மூச்சுக்கலை - பத்து வகையான காற்று!

Author: தோழி / Labels:


அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நமது உடலில் பத்து விதமான வாயுக்களாய் பிரிந்து நின்று, உடலின் செயல்பாடுகளில் பங்களிப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றின் செயல்பாட்டில் குறைபாடு உண்டானாலும் உடலின் ஆரோக்கியம் கெடும்.

அவை பற்றி சுருக்கமாய் இன்றைய பதிவில் காண்போம்.

பிராணன்

மூலாதாரத்தில் சேர்ந்து, இதயத்தில் நின்று மூக்கின் வழியே சென்று திரும்பி வரும் காற்று பிராணன் எனப்படுகிறது. இது மேல் நோக்கி இயங்கக் கூடியது. மற்ற ஒன்பது வகை காற்றுக்கும் ஆதார காற்று இதுதான்.

அபானன்

இது குதத்தை பற்றி நின்று நமது உடலின் கழிவுகளான மலம்,சிறு நீரை வெளியே தள்ளுகிறது. இது கீழ்நோக்கி இயங்கும் தன்மை உடையது.

வியானன்

நரம்புகளின் ஊடே நின்று உணர்வுகளை கடத்தும் வாயு வியானன் எனப்படுகிறது. மூளையின் கட்டளைகளை உறுப்புகளுக்கும், உணர்வுகளை மூளைக்கும் கொண்டு செல்லும் வாயு இது. இதனை தொழில் காற்று என்றும் கூறுவர்.

உதானன்

நமது நாபிக்கமலத்தில் நின்று, குரல் நான்களை அதிரச் செய்வதன் மூலம் ஒலியை எழுப்பும் காற்று உதானன் எனப்படும்.

சமானன்

நாம் உண்ணும் உனவினை ஜீரணித்து அதில் இருக்கும் சத்துக்களை பிரித்து இரத்தத்திற்கும்,உறுப்புகளுக்கும் தரும் காற்று சமானன் எனப்படும். இதற்கு நிரவல் காற்று என்றொரு பெயரும் உண்டு.

நாகன்

இது நமது உடலில் சேர்ந்த நச்சு உணவை புரட்டி வாய் வழியே வெளியே தள்ளும் காற்று இது. குமட்டல், வாந்தி போன்றவைகளை உருவாக்கிடும் காற்று நாகன் எனப்படுகிறது.

கூர்மன்

இது கண்ணில் நின்று அதன் இயக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு துணை புரியும் காற்று. 

கிரிதரன்

இது நமது உடலில் நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள், தூசி, துரும்பு, மாசு போன்றவைகளை உடம்பில் நுழைய விடாமல் தடுக்கும் காற்று. இதற்கு தும்மல் காற்று என்று பெயர்.

தேவதத்தன்

மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைதல்,அல்லது இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைதல், அல்லது நுரையீரலில் புழங்கிடும் காற்றின் அளவு குறைதல், உடல் உறக்க நிலைக்கு தயாராகும் போது ஏற்படும் காற்று இது. கொட்டாவி, விக்கல் போன்றவை தோன்ற இந்த காற்றே காரணமாகிறது.

தனஞ்செயன்

மேலே சொன்ன ஒன்பது காற்றுகளும் நமது உடலில் இருந்து வெளியேறிய பின்னர் செயல்படும் காற்று இது. நமது உடலில் நுண்ணுயிரிகளைத் தூண்டி உடலை அழுகச் செய்து உடல் உப்பி வெடித்து வெளியேறும் என்கின்றனர். இதனை வீங்கல் காற்று என்றும் அழைப்பர்.

இவற்றை முறையே பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியதந்த மேம்படுத்தி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும் என்பதை சுட்டிடவே இந்த தகவலை இன்று பகிர்ந்து கொண்டேன்.

இனி வரும் நாட்களில் இது தொடர்பான எளிய சுவாசப் பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

Bogarseedan said...

miga arumaiyana thagaval.

Mohanraj Muruganandam said...

very thanks for this valuable information.

thanks a lot friend.

Mohanraj.M

arul said...

superb please post more

GV said...

Thank you very much for sharing valuable information

Anonymous said...

அனைவருக்கும் நந்தன வருட (திருவள்ளுவர் ஆண்டு 2043) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

shema said...

Thank you. Waiting to see further posts.

Remanthi said...

மிகவும் அருமை... வாழ்த்துக்கள் :)

Ramesh said...

அவ்ளோ பெரிய அப்பா டாக்கரா நீ.

tamilvirumbi said...

தோழி ,
நமது உடம்பில் உள்ள பத்து விதமான வாயுக்களை ,அவை உடம்பில் இயங்கும் முறைகள் பற்றிய விளக்கம் மிகவும் நேர்த்தியாக இருந்தது .
மிக்க நன்றி .எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

kaleappan said...

அன்பு தோழி வணக்கம்,

அருமையான தகவல்....

மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள்

நன்றி,

Bogarseedan said...

thozhi avargale
ennaku oru iyyam.
Naam unnum unnavu palavaraga pirivathu pola naam suvasikkum kaatrum piriginratha? Enil yeththagaiya pirivu nam udalukku nanmai tharum enru villakinaal mikka payan tharum enru ennugiren.

Bogarseedan said...

thozhi avergale,
oru siru iyyam.
Naam unnum unnavu pirivathu pola utkollum kartrum piriuma? Enil athu evvidham pirithal udallukku nanmai tharum?
Namathu naadigal seeraga eyanguvathai evvaru arivathu?

Bogarseedan said...

thozhi avargale
Naam unnum unavu udallil mmatram adaivathu pol kaatrum 10 vagaiyaga pirigindratha? Enil yethagaiya pirithal nam udalukku yetrathu?

Bogarseedan said...

thozhi avargale
Naam unnum unavu udallil matram adaivathu pol kaatrum 10 vagaiyaga pirigindratha? Enil yethagaiya pirithal nam udalukku yetrathu?

Bogarseedan said...

thozhi avargale
Naam unnum unavu udallil matram adaivathu pol kaatrum 10 vagaiyaga pirigindratha? Enil yethagaiya pirithal nam udalukku yetrathu?

Post a Comment