போதனைகள் மதவாதிகளுக்கு மரண அடியாக விழுந்தது. ஆறுமாத குழந்தை நடை பயிலும்பொழுது நடைவண்டி தேவைப்பட்டது. நடக்க ஆரம்பித்தவுடன் நடைவண்டி துணையின்றி நடந்துவிடும்.அதே போன்று புதிய நபர் ஒரு ஊரை தேடி செல்கையில் ரோடு ஓரம் உள்ள கைகாட்டி மரம் பார்த்து வழி தெரிந்து அவர் போக வேண்டிய ஊருக்கு சென்று விடுகிறார். அதற்குப் பின் ஓரிரு தடவை அந்த கைகாட்டி மரம் அவருக்கு தேவைப்பட்டது. அதற்குப்பின் கைகாட்டிமரம் உதவி இல்லாமலேயே அந்த ஊருக்கு சென்று விடுகிறார். இதுதான் வளர்ச்சி. இதை விட்டுவிட்டு, அந்த கைகாட்டி மரத்திர்க்கு மாலையிட்டு பொட்டு வைத்து வணங்கிக் கொண்டே இருந்தால் நாம் எண்ண நினைப்போம்? ஆன்மீகவாதிகள் - மதவாதிகளாக மாறி- ஆன்மீகத்தை தொழில் முறையாக மாற்றி விட்டதால்தான் நாத்திகம் (தவறு.நாத்திகம் கூட பரவாயில்லை.இன்று அராஜகம் வளர்ந்துவிட்டது) வளர்ந்துவிட்டது
இன்னும் நிறைய உள்ளது. எழுத இடம் போதாது. தோழி கூறியுள்ள விஷயங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டது..இந்த விஷயங்கள் ஆரம்ப சாதகர்களுக்கானது அல்ல.

Mathivanan Ramachandran said...

I haven't expected one of the rarest sites like this in Tamil. Congrats thozhi!

visit: www.mindsbuilding.com

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் பதிவு மத வெறியர்களுக்கு ஒரு சாட்டை அடி போல் உள்ளது.தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே .தாங்கள் தங்களின் சிந்தனையை சுய முன்னேற்றம்
கட்டுரைகளை பதிவதில் செயல்படுத்துங்கள்.இன்றைய தமிழ் சமுதாயத்தில் ,தன்னம்பிக்கை குறைவாக காணப்படுகிறது.மிக்க நன்றி.

THIRUMAL said...

uyaramaha valara ethum marunthu erunthal sollungal

parhti zplus said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

visit : http://www.valaitamil.com/spiritual

Rupan com said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-2.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment